Published:Updated:

அதகள ஆளும் கட்சி... அடக்கிக் காட்டும் காக்கி!

கிடுகிடுக்கும் கிருஷ்ணகிரிவடக்கு மண்டலம்

##~##
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், தி.மு.க. பிரமுகர் ஒருவர் மீது புகார் கொடுத்தார். உடனே, அந்தப் பிரமுகர் கைது செய்யப்பட்டார். அதே நாளில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஒருவர் கனிம வளத் துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். உடனே அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவேரிப்பட்டினம் ஸ்டேஷனில்தான் இந்த அதிசயம்!

 ஆளும் கட்சியினருக்கு வளைந்து கொடுக்கும் போலீஸாருக்கு மத்தியில் காவேரிப்பட்டினம் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நடுநிலையான சிலரிடம் பேசினோம். ''சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, 'தி.மு.க. ஆட்சிக்கு உலைவைக்க நமது கவுன்சிலர்களே போதும்.’ என்று எச்சரித்தார். ஆனாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆளும் கட்சியினர் அடங்க மறுக்கிறார்கள்.

அதகள ஆளும் கட்சி... அடக்கிக் காட்டும் காக்கி!

சுண்டேகுப்பம் வி.ஏ.ஓ-வாக இருப்பவர் குப்த பிரவர்த்தனன். இந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக தி.மு.க. பிரமுகர் பெருமாள் என்பவர் மண் கடத்தி இருக்கிறார். வி.ஏ.ஓ. பல முறை எச்சரிக்கை விடுத்தும் பெருமாள் அதைக் கண்டுகொள்ளவில்லை. கடந்த வாரம் பெருமாள் டிராக்டரில் மண் கடத்திச் சென்றபோது, வி.ஏ.ஓ. அதைக் கையும் களவுமாகப் பிடித்தார். ஆனாலும், வி.ஏ.ஓ-வைத் திட்டிவிட்டு பெருமாள் வண்டியை வேகமாகக் கிளப்பிச் சென்றார். அடுத்த அரை மணி நேரத்தில் வி.ஏ.ஓ-வின் மொபைல் போனில் மர்ம நபர்கள் பேசி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். கடைசியாக பெருமாளே லைனுக்கு வந்து, ஆபாச வார்த்தைகளைப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்து இருக்கிறார். ஏற்கெனவே, பலர் தன்னை மிரட்டியதால், பெருமாளின் பேச்சைப் பதிவு செய்த வி.ஏ.ஓ., இதை காவேரிப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் ஆதாரத்துடன் புகார் கொடுத்தார். உடனே போலீஸ் பெருமாளைக் கைது செய்தது!'' என்றவர்கள் தொடர்ந்தும் பட்டியல் போட்டார்கள்.

''இதே நாளில் காவிரிப்பட்டினம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருக்கும் மகேந் திரன், கனிம வள

அதகள ஆளும் கட்சி... அடக்கிக் காட்டும் காக்கி!

த் துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

காவேரிப்பட்டினம் அருகே விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் கனிம வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குப் போனார்கள். அங்கு கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை மடக்கிய அதிகாரிகள், லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, ஜீப்பில் பின்தொடர்ந்தார்கள்.

லாரி சிறிது தூரம்தான் போய் இருக்கும். வழியில் மகேந்திரன் சுமார் 30 பேருடன் வந்து லாரியை மறித்து நிறுத்தினார். அதிகாரிகளை ஏக வசனத்தில் அவர் பேச... அவருடன் வந்தவர்கள், அதிகாரிகளின் செல்போன்களைப் பறித்துக்கொண்டார்கள். அப்போது நடந்த தள்ளுமுள்ளில் ஒரு அதிகாரியின் சட்டை கிழிந்துவிட்டது. நொந்துபோன அதிகாரிகள் இது குறித்து காவேரிப்பட்டினம் போலீஸில் புகார் கொடுக்க... போலீஸார் மகேந்திரன் உட்பட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இந்த மாவட்டத்தில் வெளியே தெரியாமல் பல தகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல பகுதிகளில் வருவாய்த் துறையினரும், போலீஸாரும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறார்கள்.'' என்றார்கள் ஆதங்கமாக.

அதகள ஆளும் கட்சி... அடக்கிக் காட்டும் காக்கி!

மகேந்திரனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள், ''இந்த சம்பவத்தில் மகேந்திரனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கட்சியினருக்குப் பிரச்னை என்று அவருக்குத் தகவல் வரவே, கடைசி நேரத்தில் அவர் அங்கு போனார். என்ன, ஏது என்று அவர் விசாரிக்க மட்டுமே செய்தார். அவ்வளவுதான்... ஆனால், போலீஸார் உள்நோக்கத்துடன் திட்டமிட்டே அவர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் கட்சியின் முக்கியப்புள்ளியே சம்பந்தப்பட்டு இருக்கிறார். மகேந்திரனின் வளர்ச்சி பிடிக்காமல், அவர்தான் போலீஸாருக்கு இப்படி ஒரு திட்டத்தைப் போட்டுக்கொடுத்து இருக்கிறார். இதனால், தேவை இல்லாமல் கட்சிக்குத்தான் கெட்ட பெயர்!'' என்றார்கள் அனைத்தையும்மறுத்தவர்களாக!