Published:Updated:

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

##~##
முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கலந்தாய்வு மாநாடு ஜெயலலிதா தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, 'போக்குவரத்து ஒழுங்குப் பிரிவை பலப்படுத்தும் விதமாக ஐந்து மாவட்டங்களில் போக்குவரத்து காவல் துறையினருக்கு, காவல் நிலையங்கள் புதியதாக அமைத்துத் தரப்படும்’ என்று அறிவித்தார் தமிழக  முதல்வர். காவல் துறை மீது மிகுந்த அக்கறை கொண்ட முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதியில் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று அறிய  அந்த ஏரியாவைச் சுற்றி வந்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல்வரின் தொகுதியில் ஓர் உதவி ஆணையர் அலுவலகம், ஒரு சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், ஒரு போக்குவரத்து காவல் நிலையம், ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இதில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மட்டும் பொலிவோடும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. மற்ற அனைத்துமே 'உவ்வே’ ரகம்.

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

முதலில், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே ராமநாத ரெட்டியார் என்பவரால் இனாமாக வழங்கப்பட்டதாம் இந்தக் காவல் நிலைய இடம்.  காவல் நிலையத்தை இனாமாகப் பெற்றால், அரசே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இனாமைப் புறக்கணித்துவிட்டு, ஒரு ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. வருடத்தில் பாதி நாட்கள் திருவிழாக்களாலும், வி.ஐ.பி-களின் வருகையினாலும் திக்குமுக்காடும் காவல் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு நாளன்றுக்கு 10,000 முதல் 15,000 பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்குரிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. காவலர்களைவிட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை அதிக எண்ணிக் கையில் கொண்ட காவல் நிலையமாக இது இருக்கிறது!  

ஏரியாவில் தினம் தினம் நடைபெறும் நகைப் பறிப்புச் சம்பவங்கள் எகிறிக்கொண்டே செல்கிறது. 'வெளியூருக்குப் போவதாக இருந்தால் காவல்நிலையத்தில் தகவல் சொல்லுங்கள்’ என்பார்கள். ஆனால் மக்கள் அப்படிச் செய்வதே இல்லை. ஏனென்றால், அப்படிச் சொல்லப்படும் வீட்டில் இருந்து கண்டிப்பாக பொருட்கள் காணாமல் போகும் என்று பயந்து நடுங்குகிறார்கள். ஊருக்குள் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி அபேஸ் செய்யப்பட்டு வந்தாலும், அதைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

அடுத்து, போக்குவரத்துக் காவல் நிலையம். 1999-ம் ஆண்டு அப்போதைய மாநகர ஆணையர் திரிபாதி, திருவானைக்காவல் மெயின் ரோட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குட்டியூண்டாக போக்குவரத்து காவல் உதவி மையம் அமைத்தார். இப்போது அதுதான், அதே இடத்தில் காவல் நிலையமாக வளர்ந்து நிற்கிறது. ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தாலும் பாதிப்பேர்தான் இங்கே பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் அதிகாரிகளின் இல்லங்களில் எடுபிடி வேலை செய்துவருவதாக சொல்லப் படுகிறது. அதனால் நத்தை போன்று நகரும் போக்குவரத்தை மீதியிருக்கும் காவலர்களால் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. இருக்கும் சிக்கல் போதாது என்று திருவரங்கம் காவல் நிலையத்தின் வாசலில் இருக்கும் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் செல்ல வேண்டிய நிலை. திருவானைக்காவல் தெற்கு வீதியில் இருந்து கோவிலின் 5-ம் பிரகாரத்தை நேரடியாக வந்தடையும் விதத்தில், பாதை அமைக்க வேண்டி பல்வேறு அமைப்புக்கள் மட்டுமின்றி போக்குவரத்து காவல் துறையும் கோரிக்கை வைத்தது. ஆனால் எதையும் காதில் வாங்காமல் காலம் தாழ்த்திவருகிறது, மாவட்ட நிர்வாகம். அதனால் பிரதோஷ தினங்களில் பக்தர்களின் அவஸ்தை சொல்லி மாளாது. அதனால் தானோ என்னவோ, உள்ளூர்வாசிகள் பிரதோஷ தினத்தன்று வீட்டுக்கு வெளியே எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை.

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

உதவி ஆணையர் அலுவலகம் எங்கே என்று கேட்டால், 'அப்படி ஒன்று இருக்கிறதா?’ என்று பதில்

முதல்வர் தொகுதியில் போலீஸ் நிலவரம் எப்பூடி?

கேள்வி கேட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்கள் ஸ்ரீரங்கம் மக்கள். ஸ்ரீனிவாச நகர் ரயில்வே மேம்பாலத் துக்கு அடியில் ஒரு வாடகை கட்டிடத்தில் பரிதாப மாக இயங்குகிறது இந்த அலுவலகம். 'வரப்பட்டது... போகப்பட்டது’ என்று காவல் துறையில் ஒரு வார்த்தை பிரயோகம் உண்டு. அந்த சொல்லுக்கு இம்மியளவும் மாற்றில்லாத அலுவலகம். வி.ஐ.பி-கள் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் காவலர்களும் தலை காட்டுவார்கள்.

சங்கர்ஜுவால் மாநகர ஆணை யராக இருந்தபோது, உலகத் தரத்திற்கு இணையாக மாநகரின் முக்கிய இடங்களிலும் நகரின் முக்கிய சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் மாநகராட்சிக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையில் வந்த மனக்கசப்பு காரணமாக, கேமராக்கள் இருந்தும் இல்லாதது போல் இருக்கின்றன.

காவல் நிலையங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்து மாநகர ஆணையர் மாசானமுத்துவிடம் விளக்கம் கேட்டபோது, ''ஸ்ரீரங்கம் காவல் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கினாலும், எவ்விதமான வசதிக் குறைவும் கிடையாது. போக்குவரத்துக் காவல் நிலையத்துக்குத் தோதான இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுப் பெறும் முயற்சியில் இருக்கிறோம். உதவி ஆணையர் அலுவலக செயல்பாடுகள் திருப்திகரமாகவே உள்ளது. காவலர்களும் போதிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்படிப்போடு!

- ப்ரீத்தி கார்த்திக்