. 'வடை போச்சே!’ .ஒரு தடவை எம்.பி-யாகவும், ஒரு முறை எம்.எல்.ஏ-வாகவும் பதவி வகித்த கடலோரப் பிரமுகர் வரும் தேர்தலில் தனது குடும்ப வாரிசைக் களம் இறக்கும் முடிவில் இருக்கிறார். முன்பு மூப்பனார் அணியில் இருந்தவர் இப்போது ப.சிதம்பரம் பக்கம். சமீபத்தில் தனது ஏரியாவுக்கு வந்த ப.சி-க்கு பல லட்சம் செலவில் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். ஆனால், ப.சிதம்பரம் ரூட் மாறிப் போய்விட... 'வடை போச்சே...’ கணக்காக வருத்தத்தில் இருக்கிறார்!.. 'அவர் இதிலுமா தலையிடுறார்?’ .கரூர் மாவட்டத்தில் இன்னமும் மண்ணுளிப் பாம்புக்கு விலை பேசும் கும்பல் தன் வேலையை நிறுத்தவில்லை. இரிடியம், பாம்பு கக்கிய மாணிக்கம் என்று தங்கள் சேவையை நீட்டிக்கொண்டே போகிறார்கள். போலீஸிடம் மாட்டினால் சேலத்துத் தடாலடிப் புள்ளியின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்களாம். 'அவர் இதில் எல்லாம் சம்பந்தப்படுகிறாரா என்ன?’ எனப் புரியாமல் தவிக்கும் போலீஸார் இப்போதைக்கு கப்சிப் காக்கிறார்கள்! .. 'இதுதான் காரணமா?.’ சமீபத்தில் நடந்த அரசியல் பிரமுகர் கொலையில் இலைக் கட்சியின் போதையூர் பிரமுகரை தொடர்புபடுத்தி வெளியான செய்திகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பு வெளியானது. ஆனால், திடீரென ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துவிட்டது கார்டன் தரப்பு. காரணம், புள்ளியைப்பற்றி மிரளவைக்கும் அளவுக்கு கார்டனுக்கு வந்து குவிந்த புகார்கள்தானாம்! . .'மகிழ்ச்சியில் மனம் துள்ளுதே...’ .. கோட்டை ஊரின் மீசைப் புள்ளி ஏக சந்தோஷத்தில் மிதக்கிறார். தனக்குத் தலைவலியாக இருந்தவரின் திடீர் சரிவுதான் மீசையை இந்த அளவுக்கு சந்தோஷத்தில் துள்ளவைத்து இருக்கிறதாம். ஆனாலும், சந்தோஷத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல், மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டுமே சொல்லிச் சொல்லி சிரிக்கிறாராம்!