Published:Updated:

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

திருநள்ளாறு திகுதிகு

பிரீமியம் ஸ்டோரி
##~##
கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

னிப்பெயர்ச்சி நெருங்கிவரும் நிலையில், திருநள்ளாறில் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மீதமுள்ள அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத் திட்டங்களை வகுக்கின்றன. எல்லாக் கட்சிகளும் ஒன்றுகூடிப் போராடும் அளவுக்கு, அப்படி என்னதான் பிரச்னை? 

போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்கும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணனைச் சந்தித்தோம். ''திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயி லுக்கு தொண்டூழியம் செய்வதற்கு என்றே சில குடும்பங்கள் இருக்கின்றன. கோயில் சேவை செய்வதற்காக அந்தக் குடும்பங்களுக்கு அரசர்கள், சில கிராமங்களைத் தானமாக அளித்தார்கள். பூண்முலையாள்மங்களம் (பூமங்களம்), அத்திப்படுகை, பேட்டை, கீழாவூர், கார்க்கமொழி ஆகிய ஐந்து கிராமங்களில் அந்த மக்கள் வசிக்கிறார்கள். கோயிலுக்குத் தொண்டு செய்தும், தங்களுக்கு வழிவழியாய் இருந்துவரும் நிலங்களை சாகுபடி செய்தும் வந்தார்கள். விளையும் நெல்லில் கோயிலுக்கும் ஒரு பங்கை கொடுத்து வந்தவர்களுக்குத்தான் இப்போது சிக்கல்.

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

இப்போது பூமங்களம் கிராமத்தின் ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் கையகப்படுத்தப் போவதாக

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களைக் கேட்காமலே, இவர்களுக்குத் தெரியாமலே அரசிதழிலும் இதை வெளியிட்டு உள்ளார்கள். இப்போது, 'இழப்பீட்டை வாங்கிக்கொண்டு நிலத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று மிரட்டுகிறது அரசு'' என்று சொன்னார்.

ஏற்கெனவே கீழாவூர் கிராம விவசாயிகளிடம் இருந்த நிலத்தைப் பிடுங்கி ஓ.என்.ஜி.சி-யிடம் விற்றது கோயில் நிர்வாகம். அப்போதே இந்தக் கிராமங்களின் நிலத்தையும் சேர்த்து விற்க முயன்றார்கள். ஆனால், ஐந்து கிராம மக்களும் ஒன்றிணைந்து போராடி, அந்த முயற்சியை முறியடித்தார்கள். இப்போது,

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

திருநள்ளாறு கோயில் நகர வளர்ச்சித் திட்டத்துக்காக பூமங்களம் கிராமத்தின் விளைநிலங்களை கையகப்படுத்தப் போவதாக முடிவு செய்திருக்கிறது புதுவை அரசு.

ஐந்து கிராம கரைவழிக்காரர்கள், ஏர்க்காரர்கள் (நிலத்தை வைத்திருப்ப வர்களை அப்படித்தான் அழைக் கிறார்கள்) மற்றும் பொதுமக்களின் சார்பில் பழனிவேலு நம்மிடம் பேசினார். ''மிக அதிக வருவாய் உள்ள கோயிலாக இதனை மாற்றியதில் எங்கள் பங்கு மிகஅதிகம். வருமானம் இல்லாத காலகட்டங்களில் நாங்கள் கோயிலுக்குக் கொடுத்த உழைப்பு மிகப்பெரிது. திருநள்ளாறை கோயில் நகரமாக்கி வளர்ச்சியைப் பெருக்குவது, எங்களுக்கும் உடன்பாடானதுதான். அதற்காக, 'மூன்றரை வேலி நிலம் தேவைப்படுகிறது’ என்று அதிகாரிகள் கேட்டபோது உடனே தந்தோம். ஆனால் அதைக் கொடுத்தபிறகு, இப்போது 15 வேலி நிலத்தையும் மொத்தமாக எடுத்துக் கொள்ளப் பார்க் கிறார்கள்.  இது என்ன நியாயம்? இது நம்பிக்கை துரோகம் இல்லையா? அதனால்தான் இதை எதிர்த்து ஐந்து கிராமங்களின் சார்பில் தீவிரமாகப் போராடிவருகிறோம். கட்சி வித்தியாசம் பாராமல் ஒட்டுமொத்த கட்சிகளும் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் சனிப்பெயர்ச்சி விழாவின்போது, மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்'' என்று ஆவேசப்பட்டார்.

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

''ஆயிரக்கணக்காண வருடங்களாக எங்களிடம் இருக்கும் உடைமைகளை, இன்று வந்த ஒரு சிலர் அபகரிக்க நினைத்தால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? கோயிலுக்கு என்று கேட்டால்கூட கொடுக்கலாம். ஆனால், காரைக்காலில் இருக்கும் கல்லூரிகள், பள்ளிகளை இங்கு இடமாற்றம் செய்வதற்காகக் கேட்கிறார்கள்.  அதற்குத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசுநிலங்கள் இருக்கிறதே. எங்களுக்குத் தெரியாமல், எப்போது அவர்களாகவே முடிவு எடுத்தார்களோ இனி ஒரு குழி நிலம் கூட தரமாட்டோம்.

கையகப்படுத்தும் ஒரு குழி (144 சதுரஅடி) நிலத்துக்கு

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

1,000 என்று விலை நிர்ணயம் செய்துள்ளது, கோயில் நிர்வாகம். ஆனால், இந்த நிலத்தையட்டிய இடத்தின் சந்தை மதிப்பு குழி ஒன்றுக்கு

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

1.5 லட்சம்.  நிர்வாகம் கொடுக்கும்

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

1,000 பணமும் அப்படியே விவசாயிக்குக் கிடைக்காது. குத்தகைப் பாத்தியம் மூன்றில் ஒரு பங்குதான். அதனால் ஒரு குழி நிலத்துக்கு

கோயில் நிலத்தைப் பறிப்பது, கல்லூரிக்காகவா?

333.33தான் விவசாயிக்குக் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் இழப்பீட்டுக்கே போகவில்லை. நிலத்தை தரமுடியாது என்று உறுதியாய் மறுக்கிறார்கள்'' என்கி றார் பூமங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமசாமி.

இந்தப் பிரச்னை குறித்து திருநள்ளாறு கோயிலின் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வத்திடம் பேசினோம். ''அது அவர் களிடம் இருப்பதால் மட்டுமே, அது அவர்கள் நிலம் என்று ஆகிவிடுமா? அது எப்போதுமே கோயில் நிலம்தான். இப்போது நிலத்துக்குத் தேவை ஏற்பட்டி ருக்கிறது, அதனால் திரும்ப பெற்றுக் கொள்கிறோம். கோயில் நிலத்தை கோயிலுக்காக எடுத்துக்கொள்வதில் என்ன தவறு? கோயில் வளர்ச்சிக்காக 160 கோடி ரூபாயில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை முட்டுக்கட்டை போட லாமா? அவர்களைக் கேட்காமல் முடிவு எடுக்கவில்லை. இரண்டு முறை அவர்களை அழைத்துப் பேசி ஒப்புதல் வாங்கித்தான் எடுக்கிறோம். இது அரசின் கொள்கை முடிவு. செய்தித்தாள்கள், அரசிதழ்களில் முறையாக வெளியிட்டு இருக்கிறோம். இப்போதுகூட எல்லா நிலத்தையும் கேட்கவில்லை.  32.5 ஹெக்டேர் மட்டும்தான் கையகப்படுத்தப் போகிறோம். மீதமுள்ளவை விவசாயிகளிடம்தான் இருக்கிறது'' என்று பதில் சொன்னார்.

ஆக, இருதரப்பும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் சனி தோஷத்தைப் போக்கும் திருநள்ளாறு சனி பகவான்தான், இந்தப் பிரச்னையையும் சுமுகமாகத் தீர்க்கவேண்டும்!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு