Published:Updated:

குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!

குறைகளைத் தீர்ப்பாரா வேலூர் மேயர்

##~##
குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!

வேலூர், மாநகராட்சியானதும் முதல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்து இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று மேயர் ஆகியிருக்கிறார், கார்த்தியாயினி. புதியவர், துடிப்புடன் செயல்படுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இவரைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போது, இவர் முன்னே இருக்கும் பிரச்னைகளைப் பட்டியல் இட்டார்கள் வேலூர் மக்கள். ''சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் உள்ள சென்னை - பெங் களூரு தேசிய நெடுஞ்சாலையை, பாதசாரிகள் கடக்கவே முடியாத அளவுக்கு சிரமமாக இருக்கிறது. எப்போதும் அதிவேகமாக போக்குவரத்து இருக்கிறது. அதனால் நொடி நேரம் கவனிக்காமல் சாலையைக் கடந் தாலும் விபத்தில் சிக்கி உயிரிழக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஏராளமான

குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!

விபத்துகள் நடந்து பலர் உயிர் இழந்து இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள சாலையிலும், சி.எம்.சி. மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாலையிலும்கூட‌ இதே நிலைதான். இந்த இடங்களில் எல்லாம் பாதசாரிகள் சாலைகளைக் கடக்க சுரங்க நடைபாதை அமைக்கவேண்டும். அப்போதுதான், அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும்.

ஏற்கெனவே மக்கள் தொகை அதிகம் உள்ள வேலூர் நகரத்தில் சி.எம்.சி. மருத்துவமனை, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் போன்ற இடங்களுக்கு மற்ற இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்களை மோச மான முறையில் வரவேற்கிறது புதிய மற்றும் பழைய‌ பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகள். அசுத்தத்தில் முதலிடம் வகிக்கும் இந்த கழிப்பறைகள்

முறையற்ற பராமரிப்பில் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட

குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!

கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கொடு மையும் நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்தி சுத்தமாக்க வேண்டும். இவை எல்லா வற்றையும் தாண்டி பல ஆண்டு காலமாக தீர்வுக்கு வராத பிரச்னையாக எங்களை வாட்டி வருகிறது, குடிநீர் பிரச்னை. இதோ தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பி நம்பியே ஏமாந்துபோனோம். இனியாவது குடிக்கத் தண்ணீர் சிக்கலின்றி கிடைக்கவேண்டும்.

பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதே தெரியவில்லை.  மழைக்காலங்களில் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் நீரில் கழிவுகளும் சேர்ந்து வருவதால், மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் வாழ வேண்டி இருக்கிறது'' என்று ஒருசேரச் சொன்னார்கள், பொதுஜனங்கள்.

மக்களின் குமுறல்களை மேயர் கார்த்தியாயினியிடம் முன்வைத்தோம்.

''வேலூர் மாநகராட்சியின் முந்தைய நிலை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. தற்காலிக அடிப்படையில் எதையும் செய்யாமல் நிரந்தரத் தீர்வாக மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மக்கள் குறைகளை உடனடியாக அறிந்து செயல்படும் விதமாக, எந்த நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் என்னுடைய அலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் மக்களிடம் கொடுத்து இருக்கிறேன். விரைவில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வேன்'' என்றார் நம்பிக்கை வார்த்தைகளுடன்.

நம்பிக் காத்திருக்கிறார்கள் மக்கள்.

- ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்