Published:Updated:

திவாகரனின் மந்திரப் புன்னகை

கொண்டாடும் டெல்டா அ.தி.மு.க-வினர்

##~##
திவாகரனின் மந்திரப் புன்னகை

ருணாநிதியின் குடும்ப வாரிசுகள் வாழும் இடங்கள் எல்லாம் தி.மு.க-வின் அதிகார மையங்கள் என வர்ணிக்கப்படும். அதே போல, சசிகலாவின் நெருங்கிய உறவினர்களே அ.தி.மு.க-வின் அதி கார மையங்கள் என அ.தி.மு.க-வின் தொண்டர் கள் பலமாக நம்புகின்றனர். தற்போது, நன்னிலம் ஆர்.காமராஜுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் வாங்கி கொடுத்ததன் மூலம், டெல்டாவின் அ.தி.மு.க. அதிகார மையம் திவாகரன் என நிரூபித்துள்ளார் என் கிறார்கள் அரசியல் விவர புள்ளிகள்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலாவின் உடன் பிறந்த தம்பி திவாகரன் 'அமைதியான தோற்றமும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாத குணமும்கொண்டவர்’ என பெயர் எடுத்தாலும், டெல்டாவில் நடக்கும் அத்தனை அரசியல் நிகழ்வுகளுக்கும் அவர் பெயர் ஏதோ ஒரு வகையில் அடிபடும். இந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல், பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது. பல

திவாகரனின் மந்திரப் புன்னகை

வேட்பாளர்கள் மாற்றப்பட்ட போதும், திவாகரன் ஆதரவாளர்களுக்கு மட்டும் ஸீட் கிடைத்தது. டெல்டாவில் பலமாக இருந்த ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை உடைத்து, சிற்றரசு மூலம் முக்குலத்தோர் ஓட்டு வங்கியை அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கச் செய்தார் என்ப தால், திவாகரன் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை உண்டு'' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

'தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், மன்னார்குடியில், திவாகரன் சிபாரிசு செய்த வேட்பாளர் சிவா.ராஜா மாணிக்கம் தோல்வியைத் தழுவினார். இதனால், திவாகரன் மீது ஜெயலலிதா மனக்கசப்புகொண்டார். அதன் விளைவாக, திவாகரன் ஆதரவாளர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மன்னார்குடி குடும் பத்தைக் கண்டுகொள்ளாத வைத்திலிங்கத்துக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனை அடுத்து, 'திவாகரனுக்கு  செல்வாக்கு இருக்கிறதா?’ என்கிற பட்டிமன்றமே டெல்டாவில் நடக்கத் தொடங்கியது.

விட்ட இடத்தைப் பிடிக்க திவாகரன் உள்ளாட்சித் தேர்தலை பயன்படுத்திக் கொண் டார். திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ஜெயலலிதாவிடம் டெல்டா அ.திமு.க. கோட்டை என நிரூபித்தார். அமைச்சரவை மாற்றத்தில், திவாகரனின் ஆதரவாளரான ஆர்.காமராஜுக்கு உணவுத் துறை கொடுக்கப்பட்டது. பதவியேற்று மன்னார்குடி வந்த ஆர்.காமராஜ், 'பாஸ் மேல் கொண்ட விசுவாசத்துக்குதான் அமைச்சர் பதவி கிடைத்தது’ என நெகிழ்ந்து கண்ணீர்விட்டார். இன்னொரு வகையில், வைத்திலிங்கத்தின் கை டெல்டாவில் உயர்வதை தடுக்கவும் ஆர்.காமராஜுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபய துல்லாவை தோற்கடித்த ரெங்கசாமி, திருமயம் எம்.எல்.ஏ-வான வைரமுத்து மற்றும் விராலிமலை எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்த மந்திரி சபையில் இடம் பெற திவாகரன் திசையை நோக்கி உள்ளனர்' என பட்டியலிட்டு முடித்தனர் டெல்டா அ.தி.மு.க. நிர்வாகிகள்.

ஆனால், வழக்கம்போல மந்திரப் புன்னகை மட்டுமே வெளிப்படுத்துகிறார் திவாகரன்!

- சி.சுரேஷ்

படம். கே.குணசீலன்