Published:Updated:

ஸ்கூலுக்குப் போக விடமாட்டேங்குறாங்க..!'

வேதனையில் குழந்தை தொழிலாளர்கள்...

##~##
ஸ்கூலுக்குப் போக விடமாட்டேங்குறாங்க..!'

வம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடந்த வாரம், எல்லா ஊர்களிலும் உள்ள திரையரங்குகளில் குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய திரைப்படம் அரசு சார்பில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் ஒரு ரவுண்ட் வந்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேலூர் கோட்டைப் பகுதிகளில் பிஸ்கெட், சிப்ஸ், பலூன் விற்பனையிலும், சி.எம்.சி. மருத்துவமனை எதிரே பழங்கள் விற்பனையிலும் பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்தான் இருந்தனர். அடுத்து ஜலகண்டேஸ்வரர் கோயில் பக்கம் போனோம். வெளியில் சூடம் விற்பனை முழுவதும் சிறுவர்கள் வசம்தான். பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ஸ்கூலுக்குப் போக விடமாட்டேங்குறாங்க..!'

''எனக்கு எட்டு வயசு ஆகுது. தினமும் 500 ரூபாய்க்கு நான் விற்கணும். அப்பத்தான் 50 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. இல்லைன்னா கிடையாது. காலையில் ஏழு மணிக்கு ஆரம்பிச்சா நைட்டு ஒன்பது மணிக்கு மேல ஆகிடும். மதியம் ரெண்டு

ஸ்கூலுக்குப் போக விடமாட்டேங்குறாங்க..!'

புரோட்டா மட்டும்தான். அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போறாங்க. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. படிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, ஸ்கூலுக்குப் போக அப்பா விடமாடேங்குறாங்க'' என்று வருத்தப்பட்டான்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வான கலையரசுவிடம் பேசினோம். ''போன வாரம் வீட்டுக்குப் போயிட்டு இருந்தப்ப வழியில் ஒரு பட்டறையில் ஒன்பது வயதான சிறுவன், இரும்பு சுத்தியலால் அடித்துக்கொண்டு இருந்தான். பக்கத்திலேயே அவனுடைய முதலாளி வேடிக்கை பார்த்தபடி அவனை அதட்டிக்கொண்டு இருந்தார். உடனே இறங்கிப் போய் அந்த சிறுவனை மீட்டு அவங்க வீட்டில் கொண்டுபோய்விட்டு அறிவுரை சொல்லிட்டு வந்தேன். பூக்கூடையையும், சிப்ஸ் பாக்கெட்டையும் கையில்கொண்டு செல்லும் சிறுவர்கள் பள்ளிப் புத்தகங்களைக் கொண்டுசெல்லும் நிலை வரவேண்டும். கலெக்டர் மூலம் அதற்காக நடவடிக்கை எடுக்க முயற்சி எடுப்பேன்'' என்றார்.

வேலூர் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் குமாரிடம் பேசினோம். ''14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை மீட்டு, நேஷனல் ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வைக்கிறோம். இது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு ஆகும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் வாங்கித் தருகிறோம். அதையும் மீறி சிலர் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கத்தான் செய்கிறார்கள். எங்களோட நடவடிக்கையை தீவிரப்படுத்த இருக்கிறோம்'' என்றார். சொன்னால் மட்டும் போதாது. செய்யுங்க சார்!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்