Published:Updated:

மேற்கு மண்டலம் - ஹாட் பிட்ஸ்

மேற்கு மண்டலம் - ஹாட் பிட்ஸ்

மேற்கு மண்டலம் - ஹாட் பிட்ஸ்

மேற்கு மண்டலம் - ஹாட் பிட்ஸ்

Published:Updated:
##~##
கரன்ஸி கலெக்ஷன்!
ஈரோடு மாவட்டத்தின் இலைக் கட்சியில் உயர்ந்த பதவிகளில் இருக்கும் இரட்டையர்கள் வருகிற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் யார் யாருக்கு ஸீட் கொடுக்கலாம் என்று தலைமை தங்களை வேவு பார்க்கச் சொல்லி இருப்பதாகக் கிளப்பிவிடுகிறார்களாம். இதில் பெரிய அளவில் கரன்ஸி கலெக்ஷனும் நடக்கிறதாம்..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சண்டையைத் தீர்க்க சாயம்!
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு சாதிக் கட்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நிறைய பேர் சமீபத்தில் சேர்ந்தார்களாம். அதில் சிலர் பணத்தை இறைத்து பதவியும் வாங்கிவிட்டார்களாம். ரியல் எஸ்டேட் தொழிலில் அடிக்கடி வரும் பிரச்னைகளை சமாளிக்கவே இந்த அரசியல் சாயமாம்!.
எதற்காக சந்திப்பு?
மேற்கு மண்டலத்தின் ஆவேசக் கட்சிப் பிரமுகர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாட்டில் தங்கி இருக்கும் ஜெயலலிதாவை சந்தித்தாராம். அப்போது சில ஆவணங்களையும் அவரிடம் கொடுத்தாராம். கூட்டணி தொடர்பான ஆவணங்களாகத்தான் அவை இருக்கும் என மாவட்டம் முழுக்க கிசுகிசுக்கிறார்கள். .
கெத்து காட்டும் முத்துப்புள்ளி!
கொங்கு மண்டலத்தில் கட்சி விவரங்களை விசாரிப்பது என்றால் முத்தான புள்ளிக்குத்தான் போன் போடுகிறாராம் துணையானவர். அதை வைத்து, 'இப்பதான் தம்பி பேசினாப்ல...’ என முத்தானவர் ஏக பரபரப்பு காட்டுகிறாராம். இதை தடாலடிப் புள்ளிக்குத் தட்டிவிட்டு அவரை பொருமலில் ஆழ்த்துகிறார்கள் மாவட்டப் புள்ளிகள்.
.வீரமும் பாரமும்!
தலைநகரில் விழா எடுத்து பெரியவரையும் துணையானவரையும் ஒரே நேரத்தில் உள்ளம் குளிர வைத்துவிட்டாராம் இரும்புக் கோட்டையின் வீரப் புள்ளி. விழா முடிவில் துணையானவரிடம் சில நிமிடங்கள் மனம்விட்டுப் பேசியதில், மொத்த பாரமும் சுத்தமாக இறங்கிவிட்டதாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism