Published:Updated:

சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

மேலூர் அரசுக் கல்லூரி பரபரப்பு

##~##
சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

துரை மாவட்டத்தின் மிகப் பெரிய தாலுக்கா வான மேலூர் வட்டாரத்தில், ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு என்று ஓர் அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. இங்கு  ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டதாக அய்யனார், சுகதேவ், சிவகுருநாதன், சக்தி, ஆண்டி ஆகிய ஐந்து ஆதிதிராவிட மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படவே, விவகாரம் பற்றி எரிகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'எங்க காலேஜ்ல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறதால, உயர் சாதி மாணவர்களுக்கு ஆதரவா சில பேராசிரி யர்களே செயல்படுவாங்க. 2009-ம் ஆண்டில் பி.ஏ. வரலாறு மாணவர்களுக்கு பாலாஜி என்ற பேராசிரியர் அம்பேத்கர், பெரியார் பற்றிய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சில மாணவர்கள், 'அம்பேத்கரைப் பத்தியெல்லாம் எதுக்கு பாடம் நடத்துறீங்க’ன்னு பிரச்னை செய்து, பாதியில் நிறுத்த

சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

வைச்சிட்டாங்க. உடனே நானும், மற்ற தாழ்த்தப்பட்ட பசங்களும் அந்தச் சம்பவத்தைக் கண்டிச்சி போஸ்டர் ஒட்டுனோம். அதை அந்தப் பசங்க கிழிச்சிப் போட்டாங்க. 'ஏண்டா கிழிச்சீங்க?’ன்னு கேட்டதுக்கு, நாங்க அவங்கள கெட்ட வார்த்தையால திட்டி, அடிச்சதா பொய்ப்புகார் கொடுத்தாங்க. முழுசா விசாரிக்காம என்னையையும் இன்னும் 4 பசங்களையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆனா, அந்தத் தரப்புல ஒரு பையன் மேல கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக் கலை' என்றார் எம்.ஏ. மாணவரான அய்யனார்.

மாணவர் சக்தி, 'கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த கல்லூரி ஆண்டுவிழாவில், உயர்சாதி மாணவர்கள் சிலர் சினிமாவில் வரும் சாதிப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். கீழே இருந்த அவர்கள் சாதி

சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

மாணவர்களும் எழுந்து ஆடியதோடு நில்லாமல் சாதி ரீதியாக கோஷம் போட்டார்கள். உடனே நாங்கள், அந்தப் பாட்டை நிறுத்தச் சொல்லி விழா கமிட்டியில் இருந்த பேராசிரியர்களிடம் புகார் சொன்னோம். அதற்கு அவர்கள், 'நீங்க வேணுமின்னா உங்க சாதிப் பாட்டைப் போட்டுக்கோங்க, யாரு வேணாம்னு சொன்னா’ என்றார் கள். அதையும் சேர்த்து, பிரின்ஸிபல் காளிமுத்து விடம் புகார் செய்தோம். அதற்குள் செமஸ்டர் லீவு வந்தது. அவரும் டிரான்ஸ்ஃபர் ஆகி விட்டதால், நடவடிக்கை எதுவும் இல்லை' என்றார்.

மற்றொரு மாணவரான ஆண்டி, 'காலேஜ்ல குடிக்க நல்ல தண்ணி கிடையாது. லைட், ஃபேன்களும் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகளுக்கான போராட்டங்களில் முதுகலை மாணவர்கள் என்கிற முறையில் நான், அய்யனார், சிவகுருநாதன் 3 பேரும் முன்னே நிப்போம். அதனால அந்தப் பேராசிரியர்களுக்கு எங்க மேல செம கடுப்பு. புதுசா வந்த பிரின்ஸிபல் மேடத்துக்கு கல்லூரியில் இதுவரை நடந்த பிரச்னைகளும், பேராசிரி யர்களின் சாதி மனோபாவமும் முழுசாத் தெரியாது. அதைப் பயன்படுத்திக்கிட்டு கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு என்ற பெயரில் மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேராசிரியர்கள் எங்களை கட்டம் கட்டிட்டாங்க' என்றார் வேதனையாக.

மாணவர் சுகதேவின் தந்தை நாகேந்திரனோ, 'சஸ்பெண்டான அன்னிக்கே காலேஜ் கொடுத்த

சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

தண்டனையைவிட அதிக தண்டனையே நான் என் மகனுக்குக் கொடுத்துட்டேன். அப்போது, 'உங்க பையனை ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது?’ன்னு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தது. உடனே பதறியடிச்சிக்கிட்டு காலேஜுக்குப் போனோம். மற்ற பசங்களும், அவங்களோட பெற்றோரும் வந்திருந் தாங்க. பசங்க தண்ணியடிச்சாங்க, பிள்ளைங்கள கிண்டல் பண்ணுனாங்க, பேராசிரியர்களை திட்டு னாங்கன்னு பேராசிரியர்கள் எழுதி ரெடியா வைச் சிருந்தாங்க. 'படித்துப் பார்த்தேன் சரி’ என்று ஐந்து பேரும் ஒப்புதல் கையெழுத்துப் போட்டால்தான் சேர்ப்போம்ன்னு சொன்னாங்க. அவங்களோட சதி புரியாம கையெழுத்துப் போட்டதும், டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. இது எந்த விதத்துல நியாயம்?' என்றார் கவலையாக.

சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?

இதுபற்றி கல்லூரி முதல்வர் ரூபலா ஜூலியட்டிடம் கேட்டபோது, 'அந்த மாணவர்கள் சொல்வது எல்லாம் பொய். டிஸ்மிஸ் செய்யப்பட்டதுக்கு எதிராக அவர்கள் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாது' என்றார்.

'இருபாலர் அரசுக் கல்லூரியில் வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம். ஹீரோயிசம் காட்டுறதுக்காக பசங்க எங்களைப் பண்ற கேலியும் கிண்டலும் கொஞ்சம் நஞ்சமல்ல. மொத்தம் 2,000 பேர் படிக்கிறாங்க. ஒருசில பசங்கதான் மற்ற பசங்களையும் கெடுக்கிறாங்க. அடிக்கடி ஸ்டிரைக் பண்றது அது இதுன்னு ரகளை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. கல்லூரி நலனுக்காக எல்லா துறையின் தலைவர்களும் சேர்ந்து ஒரு ஆலோசனைக் கமிட்டியைப் போட்டு எடுத்த முடிவு இது. பேராசியர்கள் சாதி பார்க்கிறதாச் சொல்றது முழுப் பொய். அப்படிப் பார்த்திருந்தா, ஏற்கெனவே இளங்கலை படிச்சப்ப சாதி மோதலில் ஈடுபட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரான அய்யனாருக்கு எம்.ஏ. படிப்பில் இடம் கொடுத்திருப்போமா? அந்த மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த பிறகு கல்லூரி அமைதிப் பூங்காவாக மாறிவிட்டது. பயமின்றி வகுப்பறைக்குப் போகிறோம்' என்கிறார்கள் சில பேராசிரியர்கள்.

மாணவர்களோ, 'என்னதான் இருந்தாலும், டிஸ்மிஸ் என்பது ரொம்ப ஓவர். அந்தப் பசங்களோட எதிர்காலம் என்ன ஆகும்னு பேராசிரியர்கள் கொஞ்சம் யோசிக்கணும்'' என்கிறார்கள்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி