Published:Updated:

போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

பரிதாப நூலகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

கோட்டூர் நூலகப் பிரச்னையில் வீசிய புயல் இன்னும் ஓயாத நிலையில், கிளை நூலகங் களை வைத்து அடுத்த புயல், மையம் கொண்டுள்ளது. 

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கிளை நூலகங் கள் உள்ளன. அதில் பல நூலகங்கள் சரியாகப் பராமரிக்கப்படுவது இல்லை. சில நூலகங்களில் அடிப்படை வசதியே இல்லை என்றும் அவ்வப்போது புகார்கள் கிளம்பும்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள மாவட்டக் கிளை நூலகம் தொடங்கப் பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டன.  இந்த நூலகத்தில்தான் பிரச்னை.

நூலகத்துக்கு அருகே குடி இருக்கும் சட்டக் கல்லூரி மாணவரான சரவணகுமார் நம்மிடம், ''ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைதான் இந்த நூலகத் தைத் திறக்கிறாங்க. நூலகம் திறந்தாச் சேன்னு உள்ளே போனா யாரும் இருக்க மாட்டாங்க. நூலகத்தின் பொறுப் பாளரும், கதவைத் திறந்து வச்சிட்டு எங்காவது போயிடுவார். அங்கே இருக்கும் புத்தகங்களை யாராவது தூக்கிட்டுப் போனாகூட கேட்க ஆள் கிடையாது.

போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

நூலகம் திறக்காத நாட்களிலும் மக்கள் வந்து போன மாதிரி, அவரே கையெழுத்து போட்டுக்கிறார்.

போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

போன வாரத்தில் ஒரு நாள் நூலகம் முழுசா மூடிக் கிடந்தது. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை எட்டிப் பார்த்துட்டே இருந்தேன். கடைசிவரை திறக்கவே இல்லை. ஆனா, அடுத்த நாள் போய் வாசகர்கள் கையெழுத்துப் போடும் ரிஜிஸ்டரைப் பார்த்தால், முந்தின நாளில் 110 பேர் வந்துட்டுப் போனமாதிரி கையெழுத்து இருக்குது. எல்லாமே ஒரே ஆளுடைய கையெழுத்து என்பதை ஒரு சின்னக் குழந்தைகூட கண்டுபிடித்து விடும்.

நூலகம்தான் இப்படின்னா, அதுக்கு வெளியே குப்பைகள் தேங்கிக் கிடந்து துர்நாற்றம் வீசிக்கிட்டே இருக்கும். யாரும் நிம்மதியா உள்ளே உட்கார்ந்து படிக்கவே முடியாது. இதை அகற்ற நூலகர் எந்த முயற்சியும் செய்வதே இல்லை.  பேருக்காக ஒரு நூலகம் இருக்கே தவிர, இதனால் உண்மையில்

போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. ஒரு டாஸ்மாக் கடை மூடி இருந்தால் அதிகாரிங்க சும்மா இருப்பாங்களா? அதிரடி நடவடிக்கை எடுத்து திறக்க மாட்டாங்க... ஆனா, நூலகம் என்பதால் இப்படி அலட்சியமாக இருக்கிறாங்க'' என்று வேதனைகளைக் கொட்டினார்.

நாமும் அந்த நூலகத்துக்கு பல முறை சென்று பார்த்தோம். நாம் செல்லும் போதெல்லாம் நூலகம் பூட்டித்தான் கிடந்தது.

போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

ஒரு வாரம் காத்திருந்தோம். நூலகம் திறக்கப்பட்டதும், நூலகர் மோகனசுந்தரத்தைப் பிடித்தோம். ''நானே மூணு நூலகத்துக்குப் போகணுங்க. நான் மத்த இடத்துக்குப் போறது மக்களுக்குத் தெரியாது. அதனால புகார் செய்து இருப்பாங்க. மத்தவங்க கையெழுத்தை நான் எதுக்கு சார் போடணும். படிக்கவரும் ஆட்கள் போடும் கையெழுத்துதான் எல்லாமே! மக்களுக்கு சேவை செய்யணும்னுதான் நான் இந்த வேலைக்கு வந்திருக்கேன். என் மீது குறை சொல்வது அந்த ஆண்டவனுக்கே அடுக் காது...'' என்று போட்டுத் தாக்கினார்.

