Published:Updated:

இளைஞர்களுக்காக ஒரு கட்சி!

தெற்கு மண்டலம்

##~##
'இந்திய சுதந்திரப் போரின் தொடர்ச்சி’ என்ற சப்-டைட்டிலுடன் மதுரையில் புதிதாகத் தொடங்கப்பட்டு இருக்கிறது 'இளைஞர் சான்றோர் காங்கிரஸ்’ கட்சி. பெயரில்தான் காங்கிரஸ் இருக்கிறதே தவிர, காங்கிரஸுக்கும் இந்தக் கட்சிக்கும் துளியும் தொடர்பு கிடையாது. உண்மையிலேயே நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள்தானா என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கட்சியில் உறுப்பின ராக முடியும்; 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே தலைவர் உள்ளிட்ட பொறுப்புக்கு வர முடியும் போன்ற கடுமையான விதிமுறைகளுடன் தொடங்கப் பட்டுள்ள இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செ.தமிழ்வாணனை சந்தித்தோம்.

 'காங்கிரஸ் என்பது இந்திய சுதந்திரத் துக்காகப் போராடிய ஒரு அமைப்பு. எங்களது கட்சியோ சுதந்திரப் போராட்டத்தின் குறிக் கோளான உண்மையான மக்களாட்சியை உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்டு இருக்கிறது. இது வரை இருந்த அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் மாற்றாக, நாட்டை நேசிக்கும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இளைஞர்களுக்காக ஒரு கட்சி!

மக்களின் உண்மையான அரசியல் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படும். பொதுவாக சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பு, தாங்கள் பதவிக்கு வந்ததும் அதே தவறைச் செய்வதுதான் வழக்கமாக இருக்கிறது. அப்படி இல்லாமல் நேர்மையான அரசியலும், அனைத்து உயிர்களையும் மதிக்கும் மனித நேயமுமே எங்கள் இயக்கத்தின் கேடயங்களாக இருக்கும்.

உண்மையிலேயே மக்கள் பணியாற்ற விரும்புபவர் கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந் தெடுக்கப்படும் வகையில் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் யாரும் தங்களது பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ சொந்தமாக எந்தச் சொத்துகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அரசியல் சட்டத்தைத் திருத்த வலியுறுத்தி வரும் ஆனந்தன் என்பவர்தான் இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.

வேளாண் பொறியியல் துறையின் அதிகாரியான அவர், அரசுப் பணியில் இருந்தபோதே, 'சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர். முழுநேர சமுதாயப் பணிக்காகத் தன் வேலையையே வி.ஆர்.எஸ். செய்து விட்டு இக்கட்சியைத் தொடங்கிய அவர், தான் தலைவர் பொறுப்பை ஏற்காமல் அறிவாற்றலும்,

இளைஞர்களுக்காக ஒரு கட்சி!

நாட்டுப்பற்றும் மிக்க இளைஞர்களே தலைமையேற்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அனுபவம் மிக்க சான்றோர்கள் வழிகாட்டுதலுடன், பரந்த மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஆட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் இயக்கத் துக்கு இளைஞர் சான்றோர் காங்கிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது!' என்றார் கட்சி தொடங்கிய கதையை.

கட்சியை நிறுவியவரும், உயர்நிலைக்குழு உறுப் பினருமான ஆனந்தனிடம் பேசினோம். 'இளம் வயதிலேயே அரசியல் ஆர்வத்துடன் இருந்த எனக்கு, 18 வயதில் அரசுப் பணி கிடைத்தது. அரசு ஊழியர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியபோது, ஒன்றரை லட்சம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த ஜெயலலிதாவை கண்டித்து கடுமையான போராட்டத்தை நடத்தினோம். இதனால் அரசால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். 2,000 பேர் இருக்க வேண்டிய அந்தச் சிறையில் சுமார் 4,000 பேர் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்களில் பலர் இளைஞர்கள். சரியான வழிகாட்டுதல் இல்லாததே அவர்களின் இந்த நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்து, வெளியே வந்ததும் சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கத்தைத் தொடங் கினேன். அதன் அடுத்த கட்டம்தான் இந்தக் கட்சி. 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் இந்தக் கட்சியில் தலைவர், பொதுச் செயலாளர் போன்ற பதவிகளை வகிக்க முடியும். 35 வயது முடிந்ததும் இன்றைய பொதுச் செயலாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட யாரானாலும் பதவியை இன்னொரு இளைஞருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகள் அதனைத் தீர்க்க

இளைஞர்களுக்காக ஒரு கட்சி!

முன்வருவது இல்லை. ஆனால், இளைஞர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். நேர்மறையான, நேர்மையான அரசியலை நடத்துவார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை தமிழர்கள்தான் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள். இவர்களின் சிந்தனை, கொள்கை ஒன்றுபட்ட இந்தியாவுக்கே பொருத்தமானதாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தேசியக் கட்சிகள் அனைத்தும் வடநாட்டுக் கொள்கைகளைத் தாங்கியதாக இருக்கிறது. அந்தக் குறையை எங்கள் கட்சி போக்கும்!'' என்றார் உறுதியாக.

இந்த அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கையில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் சேர்த்தே இப்போது வரை 300 பேர்கள்தான் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள். மேலும் 300 பேர் விருப்பம் தெரிவித்தும், கட்சியில் சேர்க்காமல் அவர்களின் தகுதியைச் சோதிக்கும் பணிகள் நடக்கிறதாம்.

இளைஞர்கள் என்பதால் இவர்களின் அதிரடி மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தாசில்தாரிடம் புகார் செய்த இவர்கள். 'மக்கள் ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்..? யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்..!’ என்று தாசில்தார் சம்பிராதயமாகச் சொல்லி இருக்கிறார். உடனே, அதையே போஸ்டராகப் போட்டு யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று பரபரப்பைக் கிளப்பினார்கள் இந்தக் கட்சியினர். அடுத்து கலெக்டரை சந்தித்த இவர்கள், 'மக்களிடம் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று தண்டோரா போடுங்கள்!’ என்று கலெக்டர் சொன்னதையே போஸ்டராகப் போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... போகப் போக எப்படி இருக்கும்?

படங்கள்: செ.பாலசுப்பிரமணியன்