Published:Updated:

முத்துக்குமார் சிலை.. தடையை உடைத்தது நீதிமன்றம்!

சென்னை மண்டலம்

ஈழத்தமிழர்களுக்காகத் தன் உடலையே தீக்குச்சியாக்கிய கொலுவைநல்லூர் கு.முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள

##~##
சானூரப்பட்டி கிராமத்தில் சிலை வைக்க கடந்த மே மாதம் 16-ம் தேதி தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்தனர். தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி மற்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் முத்துக்குமாரின் சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடாக... தஞ்சை மாவட்ட கலெக்டரோ அதற்கு அனுமதி மறுத்தார். அப்போது தமிழகம் முழுக்க இந்த விவகாரம் பரபரப்பு கிளப்பியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ் தேச பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

''தமிழக வரலாற்றில் தங்களுக்குப் பிடித்த போர் வீரர்களை ஹீரோக்களாகக் கருதி அவர்களுக்கு நடுகல் நாட்டி, போற்றி வழிபடுவது வழக்கம். முத்துக்குமார் சிலை திறப்பு விஷயத்தைப் பொறுத்தமட்டில் அதிகாரிகள் ஒரு சாதாரண விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி உள்ளனர். அதிகாரிகள்

முத்துக்குமார் சிலை.. தடையை உடைத்தது நீதிமன்றம்!

எழுப்பியுள்ள ஆட்சேபனைகள் சட்ட ரீதியானதாக இல்லை. அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தனக்குப் பிடித்த ஒருவரை தியாகியாக்கி, அவர்கள் சொந்த இடத்தில் சிலை வைப்பதைத் தடுக்க முடியாது. பொது இடத்திலோ, புறம்போக்கு இடத்திலோ முத்துக்குமாரின் சிலை வைக்கப்படவில்லை. தனியார் இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு உள்ளது. பொது இடத்தில் வைக்கப்படும் சிலை கள் வெண்கலத்தில் இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், இதுகுறித்து தனியாரிடம் கேள்வி எழுப்ப முடியாது. களி மண்ணா, மரமா, கல்லா, உலோகமா என முடிவு செய்ய மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது. மேலும் முத்துக்குமாரின் சிலையைத் திறக்க எதிர்ப்போ, மிரட்டலோ உள்ளது என கலெக்டர் பதில் மனுவில் தெரிவிக்கவில்லை. எனவே, சிலையைத் திறக்க அனுமதி மறுத்து ஆட்சியாளர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முத்துக்குமாரின் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்!'' என நீதிபதி கே.சந்துரு வழங்கி இருக்கும் தீர்ப்பு தமிழ் ஆர்வலர் களைத் துள்ளியெழ வைத்திருக்கிறது.

தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயளாளர் பெ.மணியரசன், ''ஆட்சியாளர் களின் ஜனநாயக மறுப்புக்கு எதிர்ப்பாக இந்த தீர்ப்புக் கிடைத்து இருக்கிறது. தியாகி முத்துக்குமாருக்கு தனியார் இடத்தில், அவரின் முழு சம்மத்தோடு சிலை வைக்க அனுமதி கேட்டபோது அதிகாரிகள் தேவையற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுத்தனர். போலி

முத்துக்குமார் சிலை.. தடையை உடைத்தது நீதிமன்றம்!

அரசியல்வாதிகளின் தமிழர் மீதான துரோகங்களைப் பட்டியலிட்டு இறந்து போனவன் முத்துக்குமார். அதனால்தான் எந்த வடிவிலும் தமிழகத்தில் முத்துக்குமார் இருப்பதை ஏற்க அரசுத் தரப்பு மறுக் கிறது. தமிழ் இன உணர்வு வளர்ந்து விடக்கூடாது என்பதில் ஆளும் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. மொழிக்காக, இனத்துக்காகப் போராடியவர்களைப் புறக்கணிப்பது தி.மு.க-வுக்கு வாடிக்கையான விஷயம்தான். இந்தி எதிர்ப்பில்தீக்குளித்து உயிர்நீத்த கீழப்பளூர் சின்னச் சாமி உள்ளிட்ட ஏராளமான தியாகிகளுக்கு சிலையோ அல்லது மணிமண்டபமோ அமைக்காத தி.மு.க. தரப்பு, முத்துக்குமாருக்கு சிலை வைப்பதைத் தடுத்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், அரசின் உள்நோக்கத்தை உடைக்கும் விதமாக எங்களுக்குத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மிக விரைவில் சானூரப்பட்டியில் முத்துக்குமார் சிலை திறக்கப்படும். அங்கு மட்டுமல்லாமல், தமிழினத் துரோகிகளின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக தமிழகம் முழுக்க முத்துக்குமார் சிலைகள் அமைக்கப்படும்!' எனச் சொன்னார்.

முத்துக்குமார் சிலை.. தடையை உடைத்தது நீதிமன்றம்!

முத்துக்குமார் சிலைக்காக தனது சொந்த இடத்தைக் கொடுத்திருக்கும் புலவர் இரத்தின.வேலவன், 'தமிழ் இனத்துக்காக உயிரையே கொடுத்தவனின் சிலையை எனது இடத்தில் வைப்பதற்குக்கூட அரசு அனுமதி மறுத்தது. அந்தத் தடையை சட்டரீதியாக உடைத்து இருக்கிறோம். ஃபைபரில் செய்யப்பட்ட மார்பளவு முத்துக்குமாரின் சிலை சீக்கிரமே திறக்கப்படும். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தத் தீர்ப்பு கிடைத்திருப்பது ஆட்சியாளர்களை மிரள வைத்திருக்கும். முத்துக்குமாரின் சிலைகள் மூலமாகவே ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரசாரத்தை பெரிய அளவில் நடத்துவோம்!' என்றார் முழக்கமாக.

முத்துக்குமார் சிலை.. தடையை உடைத்தது நீதிமன்றம்!

தீர்ப்பு குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் சண்முகத்திடம் கேட்டோம். 'முழுமையான தீர்ப்பு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த உடன் மேற்கொண்டு என்ன செய்வது என்பதை முடிவெடுப்போம்!'' என்று மட்டும் சொன்னார்.

படங்கள்: கே.குணசீலன்