Published:Updated:

மீனவர்களை விரட்டும் மின் நிலையங்கள்!

கடலோரத்தில் கண்ணீர் போராட்டம்!

##~##
மீனவர்களை விரட்டும் மின் நிலையங்கள்!

வம்பர் 22-ம் தேதி உலக மீனவர் தினம். அதனை உலகெங்கும் மீனவர்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாட, தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாட்டம் மிஸ்ஸிங்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் ஒன்றுகூடி மீனவர் தினத்தன்று ஆர்ப் பாட்டத்தில் இறங்கினார்கள். நாகை பேருந்து நிலையம் அருகேயுள்ள அவுரித்திடலில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்தார்கள். மயிலாடுதுறை தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வனும் போராட்டத்தில் கலந்துகொண்டு கணடன உரை ஆற்றினார்.

''ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என்ன அவசியம்?'' என்ற கேள்வியோடு, போராட்டக் களத்தில் இருந்த வங்கக்கடல் மீன் தொழிலாளர் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் குமரவேலு விடம் பேசினோம். ''கடலும், கடற்கரையும் கடலாளி வர்க்கமான மீனவர்களுக்கே சொந்தம். ஆனால், தற்போது நடந்துவரும் அத்தனைக் காரியங்களும் கடலில் இருந்தும் கடற்கரையில் இருந்தும் மீனவர்களை அப்புறப்படுத்தும் விதமாகவே இருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆரம்பித்து, நாகை மாவட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை 2011 வரை அனைத்துமே மீனவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது. கரை இப்படி பறிபோகிறது என்றால்... கடலுக்குள் அதைவிட பெரிய ஆபத்து. மீன் பிடிக்கச் சென்றால், இலங்கை மீனவர்கள் மற்றும் ராணுவத்தினரால் நம் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீனவன் எப்படி மீனவர் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட முடியும்? அதனால்தான், எங்கள் துயரத்தை உலகுக்கு வெளிக்காட்ட இப்படியரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்'' என்றார்.

மீனவர்களை விரட்டும் மின் நிலையங்கள்!

கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜேசுரத்தினம்,  ''கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவன் கரை திரும்பாவிட்டால் அந்தக் குடும்பமே நிர்கதியாக நிற்கும். அவன் என்ன ஆனான் என்று

மீனவர்களை விரட்டும் மின் நிலையங்கள்!

தெரியாத நிலையில், அவனது குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை பெற வேண்டுமானால், ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம். அதுவரை அவன் குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்தும் என்பதை யோசிக்கவேண்டாமா? அதனால் அந்த காலத்தை ஒரு மாதமாக குறைக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் மட்டும், கடலோரத்தில் 13 அனல் மின் நிலையங்கள் தொடங்க அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். அவை செயல்படத் தொடங்கும்போது, 'அங்குள்ள மீனவன் எங்கே போவான்?’ என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இது நாகை மாவட்ட மீனவர்களின் பிரச்னை என்றால்... இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோர மக்களையும் விரட்டியடிக்கிறது, கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை 2011. அதில், கடற்கரையில் இருந்து 1,000 மீட்டர் தூரம் வரையில் யாரும் குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. அதை எதிர்க்கும் 'தேசிய மீனவர் பேரவை’ பல திருத்தங்களைச் செய்யச் சொல்லியும், அதைச் செய்யாமலே அறிவிப்பாணையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதுபோன்ற இடர்களை எல்லாம் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கிறோம். மீனவர்களும் இப்போதுதான் நெருங்கி வரும் ஆபத்தை உணர்ந்து போராட்டக் களத்துக்கு

மீனவர்களை விரட்டும் மின் நிலையங்கள்!

வருகிறார்கள். அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வரையில் தமிழகத்தில் மீனவர் தினமும் கிடையாது... கொண்டாட்டமும் கிடையாது'' என்று படபடத்தார்.  

''மின் நிலையங்கள் வந்தால்தானே தமிழ்நாட் டின் மின் பற்றாக்குறை தீரும்? அதை எதிர்ப்பதால் தமிழகம் இருளில்தானே மூழ்கிக் கிடக்கும்?'' என்ற கேள்வியை நாம் முன் வைக்க...  ''மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு விலையாக மீனவனின் வாழ்வாதாரத்தை பறி கொடுக்க வேண்டுமா? அவனது உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி. கடலோ ரத்தில் அமையவுள்ள அனல் மின் நிலையங்களுக்காக சராசரியாக 20 கிலோ மீட்டருக்கு ஒரு துறைமுகம் வரப்போகிறது. அப்படி வந்தால்... துறைமுகமும், அனல் மின் நிலையமும் சேர்ந்து மொத்த கடலோரத்தையும் ஆக்கிரமித்து விடும். தனியார் நிறுவனங்கள் கடலை ஆக்கிரமித்துவிட்ட பிறகு, மீனவன் எங்கே போய் மீன் பிடிப்பான்? காந்தி கண்ட கிராம ராஜ்யம் கொண்டுவருவதாகச் சொல்லும் இவர்கள், உண்மையில் அந்தக் கிராமங்ங்களை அழிக்கத்தான் இப்படிப்பட்டத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இப்போது ஒரே ஒரு அனல் மின் நிலையம் மட்டும் இருக்கும்போதே மீனவர்கள் படும் பாடு சொல்லி முடியாது. 13 மின் நிலையங்கள் வந்தால், கடலோரக் கிராமங்கள் என்ன பாடுபடும் என்பதை ஆள்வோர் நடுநிலையோடு நினைத்துப் பார்க்கவேண்டும். மின் உற்பத்தி தேவைதான். சூரிய ஓளியில் மின்சாரம், காற்றாலை மூலம் மின்சாரம் என்று மாற்று வழிகள் எத்தனையோ இருக்க... இப்படி சுற்றுச்சூலை மாசுபடுத்தும் அனல் மின் நிலையங்களும், சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அணு மின் நிலையமும் தேவைதானா?'' என்று கொந்தளித்தார்.

இவர்களது குரல்களில் உள்ள நியாயம், மத்திய - மாநில அரசுகளின் காதுகளை எட்டுமா?

- கரு.முத்து