Published:Updated:

திருட்டை ஒப்புக்கோ... ஒரு லட்சம் தர்றேன்..!

வில்லிவாக்கம் போலீஸ் பகீர்சென்னை மண்டலம்

திருட்டை ஒப்புக்கோ... ஒரு லட்சம் தர்றேன்..!

வில்லிவாக்கம் போலீஸ் பகீர்சென்னை மண்டலம்

Published:Updated:
##~##
ஜெயலலிதாவோ... கருணாநிதியோ... ஆள்பவர் யாராக இருந்தாலும் அவ்வப்போது சொல்லும் வார்த்தை, 'தமிழகக் காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.’ என்பதுதான். ஆனால், தமிழகத் தின் காவல் நிலையங்கள் எந்த லட்சணத்தில் செயல்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சோறு பதம்!

 சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் ஜிப்ரில். வீதி வீதியாக மூன்று சக்கர சைக் கிளில் பிஸ்கெட் விற்று கஷ்ட ஜீவனத்தில் குடும்பம் நடத்தி வருகிறார். ஆனால், விதி வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷன் உருவில் வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை ஜிப்ரில். இவர், ஒரு சிறுவனை உதவிக்காக தன்னுடன் வைத்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் சிட்கோ நகர் பகுதியில் வியாபாரத்துக்கு சென்றபோது, அங்கு ஒரு வீட்டில் அந்த சிறுவன் தன் கண்ணில் பட்ட செல்போனை எடுத்துவிட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருட்டை ஒப்புக்கோ... ஒரு லட்சம் தர்றேன்..!

ஜிப்ரிலுக்கு இந்த விஷயம் தெரியாது. இந்த விவகாரம் வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. அதன் பின்பு நடந்ததை ஜிப்ரில் நம்மிடம் விவரித்தார். ''ரெண்டு போலீஸ்காரங்க என்னையும், அந்த சிறுவனையும் வில்லிவாக்கம் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. கூடவே, அந்த

திருட்டை ஒப்புக்கோ... ஒரு லட்சம் தர்றேன்..!

செல்போன் உரிமையாளரும் வந்தார். அந்த சின்னப் பையனை தனியா ஒரு ரூமுக்கு கூட்டிட்டுப் போன போலீஸ்காரங்க, 'ஜிப்ரில்தான் திருடி னான்னு சொன்னாதான், உன்னை வெளியே விடுவோம்’னு மிரட்டி இருக்காங்க. செல்போன் உரிமையாளரும், 'சின்னப் பையன் ஏதோ தெரியாமத் திருடிட்டான். ஜிப்ரிலும் என்கிட்ட மன்னிப்பு கேட்டார். கேஸ் எதுவும் வேண்டாம். விட்டுருங்க.’ என்று சொல்லிவிட்டார். ஆனா, க்ரைம் பிராஞ்ச் இன்ஸ் பெக்டர் அவரை மிரட்டி என் பேரைச் சேர்த்து புகார் வாங்கிட்டு அனுப்பிட்டார். அந்த சின்னப் பையனையும் அனுப்பிட்டாங்க.

போலீஸ்காரங்க என்கிட்ட, 'செல்போன் எடுத்தது நீதான். அது மட்டும் இல்லாம, இன்னொரு இடத்தில் 40 பவுன் நகையும், ரெண்டு லட்சம் ரூபாயும் திருடி இருக்கிறே. மரியாதையா உண்மையை ஒப்புக்கோ’ன்னு என்னைக் கண்டபடி அடிக்க ஆரம்பிச்சாங்க. வலி தாங்காம நான் மயங்கிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு அங்க வந்த ஒரு இன்ஸ்பெக்டர், 'டேய் மூணு மாசமா ஆளே கிடைக்கலை. நாங்க படாத பாடுபடுறோம். ரெண்டு திருட்டு கேஸை ஒப்புக்கோ. உனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் தர்றேன்... ஜாமீன்லயும் வெளியே எடுத்துடுறேன்.’னு சொன்னாரு.  'சார் நாங்க வறுமையில் இருந்தாலும், கௌரவமாக வாழ்ந்துட்டு வர்றோம். இதை எல்லாம் கேள்விப்பட்டா, எங்க அம்மா தூக்குல தொங்கிடு வாங்க. தயவு செஞ்சு என்னை விட்டுருங்க சார்’னு அவர் காலைப் பிடிச்சுட்டுக் கதறி அழுதேன். அதுக்கும் போலீஸ்காரங்க இறங்கி வரலை.

மறுநாள் என்னை அண்ணாநகர் கைரேகை லேப்புக்குக் கூட்டிட்டுப் போய் கைரேகையை சோதிச்சாங்க. திரும்பவும் வில்லிவாக்கம் ஸ்டேஷனுக்கு வந்து, 'நீ எந்தத் தப்பும் செய்யலை. வீட்டுக்குப் போலாம். ஆனா, நடந்ததை எங்கயாச்சும் புகார் கொடுத்தீன்னா, கஞ்சா கேஸ் போட்டுத் தூக்கிடுவோம்’னு மிரட்டி அனுப்பிட்டாங்க. இந்த சம்பவத்தால், அக்கம்பக்கத்தில் என்னைத் திருடன் மாதிரி பார்க்குறாங்க. வீட்டுல நிம்மதி போச்சு. தொழிலும் செய்ய முடியலை. மன உளைச்சல் தாங்க முடியலை. இனி என்னை மாதிரி எந்த நிரபராதியும் பாதிக்கப்படக் கூடாது.'' என்று முடித்தார் கண்ணீருடன்!

இந்த சம்பவங்களை அண்ணா நகர் துணை கமிஷனர் பன்னீர் செல்வத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். ''பாதிக்கப்பட்ட ஜிப்ரிலை என்னை வந்து பார்த்து எழுத்துபூர்வமான புகார் ஒன்றை கொடுக்கச் சொல்லுங்கள். வில்லிவாக்கம் போலீஸாரிடம் விசாரித்து, தவறு அவர்கள் மீது இருக்கும்பட்சத்தில் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கிறேன். அந்த தகவலையும் உங்களிடம் சொல்கிறேன்...'' என்றார் உறுதியாக!

அடுத்து  என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism