Published:Updated:

மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா?

செஞ்சிலுவை சங்க விவகாரத்தில் கொந்தளிக்கும் கோவை

##~##
மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா?

'இந்திய செஞ்சிலுவை சங்கம், பி.எஸ்.ஜி. குழுமத்தின் குடும்பச் சொத்தா?’ என்று வழக்கறிஞர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விதான் இப்போது கோவை யின் சென்சேஷனல் டாபிக். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், அரசுத் துறைகள் மற்றும் அதிகார மையங்களின் நடவடிக்கைகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்து கொள்வதில் ஆர்வம் நிரம்பியவர். சமீபத்தில் கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாக அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அந்தச் சட்டத்தின் மூலம் திரட்டிய போதுதான், அதிர்ந்து போயிருக்கிறார். இனி லோகநாதன் பேசுகிறார்.

''உலகப் போர் நடந்த சமயம், காயம்பட்ட வீரர்களை களத்தில் இருந்து தூக்கிவந்து சிகிச்சை தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான சேவை அமைப்புதான், இந்திய செஞ்சிலுவை சங்கம்.

மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா?

போருக்குப் பிறகும் பல சேவைகளை மக்களுக்குச் செய்வதற்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. நாடு முழுக்க இருப்பது போன்றே, கோவையிலும் இந்த அமைப்பு இருக்கிறது. இதில்  வருத்தம் என்னவென்றால், இந்த சங்கம் கோவையில் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களையும், மருத்துவ மனையையும் நடத்தும் பி.எஸ்.ஜி. குடும்பத்தின் சொத்தாகிவிட்டது என்பதுதான். கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகள் பட்டியலை புரட்டிப் பார்த்தாலே இது புரியும். 1993 முதல் 2004 வரை இந்த சங்கத்தின் சேர்மனா, பி.எஸ்.ஜி. குடும்பத்தின் சந்திரகாந்தி கோவிந்தராஜூலு இருந்தாங்க. இந்த காலகட்டத்தில் செய லாளரா இருந்த அவங்க மருமகளான நந்தினி ரங்கசாமிதான் இப்போ சேர்மன் பதவியில இருக்காங்க.

நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவங்களும் இப்போ இருக்கிறவங்களும் பெரும்பாலும் பி.எஸ்.ஜி-யோடு தொடர்பு

மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா?

உள்ளவங்கதான். முரளி என்பவர் பொருளாளர் பொறுப்பில் கிட்டத்தட்ட 14 வருஷமா இருக்கார். பொது  சேவையில் இருப்பவர்கள் அந்தப் பதவியை தன்னோட சொந்த வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது. ஆனா இங்கே நடந்திருக்கிற கதையே தனி. கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பா இரத்த தான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் நிறைய நடந்திருக்கு. இதுல பெரும்பான்மையா பலன் அடைஞ்சது நந்தினி குடும்பத்துக்குச் சொந்தமான பி.எஸ்.ஜி. மருத்துவமனைதான். இதுதவிர விளையாட்டு, நடன போட்டிகள் எல்லாமே பி.எஸ்.ஜி. நிறுவனத்தின் கிருஷ்ணம்மாள் கல்லூரியிலே நடத்தப்பட்டிருக்கு.

2010-ல் ஹூண்டாய் சான்ட்ரோ காரை ரெஃப்கோ வங்கியிடம் லோன் மூலம், இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்காக வாங்கி னாங்க. அந்தக் கார் இப்போது யாருடைய பயன்பாட்டில் இருக்கிறது என்பது தெரிய வில்லை. இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக விரும்புபவர்களை சாதி, மொழின்னு எந்த பாகுபாடும் இல்லாம சேர்க்கணும் என்பதுதான் விதி.  ஆனா, கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினர் ஆவது பச்சைத் தண்ணியில நெய் எடுக்கிறதுக்கு சமம். அவ்வளவு சீக்கிரம் வெளி ஆட்கள் யாரையும் சேர்க்க மாட்டாங்க. இப்போதைய உறுப்பினர் லிஸ்டை எடுத்துப் பார்த்தா, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியோட தாளாளர், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளியோட தலைமை ஆசிரியைன்னு அவங்க ஆட்களைத்தான் உறுப்பினராக்கி இருக்கிறாங்க.  இத்தனை லட்ச மக்கள் இருக்கிற கோவையில், இந்த இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் 700  உறுப்பினர்கள் கூட இல்லைங்கிறது கேவலமான விஷயம். கடந்த அஞ்சு வருஷத்தில 13 பேரைத்தான் புதிய உறுப்பினராக்கி இருக்காங்க. இந்த நிலைக்கு ஒரே காரணம் இந்த சங்கத்தை, தன் கையில வெச்சிருக்கிற பி.எஸ்.ஜி. குடும்பத்தின் கெடுபிடிதான். கோவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக இருக்கும் கலெக்டர் கருணாகரன், இந்த விவகாரத்தை ஆராய்ந்து வெளிப்படையான நடவடிக்கை எடுத்து, சாமான் யனும் இந்த அமைப்பின் உறுப்பினராவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கணும். இதில் நடந்திருக்கும் தவறுகளை ஜனாதிபதி வரையிலும் கொண்டு செல்லப் போகிறேன்'' என்று பொரிந்து தள்ளினார்.

மாமியார், மருமகளுக்கு மட்டும்தான் பதவியா?

செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மன் நந்தினியைத் தொடர்பு கொண்டோம். பூங்கோதை என்பவர்தான் பேசினார். நாம் கேள்விப்பட்ட ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் சொல்லி விளக்கம் கேட்டோம். ''மேடத்துக்கிட்ட இதைக் கொடுத்திடுறோம். மூன்று நாட்கள் டைம் கொடுங்க. மேடம் உங்களுக்கு விளக்கம் சொல்லுவாங்க'' என்று சொன்னார். நாம் காத்திருந்தும் பதில் இல்லை. அதனால் மீண்டும் தொடர்பு கொண்டோம். ''நந்தினி மேடம் இப்போ ரொம்பவும் பிஸியா இருக்காங்க. அதனால உங்ககிட்ட பேச முடியாது. நீங்க சொன்ன புகார்களுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு சொல்லிடச் சொன்னாங்க...'' என்று பூங்கோதையே நமக்குப் பதில் கொடுத்தார். நந்தினி இனிமேல் விளக்கம் கொடுத்தாலும் பிரசுரம் செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம்.

கோவை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் பேசினோம். ''நீங்க சொல்லித்தான் இவ்வளவு பிரச்னை இருப்பது தெரிகிறது. உடனே விசாரிக்கிறேன்'' என்று சொன்னார்.

என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்.