Published:Updated:

சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

கொந்தளிக்கும் மீட்புக் குழுவினர்

##~##
சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

'பொதுச் சொத்தில் இருந்து எவன் ஒருவன் தன் சுயநலத்துக்காக ஒரு ரூபாய் எடுத்தாலும், அவன் இறைவன் முன் பெரிய பாவி’ என்றார் நபிகள் நாயகம். ஆனால், சேலம் ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடிகளை முறையாக கணக்குக் காட்டாமல் முத்தவல்லிகள் கபளீகரம் செய்வதாக குமுறுகிறார்கள், ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவினர்!   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவின் தலைவர் நிசாருதீன் நம்மி டம் பேசினார். ''தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபு போர்டில், குறிப்பாக சேலம் வக்ஃபு போர்ட்டுக்குத்தான் சொத்து அதிகம். இங்குள்ள ஜாமியா மஸ்ஜித் மிகப் பழமையான மஸ்ஜித். இதற்குப் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நிர்வகிக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி முத்தவல்லி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படி 1999-ல் நடந்த தேர்தலில் முத்தவல்லியாக நாசர்கான் என்கிற அமான், துணை முத்தவல்லி காதர்

சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

உசேன், டிரஸ்டி நூருல்லாகான் போன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள், ஜாமியா மஸ்ஜித் சொத்துக்களை விற்றும், வாடகையாகக் கிடைக்கும் லட்சக்கணக்கான தொகையையும் முறைகேடு செய்கிறார்கள்.

ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமாக சேலத்தில் மட்டும் 200 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது. சில இடங்களில் கடைகளாகவும், வீடுகளாகவும், விளை நிலங்களாகவும் இருக்கின்றன. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு உள்ளது. இதில் இருந்து மாதம்தோறும் பல லட்ச ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முறையான கணக்குகள்

சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

காட்டப்படுவதில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமே உறவு வைத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இவர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தாமல் 13 ஆண்டுகளாக இவர்களே ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க-வில் இருப்பதால், யார் கேட்டாலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். ஆரம்பத்தில், வசதி குறைவாக இருந்த இவர்கள் இன்றோ பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்'' என்றார் வேதனையாக.

ஜாமியா மஸ்ஜித்தின் உரிமை மீட்புக் குழு உறுப்பினர் பரித் அகமது, ''சேலத்தில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய சமூகத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். ஜாமியா மஸ்ஜித்தின் சொத்துக்களை முறையாகப் பராமரித்து ஏழை இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் செய்தாலே, அவர்கள் நல்ல நிலையில் இருக்கலாம். ஜாமியா மஸ்ஜித் அருகில்கூட ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் பரிதாபமான நிலையில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உதவிகள் செய்யாமல், அங்கு குடியிருப்பவர்களைக் காலி செய்ய சொல்லி விட்டு சூப்பர் மஹால் திட்டம் தீட்டுகிறார்கள். இறைவனின் பணத்தை யார் அபகரிக்க நினைத்தாலும் இறைவன் அவர்களைச் சும்மா விடமாட்டார்'' என்றார்.

இதற்கெல்லாம் விளக்கம் சொல்லும் ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லி நாசர்கான், ''நான் ஜாமியா

சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?

மஸ்ஜித் பொறுப்புகள் ஏற்ற பிறகுதான் சிறந்த முறையில் செயல்படுத்தி மிகப் பெரிய அளவில் பள்ளிவாசலை கட்டி முடித்திருக்கிறேன். என்னுடைய பீரியடுக்கு முன்பே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், நான் 1999 முதல் 2004 வரைதான் முத்தவல்லி. ஆனால், தேர்தலை நீதிமன்றம் நடத்துவதா? வக்ஃபு போர்டு நடத்துவதா? என்று வழக்கு நடக்கிறது. இந்த நிலையில், 'சேலத்தில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்களையும் ஜாமியா மஸ்ஜித்தில் சேர்க்க வேண்டும்’ என ஒவ்வொரு பள்ளிவாசலின் சார் பாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் தேர்தல் நடத்த தாமதம் ஆகிறது.

எனக்கு முன்பு 14 வருடங்கள் தேர்தல் நடை பெறவில்லை. அதற்கு முன்பு 18 ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. சேலத்தில் இருக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் மதநல்லிணக்கத்தைப் பேணி வருகிறேன். எனக்குப் பதவி முக்கியம் இல்லை. முஸ்லிம் மக்களும் அனைத்து சமூக மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இவர்கள் என் மீது குற்றம் சொல்ல காரணம், ஜாமியா மஸ்ஜித்தின் வாடகை தாரர்கள் முறையாக வாடகை தராததைக் கேட்டதற்காகத்தான். இவர்கள் சொல்வதுபோல ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான நிலங்களில் இஸ்லாமிய சமுதாயத் தினரை தவிர, மற்ற சமுதாயத்தினரும் பல வருடங்களாக குடியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் காலி செய்யச் சொல்லி மத நல்லிணக்கத்துக்கு விரோதமாக செயல் படுகிறார்கள்.

வக்ஃபு விதிமுறைப்படி ஒரு ரூபாய்கூட யாருக் கும் கொடுக்கக் கூடாது. ஏழை இஸ்லாமிய குழந்தை களின் கல்விக்கும், திருமணத்துக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மஸ்ஜித்தில் இருந்து உதவிகள் செய்ய வக்ஃபு போர்டிடம் முறையிட்டிருக்கிறேன். ஜாமியா மஸ்ஜித்தின் செலவுகளுக்கும் சரியான கணக்குகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை  இழுப்பது மிகவும் பாவம்'' என்றார்.

சேலம் வக்ஃபு கண்காணிப்பாளர் பீர் முகமது விடம் பேசினோம். ''தற்போது வக்ஃபு போர்டே தேர்தலை நடத்தச் சொல்லி இருக்கிறது.  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக போர்டின் தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. கூடிய சீக்கிரம் தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு  ஜாமியா மஸ்ஜித்துக்கு தேர்தல் நடத்தப்படும்'' என்றார்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்