Published:Updated:

ராமதாஸா? வேல்முருகனா?

கடலூரில் அடங்காத கலகம்!

##~##
ராமதாஸா? வேல்முருகனா?

பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டதால்  பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான வேல்முருகனை அக்கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால், கட்சியின் கடலூர் மாவட்ட அலுவலகம் யாருக்கு சொந்தம் என்று வேல்முருகன் ஆதரவாளர்களுக்கும், ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் கடும் போட்டி நிலவியது. 'வேல்முருகன் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி அலுவலகத்தை மீட்டுக் கொடுங்கள்’ என்று ராமதாஸின் ஆதர​வாளரான சண்முகம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால், அந்த அலுவலகத்தைச் சீல்வைத்து, கடந்த 21.11.11 அன்று சப்-கலக்டர் கிரண் குராலாவிடம் சாவியைக் கொடுத்துவிட்டார் வட்டாட்சியர். அதன்படி அன்று சப்-கலெக்டரிடம் டாக்குமென்டுகளை ஒப்படைக்க வந்த ராமதாஸின் ஆதரவாளர்களும், வேல்முருகன் ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்ததால் ஏக பரபரப்பு! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராமதாஸா? வேல்முருகனா?

இந்நிலையில், ராஜேஸ்வரி, அமராவதி ஆகிய இருவர் வந்து, 'தனக்குத்தான் கட்சி அலுவலகம் சொந்தம்’ என்று மனு கொடுத்தனர். சப்-கலெக்டர் கிரண் குராலாவோ, ''யாருமே சரியான ஆதாரங்களை ஒப்படைக்கவில்லை. இந்த வழக்கை டிசம்பர் மாதம் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்துவிட்டேன்'' என்று அறிவித்து விட்டார்.

இது தொடர்பாக ராமதாஸின் ஆதரவாளரான  சண்முகத்திடம் கேட்டோம். ''நாங்கள் கொடுத்திருக்கும் ஆவணங்கள் எல்லாமே டாக்டர் ஐயா

ராமதாஸா? வேல்முருகனா?

பெயரில்தான் இருக்கின்றன. கட்சி அலுவலகமும் ஐயா பெயரில்தான் இருக்கிறது. நாங்கள் கொடுத்திருப்பது ஜெராக்ஸ் காப்பிதான். சப்-கலெக்டர் அசல் ஆவணத்தைக் கொடுங்கள் என்றார். அது அரசு அலுவலகத்தில் உள்ளது. அதை வாங்குவதற்காக அவகாசம் கேட்டிருக்கிறோம். இந்த அலுவலகத்தைக் கட்ட நாங்கள்தான் உழைத்தோம். சும்மா இருந்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாடு கிறார்கள். ராஜேஸ்வரியும், அமராவதியும் கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதற்காக வேல்​முருகனால் உருவாக்கப்பட்டவர்கள். சதி செய்து கட்சி அலுவலகத்தை கைபற்றிவிடலாம் என்று நினைக்​கிறார்கள் அது ஒருபோதும் முடியாது'' என்றார்.

வேல்முருகனின் ஆதரவாளரான கமலநாதனிடம் இதுபற்றி பேசினோம். ''இந்த இடம் கடலூர் நகராட்சிக்குத்தான் சொந்தம். ராஜேஸ்வரி என்பவர் நகராட்சியில் இருந்து லீஸுக்கு எடுத்திருந்தார். 2004-ல் இந்த இடத்தை வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவனுக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த டாக்குமென்ட்டை சப்-கலெக்டரிடம் கொடுத்​துள்ளோம். வன்னியர் சங்கம் சார்பில் அரசுத் தேர்வுக்கு பயிற்சிப் பள்ளி அந்த இடத்தில் நடத்தி வருகிறோம். அதற்கு எவ்வளவு மாணவர்கள் வருகிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என்ற விவரங் களைக் கேட்டிருக்கிறார்கள். அதையும் எடுத்து வைத் துள்ளோம். ராமதாஸ்  தரப்பில் ஆஜரானவர்கள், உண்மையான டாக்குமென்ட்டைக் காட்டாமல், 'கட்சி அலுவலகத்தில் இருந்த டாக்குமென்ட்டை நாங்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டோம்’ என்று அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் உண்மையான டாக்குமென்ட் இருந்தால்தானே கொடுப்பது!'' என்றார்.

ராமதாஸா? வேல்முருகனா?

அமராவதியைச் சந்தித்தோம். ''கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் கடலூர்  நகராட்சியில் ராஜேஸ்வரி  கவுன்சிலராக இருந்தார். அப்போது அவர் கணவர் அந்த  இடத்தில் டெய்லர் கடை வைத்திருந்தார். ராஜேஸ்வரிதான் இந்த இடத்தில் இலவசமாக ஏழை மாணவர்களுக்காகத் தையல் பயிற்சி கொடுப்பதற்காக இடத்தை பவர் வாங்கியிருந்தார். பிறகு, எங்கள் அப்பா சீனுவாச படையாட்சியிடம்

ராமதாஸா? வேல்முருகனா?

5,000-த்துக்கு அந்த பவரை  கொடுத்திருந்தார். எங்க அப்பாவும் அந்த இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச​மாக நோட்டு புத்தகங்களை வழங்கிக்கொண்டு இருந்​தார். பிறகு முடியாததால் 'வன்னியர் சங்கம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்’ என்று வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவனிடமே பவர் கொடுத்துவிட்டார். கட்சி அலுவலகத்தின் மின் இணைப்பு வேல்முருகன் பெயரில்தான் உள்ளது'' என்றார்.

ராஜேஸ்வரி தரப்போ, ''இந்த இடத்தை நகராட்​சி யிடம் இருந்து 99 வருடத்துக்கு லீசுக்கு எடுத்துள்ளோம். அது முடியும் வரை அது யாருக்கும் சொந்தம் இல்லை. 2004-ல் திருமால்வளவனுக்கு அனுபவச் சான்று உரிமையைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், லீஸ் எங்கள் பெயரில்தான் உள்ளது'' என்கிறார்கள்.

இதுகுறித்து வேல்முருகனிடம் பேசினோம்.

'' கட்சி அலுவலகத்துக்குச் சீல்வைத்து, அதில் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டார்கள்.  அதற்கு நான் அடிபணிய மாட்டேன். சட்டப்படி என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும்.  அதில் படித்து வந்த மாணவர்கள் 1,200 பேரை தொடர்ந்து படிக்கவைக்க அரசு ஏற்பாடு செய்யட்டும்'' என்றார்.

- க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்