##~## |
மனசுல எதையும் வெச்சுக்காதீங்க!
கிரிவலம் மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். சமீபத்தில் எதிர் கோஷ்டியினருக்கு அழைப்புவிடுத்த அந்த அமைச்சர், 'பழைய மனஸ்தாபங்களை எல்லாம் மனசுக்குள்ள வெச்சுக்காம தேர்தல் வேலைகளைப் பார்ப்போம்.’ என்று வெள்ளைக் கொடி காட்டினாராம். தொகுதி மாறுவதால் ஏற்பட்ட மனமாற்றம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்! .
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சீக்கிரமே இருக்கு பஞ்சாயத்து!
வேலூரில் மாநகராட்சி சார்பில் சுமார் 100 இடங்களில் ஆழ்துளைக் குழாய்கள் தோண்டப்பட்டன. அந்த ஊர் கதர்ப் புள்ளியின் சொந்தங்கள்தான் மொத்த வேலையையும் ஒப்பந்தம் எடுத்துப் பார்த்தார்கள். ஆனால், குழாயில் தண்ணீருக்கு பதில் காற்றுதான் வருகிறதாம். அதிகாரிகள் தோண்டித் துருவி விசாரித்ததில், தோண்டாமலே கணக்கு காட்டிய விவரம் தெரிந்திருக்கிறது. ஆளும் புள்ளிகளே பஞ்சாயத்தைக் கூட்ட முடிவு செய்து இருக்கிறார்கள்! .
அரை நிர்வாணம்... அரண்டுபோன தலைவர்!
கடலூரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டித்து கடந்த வாரம் எதிர்க் கட்சிகள் பந்த் நடத்தின. அப்போதும், நகராட்சிக்கு காது கேட்காததால், நகர்மன்றக் கூட்டத்தில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள் எதிர்க் கட்சி கவுன்சிலர்கள். விஷயம் கேள்விப்பட்ட நகராட்சித் தலைவர் கூட்டத்தை கேன்சல் செய்துவிட்டு தலைநகரத்துக்குத் தப்பிவிட்டாராம்! .
அரசுத் தரப்பு அடித்த அந்தர் பல்டி!
புதுவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முக்கியப் பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இதில் மாநிலத்தின் முக்கிய அமைச்சர் உடன்பிறப்பு உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்துள்ள நிலையில், அரசுத் தரப்பு சாட்சிகளே அந்தர் பல்டி அடித்துவிட, அமைச்சரைப் பகைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்களாம் காக்கிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism