Published:Updated:

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

பஸ் ஸ்டாண்ட் பாலிடிக்ஸ்மத்திய மண்டலம்

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

பஸ் ஸ்டாண்ட் பாலிடிக்ஸ்மத்திய மண்டலம்

Published:Updated:
##~##
திருச்சி - அரியலூர் சாலையில் உள்ளது கீழப்பளூர் கிராமம். தஞ்சையில் இருந்து அரியலூர் செல் வோரையும், அரியலூரில் இருந்து திருமானூர், திருவையாறு, தஞ் சைக்குச் செல்வோரை யும் இணைக்கும் பாலமாக உள்ளது கீழப்பளூர்!  கீழப்பளூரில் நிழற்குடையோ, பேருந்து நிலையமோ இல்லாதது அந்தக் கிராம மக்களின் 20 வருட ஏக்கம்.

 கடந்த 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் முயற்சியால், அரியலூர் ஜெயங்கொண்டம் பிரிவு சாலையில் சுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

5 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடங் களும் கட்டப்பட்டன. இந்த நிலையில் ஆட்சி

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

மாற்றம் ஏற்பட... காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அமரமூர்த்தி பேருந்து நிலையப் பணிகளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ-வான இளவழகனிடம் இது பற்றிக் கேட்டோம். ''அருள்மிகு ஆலந்துறையார் கோயிலுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் இருந்து பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக நான்தான் வாங்கினேன். அறநிலையத் துறையிடம் கடிதம் மூலமா ஒப்புதல் வாங்கி, அந்த இடத்துக்கு சுமார்

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

4 லட்சம் கொடுத்து கீழப்பளூர் பஞ்சாயத்துக்கு சொந்தமாக்கினேன். அப்புறம்தான் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிலையம் அமைச்சு, அதில் வர்த்தகப் பயன்பாட்டுக்குக் கடைகளும் கட்டினோம். அதில் இருந்து வரும் வருமானம் முழுவதும் கீழப்பளூர் பஞ்சாயத்துக்குப் போய்ச் சேரும்.  

இந்தத் திட்டம் அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் அப்படியே கிடப்பில போட்டுட்டாங்க. இப்போ அந்த இடமே இருட்டறையைப் போல கிடக்கு.

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

கீழப்பளூர் பஞ்சாயத் துக்கும், யூனியனுக்கும், கலெக்டருக்கும் கடிதங்கள் பல எழுதியும் எந்தப் பயனும் இல்லை!'' என்றார் வேதனையுடன்.

இதற்கு சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமரமூர்த்தி என்ன சொல்கிறார்?

''திருமானூர் யூனியனும், கீழப்பளூர் பஞ்சாயத்தும் பஸ் ஸ்டாண்ட் கட்ட  நிதி இல்லைன்னு சொல்றாங்க. அதனால என்னோட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதுவரை

குமுறும் இளவழகன்... மறுகும் அமரமூர்த்தி...

15 லட்சம் வரை கொடுத்து இருக்கேன். கூடிய சீக்கிரமே அங்கே பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்!'' என நம்பிக்கையோடு சொன்னார் அமரமூர்த்தி.

ஒவ்வொரு நாளும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறங்கி ஏறிச் செல்லும் கீழப்பளூர் கிராமத் தில் சீக்கிரமே பேருந்து நிலையம் திறக்கப்பட்டால், மழையிலும் வெயிலிலும் அல்லாடும் மக்கள் அவஸ்தைகள் முடிவுக்கு வரும்!  

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism