Published:Updated:

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

மொட்டைக் கடித சர்ச்சை...வடக்கு மண்டலம்

ஒரு மொட்டைக் கடித விவகாரம் விழுப்புரம் மாவட்ட அரசியலையே அனலாகத் தகிக்கவைத்து இருக்கிறது!

##~##
 சங்கராபுரம் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வான அங்கையற்கண்ணிக்கு எதிரான கடிதம் அது. அதன் சுருக்கம் இதுதான்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அங்கையற்கண்ணி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு அவரிடம்  மூன்று ஏக்கர் நிலம், ஒரு மெத்தை வீடு, ஒரு கூரை வீடு, ஒரு டிராக்டர், இரண்டு டூ-வீலர், ஒரு சுமோ கார் இருந்தது. ஆனால், இப்போதைய சொத்து மதிப்பு

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

50 கோடி. அவர் வெற்றி பெற்ற ஒரு வாரத்தில் தொகுதியின் முக்கியஸ்தர்கள் அவரைச் சந்தித்து 300 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை லஞ்சமாகக் கொடுத்தார்கள். (திருமண மொய்ப்பட்டியல் போல, நகை கொடுத்தவர்களின் விவரங்கள்(?) எழுதப்பட்டுள்ளது!) கீரனூர் பஸ் உரிமையாளர் ஒருவர்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

42 ஆயிரம் மதிப்புள்ள நோக்கியா செல்போனும், வீட்டு வசதி சங்கத்தைச் சேர்ந்த ஒருவர்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

32 ஆயிரம் மதிப்புள்ள டி.வி., ஏ.சி-யும் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-வான ஐந்தே மாதங்களில் கள்ளக்குறிச்சி ராஜா நகரில்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

65 லட்சத்துக்கு வீடும், சங்கராபுரம் நகர்ப்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

பகுதியில்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

80 லட்சம் மதிப்பில் ஐந்து கடைகள், 20 சென்ட் நிலமும் அவரது அம்மா பெயரில் வாங்கி னார். ஒன்றியச் செயலாளர் ஒருவர் பெயரில் 20 ஏக்கர் பரப்பளவில்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

2 கோடிக்கு கல் குவாரி, 10 டாரஸ் வண்டி, ஐந்து டிப்பர் லாரி, இரண்டு பொக்லைன்கள், இரண்டு ரோடு ரோலர் பினாமியாக வாங்கினார். திருவண்ணாமலை, நவம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பெயரில் சேத்துப்பட்டு ரோட்டில்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

1 கோடி மதிப்பில் கட்டடம் கட்டி இருக்கிறார்.

தொகுதியில் நடக்கும் அனைத்து ஒப்பந்தப் பணிகளையும் எம்.எல்.ஏ-வின் அப்பா ஆறுமுகமும் அவரது ஆட்களுமே செய்கிறார்கள். இதை எல்லாம் கட்சியினர் தட்டிக்கேட்டால், 'கனிமொழி அக்கா நான் சொல்வதைத்தான் கேட்பார். என்னிடம்

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

40 கோடி பணம் இருக்கிறது. மீண்டும் எனக்குதான் ஸீட். ஓட்டுக்கு ஆயிரம் ஆயிரமாய் அள்ளிக் கொடுத்தாவது ஜெயிப்பேன்.’ என்கிறார். அமைச்சர்கள் நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருடைய  பெயர்களையும் பயன்படுத்தி, கட்சியினர், பொதுமக்களிடம் ஏராளமான பணத்தை வசூல் செய்து இருக்கிறார். இது குறித்து, சங்கராபுரம் தொகுதியில் உள்ள கட்சியின் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட கட்சி உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை விசாரணை நடத்தினால் உண்மைகளை சொல்லத் தயாராக இருக்கிறோம்!'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பல விவரங்களுடன் நீளும் அந்தக் கடிதத்தில், குற்றச்சாட்டு ஒவ்வொன்றிலும் எம்.எல்.ஏ-வுடன் சம்பந்தப்பட்டதாக சில

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

பெயரையும் எழுதி இருக்கிறார்கள். தமிழக முதல்வர் தொடங்கி, முக்கிய அமைச்சர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு இதன் நகல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இது குறித்து அங்கையற்கண்ணியிடமே விளக்கம் கேட்டோம். ''எனக்கு யாரும் நகையோ, வேறுவிதமான சன்மானமோ தரவில்லை. எனக்குக் கிடைப்பது எல்லாம் சால்வைகள் மட்டும்தான். நான் ஒரு பெண் என்பதால் சிலர் புடவைகளை அன்பளிப்பாகத் தருவார்கள். நாங்கள் பரம்பரைப் பணக்காரர்கள். அப்படி இருக்கும்போது எனக்கு சொந்தமாக செல்போன் வாங்கிக்கொள்ள வழி இருக்காதா என்ன? செல்வாக்கான குடும்பத்தில் நான் பிறந்தாலும், திராவிடர் பாரம்பரியத்தில் தீவிர நாட்டம்கொண்ட என் அப்பாவால் மிகவும் எளிமையாகவே வளர்க்கப்பட்டேன். இன்று வரை பெரிதாக தங்க

பட்டையைக் கிளப்பும் அங்கையற்கண்ணி!

நகைகள்கூட அணிந்தது கிடையாது. கார் இருந்தாலும் அதை அரிதாகவே பயன்படுத்துவேன். வெளியே செல்லும்போது பஸ், ஆட்டோவில்தான் செல்கிறேன்.

என் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அந்த மொட்டைக் கடிதத்தில், 'நான் அவரிடம் வாங்கினேன்... இவரிடம் வாங்கினேன்’ என்று எழுதி இருக்கிறார்கள். ஆனால், 'தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. மக்களை சந்திக்கவில்லை.’ என்று ஒரு குறையாவது சொல்ல முடிந்ததா? என் அப்பா ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். அதில்கூட நான் தலையிடுவது இல்லை. அந்தக் கடிதத்தில் இருக்கும் விவரங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அந்தக் கடிதத்தை எழுதியவர் வெளிப்படையாகத் தன் பெயரைப் போட வேண்டியதுதானே... உண்மை இல்லை என்பதால்தான் மொட்டைக் கடிதமாகப் போடுகிறார்கள். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற விவகாரம் போலத்தான் இதுவும். அதில் இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபிக்கச் சொல்லுங்கள்!'' என பதறாமல் விளக்கம் சொன்ன அங்கையற்கண்ணியிடம், ''அந்தக் கடிதத்தை யார் எழுதி இருப்பார்கள்?'' எனக் கேட்டோம்.

''வெற்றுப் பரபரப்புக்காக கடைந்தெடுத்த பொய்களைத் தாங்கிய அந்தக் கடிதத்தை நிச்சயமாக தி.மு.க-வினர் எழுதி இருக்க மாட்டார்கள். இது எதிர்க் கட்சியினரின் சதியாகத்தான் இருக்கும்!'' என்றார் உறுதியாக!

படங்கள்: ஜெ.முருகன்