Published:Updated:

அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சை

##~##
அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

'கோடி கொடுத்த கொடைஞன்; கல்விக்காக தனது வீட்டையும் கொடுத்த வள்ளல்’ என்பது உள்பட அழகப்ப செட்டியாருக்கு  பல  புகழாரங்கள் உண்டு. காரைக்குடியில் அவரது பெயரைத் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த 24-வது பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அவரது படத்தை இருட்டடிப்பு செய்ததாக இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமை அழகப்ப செட்டியாரையே சேரும். சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்திருக்கும் அழகப்பர் கல்வி நிறுவனங்களில், ப்ரீ கே.ஜி முதல் மாஸ்டர் டிகிரி வரை படிக்கலாம். பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகளையும் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் அரசுக்கு எழுதிக் கொடுத்தவர். இந்தக் கல்லூரிகளைத்தான் 25 வருடங்களுக்கு முன்பு அழகப்பா பல்கலைக்கழகமாக மாற்றி பெருமை

அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

சேர்த்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தனி மனிதராக இருந்து இப்படி கல்விக்காக அளப்பெரிய சேவைகளை செய்த அழகப்பரின் படத்தை காரைக்குடி பகுதியில் உள்ளவர்கள் தங்களது வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மாட்டி வைத்து, கடவுளாகவே வழிபட்டு வருவதை இன்றைக்கும் பார்க்கலாம். அப்படிப்பட்டவரின் படத்தை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் போடாமல் விட்டால் சும்மா இருப்பார்களா?

நம்மிடம் ஆதங்கத்துடன் பேசிய சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் பழனியப்பன், ''வள்ளல் பெருந்தகை அழகப்ப செட் டியார், பி.எட். கல்லூரிக்குக் கட்டடம் இல்லை என்ற போது, தான் வசித்த வீட்டையே கொடுத்துவிட்டு வெளியேறியவர். கடந்த காலங்களில் பல்கலைக்கழக முகப்பில் அமைந்திருக்கும் அழகப்பரின் சிலையும் சேர்த்து எடுக்கப்பட்ட போட்டோவைத்தான் அழைப்பிதழ்களில் போட்டார்கள். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதாலும், அதற்கு முந்தைய ஆண்டு அழகப்ப செட்டியார் நூற்றாண்டு விழா ஆண்டு என்பதாலும் அழைப்பிதழ்களில் அவரது சிலையுடன் படத்தையும் ஸ்பெஷலாக போட்டிருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு எதிலுமே அழகப்பர் படமும் இல்லை; சிலையும் இல்லை. இப்படி திட்டமிட்டு அவரது படத்தை இருட்டடிப்பு செய்வதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஒரு நிறுவனம் அதை உருவாக்கிய நிறுவனரின் பெயரையும் புகழையும் கால் நூற்றாண்டுக்குள்ளாகவே மறைக்கப் பார்ப்பது கொடுமை இல்லையா? இது குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்கூட்டியே கேள்வி எழுப்பி தவறை திருத்தி இருக்க வேண்டும். அழகப்பரை அவமரியாதை செய்திருக்கும் இந்த விஷமத்தனத்தை கண்டித்து மக்களைத் திரட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அத்துடன், ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வருக்கு தந்திகளை அனுப்புவோம்'' என்று படபடத்தார்.

அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

''அழகப்பர் சிலையும் இருப்பதுபோல்தான் முதலில் அழைப்பிதழை ரெடி பண்ணினார்கள். ஆனால், அந்த அழைப்பிதழின் மாதிரி கவர்னர் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு திரும்பி வந்தபோது அழகப்பரின் சிலையை அடித்து அனுப்பி இருந்தார்கள். அதன் பிறகுதான் சிலை இல்லாமல் புதிதாக அழைப்பிதழ் ரெடியானது'' என்று பல்கலைக்கழகத்துக்குளேயே சிலர் முணுமுணுக்கிறார்கள்.

அழகப்பர் படம் இல்லாத அழைப்பிதழை பார்த்துவிட்டு குமுறிய அழகப்ப செட்டியாரின் மகளும்

அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

பல்கலைக்கழகத்தின் ஆயுட்கால சிண்டிகேட் உறுப்பினருமான உமையாள் ராமநாதன், 'எங்க அப்பச்சி படத்தை போடாமல் அழைப்பிதழ் அடிச்சிருக்கீங்க... இன்னிக்கி நீங்க சாப்பிடுற சாப்பாடு எங்க அப்பச்சியோடதுனு மறந்துடா தீங்க. படம் போடாததுக்கான காரணத்தை நீங்க சொல்லியே ஆகணும்’ என்று துணை வேந்தர் சுடலைமுத்துவை கண்டித்ததாக சொல்கிறார்கள். மன வருத்தத்துடன் இருந்த உமையாள் ராமநாதன் பட்டமளிப்பு விழாவுக்கு வருவாரா என்பதுகூட கடைசி வரைக்கும் சஸ்பென்ஸாகவே இருந்தது. விழா மேடையில்

அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?

முன்வரிசையில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததையும் பார்த்துவிட்டு ஆதங்கப்பட்ட அழகப்பர் விசுவாசிகள், ''புரொட்டாகால் காரணத்தைச் சொல்லிச் சொல்லியே கொஞ்சம் கொஞ்சமா ஆச்சியை வெளியே அனுப்பிருவாங்க போலிருக்கு'' என்றார்கள்.

பட்டமளிப்பு விழா முடிந்து சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த உமையாள் ராமநாதனை சந்தித்தபோது, உணர்ச்சிப் பிழம்பாக, ''எங்க அப்பச்சியோட படத்தை ஏன் போடலைனு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. படம் போட்டு புதிதாக நூத்தம்பது பத்திரிகை அடிச்சுக் கொடுக்குறதா துணை வேந்தர் சொன்னார். கடைசி வரைக்கும் அதையும் கொடுக்கலை. கேட்டா, 'அவகாசம் போதலை’னு சொல்றார். இந்த விஷயத்தில் நாங்கள் மட்டுமல்ல... அழகப்பரை நேசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வருத்தத்தில் இருக்கு. எதிர்காலத்தில் இதுமாதிரி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கட்டாயம் செய்வோம்'' என்றார்.

துணை வேந்தர் சுடலைமுத்துவிடம் பேசியபோது, ''வள்ளல் அழகப்பரை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். நான் துணை வேந்தராக வந்ததில் இருந்து, அவருக்காக பாடப்பட்ட வள்ளல் வாழ்த்துப் பாடலை தினமும் காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறேன். அழைப்பிதழ் விவகாரம் கவனக் குறைவால் நடந்த தவறுதானே தவிர, இதில் யாருக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை'' என்று சொன்னவர், கவர்னர் அலுவலக வழிகாட்டுதல்படியே அழகப்பரின் படத்தை போடாமல்விட்டதாக சொல்லப்படுவதையும் திட்டவட்டமாக மறுத்தார்.

ஆயிரம் சொன்னாலும் அழகப்பர் விசுவாசி களின் ஆத்திரம் இப்போதைக்கு தனியாது போலிருக் கிறது!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்