. கடந்த 2008, அக்டோபர் 2-ம் தேதியன்று அங்காடிகளில் ஏழைகளுக்கான . 50-க்கு 10 பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னையில் தொடங்கிவைத்த நேரத்தில்... 11-வது பொருளாக வீடு கட்ட மண் கேட்டு, மண் குடிசை மாற்றுப் போராட்டத்தை நடத்தினார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்! .
திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக் கும் மேற்பட்ட தலித் பெண்களைத் திரட்டிய கிருஷ்ணம்மாள், திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் ஆரம்பித்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலை நோக்கி 'மண் குடிசைகளை கான்கிரீட் வீடுகள் ஆக்குவோம்!’ என்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி ஊர்வலம் நடத்தினார். 3,000 வீடுகள் கட்டும் தனது திட்டத்துக்கு இலவச மண்

கேட்டுத்தான் போராட்டம். ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றம் வழங்கிய விருதை கருணாநிதியிடம் காட்டச் சென்றபோதும் இந்தக் கோரிக்கையை அவரிடம் சொன்னார் கிருஷ்ணம்மாள்.

தற்போது 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்’ தமிழகம் முழுக்க அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,அந்தத் திட்டம் தொடங்கப்படப் பெரிதாகப் போராடிய கிருஷ்ணம்மாளை சந்தித்தோம்.

''தலைமைச் செயலகத்தில் உள்ள சிலர்கூட, 'உங்களால் தான் இந்தத் திட்டம் வந்திருக்கு’ எனப் பாராட்டினார்கள். உண்மையில், 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்’ என்னால் வந்தது என்று நான் எண்ணவில்லை. முற்றிலும் முதல்வர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட திட்டம். ஆனால், இந்தத் திட்டம் குறித்த அனைத்துக் கூட்டங்களுக்கும் என்னை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அதற்காக அரசுக்கு நன்றி.

எங்கள் முயற்சியால் இது வரை 13 ஆயிரம் தலித் குடும்பங்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் பெற்றுத் தந்துள்ளோம். அவர்கள் அனைவருக்குமே கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பதே என் ஆசை. நிலப்பதிவுக்கு ஒரு ஏக்கருக்கு

10 ஆயிரம் செலவாகும். ஆனால், கட்டணம் பெறாமல் முதல்வர் சென்ற மாதம் 1,500 ஏக்கருக்கு நிலப்பதிவு செய்து தந்தார். இன்னும் 5,000 ஏக்கருக்கு செய்து தர உறுதி அளித்துள்ளார். முதல் கட்டமாக

2 லட்சம் மதிப்பில் 100 தலித் குடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் கட்டித் தரத் திட்ட மிட்டு உள்ளோம்.

ஓபஸ் மற்றும் மாற்று நோபல் பரிசு மூலம் கிடைத்த

80 லட்சத்தையும் இந்தத் திட்டத்துக்கே செலவிட உள்ளேன். மீதிப் பணத்தை வெளியில் இருந்து நன்கொடையாகப் பெற உள்ளோம். மழைக் காலம் முடிந்ததும் வீடு கட்டும் பணிகள் தொடங்கிவிடும்...'' எனச் சொன்னவர், ''கலைஞர் வீட்டு வசதித் திட்டம் சிறப்புற நடக்க, இடைத் தரகர்களாகச் செயல்பட்டு பணம் கேட்கும் அதிகாரிகளையும், கல், மண் விற்கும் வியாபாரிகளையும் அரசு கண்காணித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்!'' என்றும் வலியுறுத்தினார்!