Published:Updated:

ஆறு பேர் கொலை வழக்கில் ஓர் அதிர்ச்சி சி.டி.!

ஜாமீனை மறுத்த நீதிமன்றம்...மேற்கு மண்டலம்

ஆறு பேர் கொலை வழக்கில் ஓர் அதிர்ச்சி சி.டி.!

ஜாமீனை மறுத்த நீதிமன்றம்...மேற்கு மண்டலம்

Published:Updated:
##~##
சேலத்தையே உலுக்கிப் போட்ட ஆறு பேர் கொலை வழக்கில், அதிரடித் திருப்பமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷை கடந்த அக்டோபர் 20-ம் தேதி கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். சைரன் வைத்த காரில் வீரபாண்டி ஆறுமுகம் ஜெயிலுக்குள் போய் பார்த்தது... 'கட்சிக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கிறது’ என அவர் வெடித்தது... என அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. இந்த நிலையில்தான், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.டி. ஒன்று வழக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்று இருப்பதாக முணுமுணுக்கிறார்கள் வக்கீல்கள்!

 இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு பாரப்பட்டி சுரேஷ் செய்த மனு மீதான விசாரணை கடந்த 22-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. சுரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் நாராயணன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறு பேர் கொலை வழக்கில் ஓர் அதிர்ச்சி சி.டி.!

''இந்தக் குற்றத்தில் பாரப்பட்டி சுரேஷ் ஈடுபட்டார் என்பதற்கு நேரடி ஆதாரம் இல்லை. சிவகுருவின் மனைவி மாலா அளித்து இருக்கும் வாக்குமூலத்தின் அடிப் படையில்தான் சுரேஷை போலீஸ் கைது செய்தது. இதை முக்கிய ஆதாரமாகக்கொள்ள முடியாது. எனவே, சுரேஷ§க்கு ஜாமீன் வழங்க வேண்டும்.'' என தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

இதை எதிர்த்து அரசுத் தரப்பு வழக்கறிஞரான தம்பிதுரை, ''மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்த வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது...'' என தனது பிரதிவாதத்தை முன்வைத்தார்.

அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. ராஜராஜன் ஒரு சி.டி. ஆதாரத்தை நீதிபதியிடம் கொடுத்தார். அந்த சி.டி-யைப் பார்த்தார் நீதிபதி. பாரப்பட்டி சுரேஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதியிடம் கொடுக்கப்பட்ட சி.டி-யில், பாரப் பட்டி சுரேஷ§க்கு இந்த வழக்கில் இருந்த நெருக்கமான தொடர்புகள், சிவகுருவின் மனைவி மாலா அளித்த வாக்குமூலம்... இவை தவிர, அதிமுக்கிய ஆதாரம் ஒன்றும் இருப்பதாகச் சொல்லிப் படபடக்கிறார்கள் பாதிக்கப்பட்ட வட்டாரத்தில்.

இதைத் தொடர்ந்துதான், அரசு தரப்பில் ஆஜராகி இருக்கும் வக்கீல் தம்பிதுரைக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதில், ''எங்கள் தலைவரை விடுதலை செய்யாவிட்டால் சேலத்தில் ரத்த ஆறு ஓடும். ஜெயிலில் அடைத்தாலும் எங்களைத் தடுக்க முடியாது. அவர் பெயிலில் வந்து, கை காட்டும் அனைவரையும் குடும்பத்துடன் கடத்துவோம்.

போலீஸாக இருந்தாலும் கருணை காட்ட மாட்டோம். எங்கள் தலைவர் எங்கள் உயிர். அவர் நிரபராதி. எங்கள் இயக்கம் உங்களை சும்மா விடாது. நீதி

ஆறு பேர் கொலை வழக்கில் ஓர் அதிர்ச்சி சி.டி.!

கேட்டு வீதியில் நின்று போராடுவோம். வெற்றி எங்கள் பக்கமே. இது மக்கள் இயக்கம். மக்கள் சக்தியை உணர்த்த இன்னும் சில நாட்களே உள்ளன. உணர்ந்து செயல்படுங்கள். தலைவர் வாழ்க! இவண் எஸ்.ஜி.எம்.'' என எழுதப்பட்டு இருந்தது. கடிதம் பற்றி தம்பிதுரை போலீஸில் புகார் செய்ய, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டு இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க... கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்ட நிலையில் சேலம் மத்திய சிறைக்குள் சுரேஷ் என்ன செய்கிறார் என்று சிறைத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

''சுரேஷ§டன் கைது செய்யப்பட்ட சம்பத், செந்தில் மூணு பேரும் ஒரே செல்லில்தான் இருக்காங்க.  இந்த ஒரு மாசத்துல எட்டு கிலோ வெயிட் குறைஞ்சுட்டார். தினமும் யாராவது விசிட்டர்ஸ் அவரைப் பார்க்க வந்துட்டுதான் இருக்காங்க. அவரோட மனைவி, குழந்தைகள் வரும்போது மட்டும், சுரேஷ் கலங்கிடுறாரு. வீரபாண்டியார் அவரை பார்த்துட்டுப் போனது சர்ச்சைக்குள்ளானதை பேப்பர்ல படிச்சுட்டு, 'என்னால தேவை இல்லாம பெரியப்பாவுக்கு சிக்கல். ரொம்ப கஷ்டமா இருக்கு’ன்னு புலம்பிட்டே இருந்தார்.'' என்கிறார்கள்.

இதற்கிடையே,  வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக் கோரி அ.தி.மு.க சார்பில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சுமியும் இருந்தார். கூடிய சீக்கிரமே விஜயலட்சுமிக்கு அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism