Published:Updated:

காரில் கடத்தி... கிணற்றுக்குள் தள்ளி...

கொங்கு மண்டலத்தை அதிரவைத்த அடுத்த கடத்தல்!மேற்கு மண்டலம்

##~##
தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் 'பள்ளிக் குழந்தைகள் கடத்தல்’, அன்றாட வாழ்க்கை அச்சமின்றிக் கழியாது என்கிற பீதியைக் கிளப்பி இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் என்னதான் பிரயத்தனம் செய்தாலும் 'டிமிக்கி’ கொடுத்து பெற்றோரையும் போலீஸையும் பொறி கலங்கவைக்கிறார்கள் கடத்தல்காரர்கள். ஸ்ரீதர் என்கிற மாணவனைக் கடத்திய ஒரு கும்பல், அவனை ஒரு கிணற்றுக்குள் தூக்கி வீசி... திருப்பூர் மாவட்டத்தையே திகிலில் உறையவைத்தது!

 உடுமலையைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ஸ்ரீதர். 13 வயதே நிரம்பிய இவன் கடந்த 20-ம் தேதி சனிக்கிழமை மதியம் விளையாடிவிட்டு வீடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காரில் கடத்தி... கிணற்றுக்குள் தள்ளி...

திரும்பும்போது ஆசாத் வீதியில் நின்று இருந்த வெள்ளை நிற காரில் வந்த கும்பல் அவனைக் கடத்தியது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஊரே பரபரப்பானது. போலீஸும் பொதுமக்களும் ஸ்ரீதரைத் தேட... அவனோ ஒரு கிணற்றுக்குள் தத்தளித்தபடி உயிருக்குப் போராடி இருக்கிறான். குழந்தைகள் கடத்தலைக் கண்டுபிடிக்கும் கோயம்புத்தூர் ஸ்பெஷல் பிரிவு போலீஸார்தான் அவனை மீட்டு இருக்கிறார்கள்.

மிரட்சியும் பதற்றமுமாக இருந்த ஸ்ரீதரிடம் பேசினோம். ''கல்பனா தியேட்டர் கிரவுண்ட்ல விளையாடிட்டு தினமும் வீட்டுக்குப் போற வழியில் வந்திட்டு இருந்தேன். அப்போ, ஆசாத் வீதியில் 'புலி’ ஸ்டிக்கர் ஒட்டின வெள்ளை நிற காருக்குள்ள இருந்த ரெண்டு பேர் திடீர்னு என்னை இழுத்தாங்க. நான் கீழே விழுந்துட்டேன். உடனே காருக்குள் இழுத்துப் போட்டுக் கிட்டாங்க.

காரில் கடத்தி... கிணற்றுக்குள் தள்ளி...

அதில் ஒருத்தன், 'உங்க அப்பாவோட போன் நம்பரைக் குடுடா’ன்னு கேட்டான். நான், 'மொபைல் நம்பர் தெரியாது’ன்னு சொன்னேன். 'உங்கப்பா என்னடா வேலை பாக்குறார்?’னு கேட்டாங்க. 'நகைக் கடையில ஆசாரி வேலை பாக்குறார்’னு சொன்னதுக்கு, 'இவனைக் கடத்தினதே வேஸ்ட்!’னு சொன்னாங்க. அவங்க ஏதோ பண்ணப் போறாங்கன்னு பயந்து, 'காப்பாத்துங்க’ன்னு கத்தினேன். உடனே காரை ஒரு இடத்துல நிறுத்தி, என் வாயில துணியை அமுக்கி கிணத்துக்குள்ள தூக்கிப் போட்டுட்டாங்க.. நல்லவேளை... கிணத்துக்குள்ள ஒரு பைப் இருந்துச்சு. அதைப் பிடிச்சுக்கிட்டு, 'காப்பாத்துங்க...’னு கத்தினேன். ஒன்றரை மணி நேரம் கழிச்சுத்தான் போலீஸ்காரங்க வந்து என்னைக் காப்பாத்தினாங்க... கடத்தினவங்களை என்னால அடையாளம் காண்பிக்க முடியும்!'' என்றான் பயம் விலகாதவனாக.

ஸ்ரீதரின் தந்தை கோவிந்தராஜு, ''பையனைக் காணோம்னு சொன்னதுமே பதறிட்டேன். எல்லா இடமும் அரக்கப்பரக்க தேடினப்பதான்,

காரில் கடத்தி... கிணற்றுக்குள் தள்ளி...

உடுமலை - பொள்ளாச்சி ரோட்டுல இருக்குற முக்கோணம் தாண்டி கொஞ்ச தூரத்துல உள்ள கிணத்துக்குள்ள என் பையன் கிடக்கிறான்கிற தகவல் கிடைச்சது. பாவிப் பயலுகளுக்கு என் பையனைக் கிணத்தில போட எப்படித்தான் மனசு வந்துச்சோ? குழந்தைகளைக் கடத்துறவங்களுக்கு ஒரே குறிக்கோள் பணமாத்தான் இருக்கு. அதுக்கு வழி இல்லைன்னு தெரிஞ்ச உடனே எவ்வளவு கொடூரமா நடந்திருக்காங்க பார்த்தீங்களா... என் குழந்தைக்கு ஏற்பட்ட மாதிரி வேற யாருக்கும் ஏற்படக் கூடாது சார்!'' என்றார் கண்ணீரோடு.

இந்நிலையில், ''ஸ்ரீதர் சொல்வது நம்பும்படியாக இல்லை. தன்னைக் கடத்தியதாக அவன் நாடகமாடுகிறானோ என்று எங்களுக்கு சந்தேகம்'' என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடப்பதை மறைப்பதற்காக போலீஸார் இப்படிச் சொல்கிறார்களோ என்கிறார்கள் பொதுமக்கள்!

படங்கள்: வீ.சிவக்குமார்