Published:Updated:

மானியத்தில் 'தரக் குளறுபடி'!

குமுறும் புதுவை எழுத்தாளர்கள்

##~##
மானியத்தில் 'தரக் குளறுபடி'!

'புதுச்சேரி கலை, பண்பாட்டுத் துறையினர், தகுதி வாய்ந்த எழுத்தாளர்களைப்புறக்கணிக்​ கிறார்கள்’ என்று குபீர் குற்றச்சாட்டுக் கிளம்பி யுள்ளது.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், தங்களது கையேட்டுப் பிரதியை புத்தகமாகக் கொண்டு வருவதற்கு, புதுச்சேரி அரசு

மானியத்தில் 'தரக் குளறுபடி'!

10,000 மானியம் வழங்கி வருகிறது. கலைப் பண்பாட்டுத் துறையால் நியமிக்கபட்ட குழுவினர், இந்தக் கையேட்டுப் பிரதியை ஆய்வு செய்து மானியம் கொடுப்பார்கள். தரம் இல்லை என்றால் மானியம் இல்லை என்பதுதான் நடைமுறை. கடந்த 2010-11 நிதியாண்டிற்கான மானியம் சில மாதங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த 103 எழுத்தாளர்களின் கையேட்டுப் பிரதிகளை 10 பேர் கொண்ட குழு மதிப்பீடு செய்தது. அதில் 83 பேருடைய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. 20 எழுத்தாளர்களின் படைப்பு தரம் இல்லை என்று ஒதுக்கப்பட்டது. புதுச்சேரியின் மூத்த

மானியத்தில் 'தரக் குளறுபடி'!

எழுத்தாளர்களான விசித்திரன், புதுவை சந்திரஹரி, மு.பாலசுப்பிரமணியன், அரிமதி தென்னகன், மு.சச்சிதானந்தம், லெனின் பாரதி ஆகியோரின் படைப்புகளும் தரம் இல்லாத பட்டியலுக்கு அனுப்பப்பட்டதே விவகாரமாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.  

கலை, பண்பாட்டுத் துறையின் நிலை குறித்து நாடக எழுத்தாளர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான பா.முருகேசனிடம் பேசியபோது, ''மதிப்பீட்டுக் குழுவிலுள்ள 10 பேரில், பெரும்பாலானோர் மரபுக் கவிதை எழுத்தாளர்கள். அதனால் புதுக்கவிதை, ஹைக்கூ போன்றவற்றை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். தனி மனிதக் காழ்ப்புணர்ச்சியும் முக்கியக் காரணமாகத் தெரிகிறது'' என்றார்.

மானியத்தில் 'தரக் குளறுபடி'!

மானியம் மறுக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான விசித்திரன், ''என்னுடைய 'தடுப்புச் சுவர்கள்’ என்ற சிறுகதை நூல், தமிழக அளவில் பரிசு பெற்ற நூல். அதற்கு இங்கு மானியம் மறுக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களிலாவது கட்டுரை, கவிதை, உரைநடை போன்ற துறையைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான இடம் ஒதுக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் எழாது'' என்றார்.

எழுத்தாளர் அரிமதி தென்னகன்,''தேர்வுக் குழுவால் புதுக்கவிதைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தேர்வுக் குழுவில் நானும் ஒருவன். இருந்தும் என்னுடைய புத்தகம் தரம் இல்லை என்று மற்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள்'' என்று வருத்தப்பட்டார்.

தேர்வாளர் குழுவில் ஒருவரான புலவர் கல்லாடன் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, ''தரமான புத்தகம் என்றால் நிச்சயம் மானியம் கொடுக்கிறோம். இதில் பாகுபாடு எதுவும் பார்ப்பது இல்லை. நிராகரிக்கப்பட்டவை எல்லாமே தரம் அற்றவையே'' என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து துறையின் இயக்குன​ரான சந்தானகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''நான் இந்தத் துறைக்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. நான் வந்த பிறகு, என்னால முடிந்த வரைக்கும் துறையை மேம்படுத்தி இருக்கிறேன். தற்போதுள்ள குழு உறுப்பினர்கள் குறித்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த குழு அமைக்கப்படும். நான் விரைவில் ஓய்வு பெற உள்ளேன். அதனால் எனக்குப்பின், கலை மற்றும் எழுத்துத் துறை மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் துறையின் இயக்குனர்களாக வரவேண்டும்'' என்றார் அழுத்தம்திருத்தமாக.    

- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்