Published:Updated:

புனித ஆன்மிக மாவட்டம் கோரும் கும்பகோணம்!

புனித ஆன்மிக மாவட்டம் கோரும் கும்பகோணம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
புனித ஆன்மிக மாவட்டம் கோரும் கும்பகோணம்!

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்து, 'தென்னாட்டின் புனித ஆன்மீக மாவட்டம்’ என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏரியா மக்களிடையே வலுத்து வருகிறது! 

குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் சத்திய நாராயணன், 'சோழ மன்னர்களின் தலைநகரங்களாக உறையூரும், கும்பகோணம் அருகே உள்ள ஆவூரும் திகழ்ந்தன. சோழர்களுக்குப் பின் ஆட்சி செய்த நாயக்கர்களும், மராட்டியர்களும் குடந்தையை இணை தலைநகரமாக வைத்திருந்தனர். 1860-ல் காவிரி டெல்டா பகுதிக்கே தலைநகராக இருந்தது. 1854-ல் ஒரு மாகாண ஆங்கிலப்பள்ளி துவக்கப்பட்டு 1864-ல் அதுதான் கலைக் கல்லூரியாக மாற்றப்பட்ட அரசினர் ஆடவர் கல்லூரி. இதை 'கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா’ என்று சொல்வார்கள்.  கணிதமேதை ராமானுஜம், உ.வே.சாமிநாதய்யர் போன்றவர்கள் இங்கு படித்தவர்கள். அதனால் கும்பகோணத்துக்குத் தலைநகர் ஆகும் அத்தனை தகுதிகளும் இருக்கின்றது.

புனித ஆன்மிக மாவட்டம் கோரும் கும்பகோணம்!

1866-ம் ஆண்டு நகராட்சி ஆக்கப்பட்ட ஊர் இது. உலகப் புகழ் பெற்ற சுவாமி மலை ஜம்பொன் தெய்வ விக்கிரகங்கள், காஞ்சிப் பட்டுக்கு இணையான திருபுவனம் பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்

புனித ஆன்மிக மாவட்டம் கோரும் கும்பகோணம்!

கழகத்தின் மத்திய கிடங்கு, தாராசுரம் காய்கறிச் சந்தை, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், மகாமகத் திருவிழா, ஐராவதேஸ்வரர் கோயில் என வரலாற்று பின்னணியும் தொழில் சிறப்புகளும் கும்பகோணத்துக்கு இருக்கிறது.

'ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியின் அடிப்படையிலும் ஒரு மாவட்டம் அமைக்கும் காலம் விரைவில் வரும்’ என்கிற சட்டமன்ற அறிவிப்பின் அடிப்படையில் பாபநாசம், கும்பகோணம், குத்தாலம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கி கும்பகோணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக வணிகர் சங்கம், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் உட்பட அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறோம். அப்போதுதான் இந்த நகரம் மென்மேலும் நல்ல வளர்ச்சி அடையும்' என்று காரணங்களை பட்டியல் இட்டார்.

இதுகுறித்துப் பேசிய அ.தி.மு.க-வின் கும்பகோணம் நகர் மன்றத் தலைவி ரெத்னா சேகர், 'கும்பகோணத்தை சிறப்பாக மாற்றி வருகிறோம். கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வானங்களுக்கு நுழைவு வரி ரத்து செய்துள்ளோம். எதற்கும் வளைந்து கொடுக்காமல் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம். கூடுதலாக டவுன் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேலை நடந்து வருகிறது. விரைவில், கும்பகோணம் ஒரு மாதிரி நகரமாக அமையும். கோயில் மாவட்டம் என்று ஆக்கப்பட வேண்டும் என்பது மக்களின்  நீண்ட நாள் கோரிக்கை. அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறோம். நல்ல பதில் கிடைக்கும்'' என்றார்.

- சி.சுரேஷ், படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு