Published:Updated:

தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

##~##
தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

சென்னை மாநகராட்சியைப் போலவே தஞ்சாவூர் நகராட் சியை முதன் முறையாக அ.தி.முக. கைப்பற்றி உள்ள நிலையில், 'தஞ்சாவூர் நகரம் முழுக்க விரவிக்கிடக்கும் நிர்வாக மற்றும் சுகாதார சீர்கேடுகளை புதிய நகராட்சித் தலைவராவது தீர்த்து வைப்பாரா?’ என ஏக்கத்தில் உள்ளனர் தஞ்சை நகர மக்கள்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹுமாயுன், 'சோழர் காலத்தில், மிகப் பெரிய பரப்பளவில் சரியாக திட்டமிடப்பட்டு நிர் மாணிக்கப்பட்ட நகரம் தஞ்சாவூர். ஆனால், இன்று மிக மோசமாக இருக்கிறது.  சுற்றுலா மற்றும் வரிகளுடன் போதுமான வருவாய் கிடைத்து வந்தாலும், மக்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக இருப்பதால் சாலைகள் மோசமாகிவிட்டன. நெற்களஞ்சிய மண்ணில் குடிநீருக்கும் தட்டுப்பாடு

தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

ஏற்பட்டுள்ளது. பல தெருக்களில் குப்பை அள்ளுவதே கிடையாது. சாந்தப்பிள்ளை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப் பட வேண்டும் என்பது சமூக அக்கறை உள்ளவர்களின் வேண்டுகோள். ஆனால், சில அரசியல்வாதிகளால், கடந்த ஆட்சியில் கீழ்பாலம் கொண்டுவர தீர்மானம் போடப்பட்டது. ஏற்கெனவே, ரயிலடி அருகே உள்ள கீழ்பாலத்தினால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இங்கும் கீழ்பாலம் அமைத்ததால், மக்களுக்கு சிரமம்தான்'' என்று கோரிக்கை வைத்தார்.

அடுத்துப் பேசிய வழக்கறிஞர் சுதாகர், 'முக்கிய

தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்காவில் அநாகரிக காட்சிகளே அதிகம் நடக்கின்றன. உள்ளே இருக்கும் சந்தன மரங்களையே எளிதாக வெட்டிக் கடத்திச் செல்கின்ற அளவுக்குத்தான் பராமரிப்பு உள்ளது. அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சுகாதாரம் மோசமாக உள்ளது.

தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?

மழை பெய்தவுடனே சாலைகள் அபாயகரமானதாக மாறிவிட்டன. பழைய பஸ் ஸ்டாண்டில் சுரங்கப் பாதை அமைக்க முயற்சிக்கப்பட்டது. அதுவும் கேட்பார் இன்றி கிடப்பில் போடப்பட்டு விட்டது. பழைய பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தவும் ஒழுங்கு படுத்தவும் வேண்டும்' என்றார்.

இதுபற்றி தஞ்சாவூர் நகராட்சியின் புதிய தலைவர் சாவித்திரி கோபாலிடம் கேட்டபோது, 'சாந்தப்பிள்ளை கேட்டில் நிச்சயம் மேம்பாலம் அமைக்கப்படும். பழைய பேருந்து நிலையத்திலும் மக்கள் போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்க முயற்சிக்கிறோம். கடந்த ஆட்சியில் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய், முறையாக செல விடப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் நகரம் முழுக்க குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நகரம் முழுக்க குப்பைகளை அள்ள போதுமான அளவுக்கு கருவிகள் வாங்கப்படும். நகர சுகாதாரம் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்காக அருகில் கட்டப்பட உள்ள கலையரங்க இடத்தை பயன்படுத்திக்கொள்வோம். தஞ்சாவூர் நகராட்சியை முதல் முறையாக அ.தி.மு.க. வசம் நம்பிக்கையோடு மக்கள் கொடுத்துள்ளனர். அதை காப்பாற்றுவோம்' என்றார் தெளிவாக.

பார்ப்போம்!

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்