Published:Updated:

நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

ஆவேச நரிக்குறவர்கள்

##~##
நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

'நரிக்குறவர் இன மக்களின் 60 ஆண்டு காலப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயந்தியை இடமாற்றம் செய்யாதே!’ என்று சென்னையில் பெரும் போராட்டத்தையே நடத்திக் காட்டிவிட்டார்கள், நரிக்குறவர்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னையை அடுத்த புறநகர்ப் பகுதியான திருமுல்லைவாயலில் இருக்கும் ஜெயா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக் கின்றன. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில், குடி அமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால், 'நரிக்குறவர் மக்கள் வசிக்கும் 1.83 ஏக்கர் இடம் எங்களுக்குச் சொந்தமானது. எனவே மேற்படி இடத்தில் சாலை, குடிநீர், மின்சார வசதி செய்து தரக்கூடாது. எந்த அரசு அதிகாரியும் உள்ளே நுழையக் கூடாது’ என்று 1994-ம் வருடம் அம்பத்தூர் முன்சீஃப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார் பாலு.

நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

வருடக்கணக்கில் நடந்த வழக்கில், கடந்த 19-ம் தேதி நரிக்குறவர் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு கொடுத்த நீதிபதி ஜெயந்தி உடனே இட மாற்றம் செய்யப்பட்டார். அதை எதிர்த்துத்தான் போராட்டம்.

இதுகுறித்து ஜெயா நகர், நரிக்குறவர் சங்கத் தலைவி தனலட்சுமி, ''நியாயமாக, 'அரசு நிலத்தில் குடியிருக்கும் நரிக்குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர எந்தத் தடையும் இல்லை’ என்று தீர்ப்பு வழங்கிய ஒரே காரணத்துக்காக, நீதிபதி ஜெயந்தியை எழும்பூர் 20-வது நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டனர். இதே நீதிமன்றத்தில் அவர் இருந்தால், 'மின்சாரம், சாலை, குடிநீர், பட்டா...’ என்று எங்களது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்துவிடுவார். அதனால் சிலர், திட்டமிட்டு நீதிபதியைப் பற்றி மொட்டைக் கடுதாசிகள் எழுதியும் அவதூறு பரப்பியும் இடமாற்றம் செய்ய வைத்துவிட்டனர். ஆகவே, நீதிபதி ஜெயந்தியை மீண்டும் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றும்வரை எங்கள் போராட் டம் ஓயாது'' என்று கொதித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் முதல் நாள் போராட்டம் நடந்தது. அன்றிரவு மெரினா கடற்கரையிலேயே தூங்கி எழுந்த போராட்டக் குழு, மறு நாள் பஸ் மறியலில் இறங்கியதோடு, 20-வது நீதிமன்றம் முன்பு கோஷம் எழுப்பினர்.

நீதிபதிக்காக ஒரு போராட்டம்!
நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

நரிக்குறவர் சங்கத்தின் கவுரவத் தலைவர் ஜான் நம்மிடம், ''நில உச்சவரம்புச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்கெனவே இந்த இடம் முழுவதையும் அரசு கையகப்படுத்தியது. அதனால்தான், 25 வருடங்களுக்கு முன்பே இந்த இடத்தை நரிக்குறவர்களுக்காக ஒதுக்கினார் திருவள்ளூர் கலெக்டர். இந்தப் பிரச்னையில், வழக்கு தொடுத்திருந்த பாலுவும் இறந்துவிட்டார். ஆனால், பாலுவின் உறவினர்களும் பவர் ஏஜென்ட் என்று சொல்லிக்கொள்பவர்களும் ஜெயா நகர் மக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து தடை உத்தரவு வாங்கினர். இதனாலேயே அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு செய்துதரவில்லை. ஊசி மணி பாசி விற்பது, தெருவோரங்களில் கிடக்கும் இரும்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பது என்று சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் எங்கள்

நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

வாழ்க்கையில் சிலர் வில்லங்கம் செய்யப் பார்ப்பது தான் வேதனை!'' என்கிறார் ஆதங்கத்தோடு.

பாலுவின் பவர் ஏஜென்ட் சிவசுப்பிரமணியம், ''1.83 ஏக்கர் நிலம் எங்களுடையது என்பதற்கு ஆதார மாக எங்களிடம் பட்டா உள்ளது. ஆனால், அரசு நிலம் என்பதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. சர்ச்சைக்குரிய இந்தத் தீர்ப்பு குறித்தும் நாங்கள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்'' என்றார்.

நீதிபதிக்காக ஒரு போராட்டம்!

பாலு தரப்பு வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் அம்பத்தூர் பார் கவுன்சில் தலைவர் சங்கர் ஆகியோர், ''சிவில் உரிமையியல் சட்டம், நடைமுறைச் சட்டம்... என்று எதையுமே சரிவரக் கடைப்பிடிக்கவில்லை நீதிபதி. எனவே, நீதிபதி ஜெயந்தியை இடமாற்றம் செய்யக் கோரி கடந்த ஜூன் 20-ம் தேதியே நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தோம். கடந்த 16-ம் தேதியே எழும்பூர் 20-வது நீதிமன்றத்துக்கு அவரை இடமாற்றம் செய்ததாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு 17-ம் தேதி அன்றே நீதிபதியின் கையிலும் கிடைத்துவிட்டது. ஆனால், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நீதிபதி ஜெயந்தி, அம்பத்தூர் முன்சீஃப் கோர்ட்டில் 19-ம் தேதி இப்படி ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். இந்த முரண்பாடுகள் குறித்தும் மாவட்ட நீதித் துறைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்'' என்றனர்.

ஆனால், அதே அம்பத்தூர் முன்சீஃப் நீதிமன்ற வளாக வழக்கறி ஞர்கள் சிலரோ, ''இங்குள்ள வழக்கறிஞர்களையே நீதிபதிக்கு எதிராகத் திருப்பிவிட்டனர் சிலர். இதனால், உப்புசப்பில்லாத விஷயங்களுக்கு எல்லாம் புறக்கணிப்பு செய்தார்கள். பணிமாற்றம் செய்யப்பட்ட ஒருவர் எப்படி தீர்ப்பு வழங்கலாம்? என்கிறார்கள். பணிமாற்றம் செய்யப்பட்ட ஒருவர், தான் ஏற்கெனவே கவனித்த பொறுப்புகளை முற்றாக விடுவித்துச் செல்லும்வரையில், விட்டுப் போன பணிகளைச் செய்வதற்கும் உரிய தீர்ப்புரைகளை வழங்குவதற்கும் அதிகாரம் உள்ளது. இது விஷயமாகக் கேள்வி கேட்பவர் களுக்கும் இந்தச் சட்ட நுணுக்கம் நன்றாகத் தெரியும்'' என்கிறார்கள் தெளிவாக.

- த.கதிரவன்