நூலகத் துறையின் இயக்குனர் மாதேஸ் வரனைச் சந்தித்து இந்த விவரத்தைச் சொன்னோம். உடனே சம்பந்தப்பட்ட நூலகரை போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். பிறகு நம்மிடம், ''இது போலத்தாங்க பலரும் பண்ணிட்டு இருக்காங்க. எங்களுக்கு தகவல் வந்தால் உடனடியா கூப்பிட்டு கண்டிக்கிறோம். நூலகத்தை கண்காணிக்க ஒரு ஆய்வாளர் இருக்கிறார். அவர் இரண்டு வாரமாக விடுப்பில் இருக்கிறார். இது தெரிஞ்சுதான் பலரும் அலட்சியமா இருக்காங்க. நூலகர்கள் யாராவது இனி இது போல அலட்சியமாக  நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  நூலகங்களை மேம்படுத்த அரசு தரப்பில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். 50 நூலகத்துக்கு மேல் நூலகர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. கூடிய சீக்கிரமே எல்லா பிரச்னைகளையும் சரி செய்வோம்'' என்று சொன்னார்.

அறிவை விருத்தி யாக்கும் நூலகத்தில் காட்டப்படும் அலட் சியம், எதிர்கால சந்ததிக்குச் செய்யும் துரோகம்!

- நா.சிபிச்சக்கர வர்த்தி,

பா.பற்குணன்

படங்கள்: பா.காயத்திரி அகல்யா

 மகளிர் நூலகத்திலும் நாற்றம்!

போலி கையெழுத்து... குப்பை நாற்றம்!

சேப்பாக்கம், பெல்ஸ் ரோட்டில் மகளிருக்கு என்று பிரத்யேகமான மகளிர் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.  நூலகத்தின் எதிரே உள்ள மருத்துவமனையின் கழிவுப் பொருட்களை நூலகத்துக்கு அருகிலேயே கொட்டுகிறார்கள். ஹோட்டல்களில் கெட்டுப் போன சாப்பாட்டில் தொடங்கி எச்சில் இலை வரை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நூலகத்தைத் திறந்து வைத்து நூலகரால்கூட உள்ளே நிம்மதியாக உட்கார முடியாது. அதனால் பெண்கள் எட்டியே பார்ப்பது இல்லை. மாநகராட்சியில் பல முறை புகார் சொல்லியும் யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. படிப்பதற்கு ஆட்கள் வராமல், அத்தனை புத்தங்களும் ஏக்கத்தோடு காத்திருக்கிறது. எப்போது விமோசனம் கிடைக்குமோ?

 ''கட்டண வசூல் உரிமை என்னிடம் இல்லை!''

கடந்த 4.12.2011 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'சசிகலா பேரைச் சொல்லி அடாவடி வசூலா?’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி குறித்து, பி.சி.எல்.டி நிறுவனத்தின் உரிமையாளரான ஜி.கெங்கவராஜன் நமக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ''கோயம்பேடு வாகன நிறுத்த ஒப்பந்தம் எமது நிறுவனத்துக்கு கிடைக்கக் கூடாது என்று, கடந்த ஆட்சியில் இருந்த ஒப்பந்ததாரர் பல்வேறு முயற்சிகளைச் செய்தார். அவர் ஒப்பந்த காலம் முடிந்ததும், இப்போது சி.எம்.டி.ஏ-வே நேரடியாக கட்டண வசூல் செய்வதாக அறிகிறேன். ஆனால், எனது வசம்தான் வாகன கட்டண வசூல் உரிமை இருப்பது போல், ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர் பெயரோடு சேர்த்து வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது'' என்று கூறி இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு