Published:Updated:

பணம் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க...!

வேதனையில் திருவெறும்பூர் விவசாயிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
பணம் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க...!

ந்தியா ஒரு விவசாய நாடு. நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான் என்று மார்தட்டிக் கொண்டாலும், கடைநிலை விவசாயிகளின் நிலைமை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இந்த சம்பவம். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் விளைந்த பயிர்கள் மொத்தமும், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமாகிப் போனது. பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்திருந்த போதும், அந்தப் பணத்தை இன்னமும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது இன்சூரன்ஸ் நிறுவனம். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன், ''மழையில் பயிர்கள் சேதம் அடைந்ததற்கான அரசு நிவாரணமே பல போராட்டங்களுக்குப் பிறகுதான் எங்களுக்குக் கிடைச்சது. திருவெறும்பூர் ஒன்றியத்தில் மொத்தம் 4,000 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. இதனை நம்பி 2,836

பணம் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க...!

விவசாயிகள் இருக்கிறோம். அவ்வளவு பேரும் பயிருக்குக் காப்பீடு செய்து இருந்தோம். இழப்பீட்டுத் தொகையை கொடுக்க இழுத்தடிப்பதைக் கண்டித்து பேரணி நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனாலும், எதுவும் நடக்கவில்லை. இதற்காக சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. அடுத்த கட்டமாக என்ன செய்றதுன்னே எங்களுக்குப் புரியலை'' என்று வேதனைப்பட்டார்.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் முருகேசன், ''விவசாயிகளோட நிலைமை ரொம்பவும்

பணம் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க...!

கேவலமா போயிட்டு இருக்கு. கேள்வி கேட்க யாரும் இல்லை. எங்களை கண்டுக்கவும் ஒரு நாதி இல்லை. வேளாண்மைத் துறை அமைச்சர் எங்க கஷ்ட நஷ்டத்தைப் புரிஞ்சுக்கவே இல்லை'' என்று வெடித்தார்.

மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ரவியைத் தொடர்பு கொண்டோம். '' இந்த பிரச்னைக்கு முழுப் பொறுப்பும் இன்சூரன்ஸ் நிறுவனம்தான். நாங்களும் அரசு சார்பாக பலமுறை அவர்களிடம் பேசி விட்டோம். கூடிய சீக்கிரமே அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று சொன்னார்.

குற்றம் சுமத்தப்படும் நேஷனல் அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல நிர்வாக இயக்குனர் அன்பரசனிடம் பேசினோம். ''தமிழ்நாடு முழுக்க விவசாயிகளுக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி இருப்பதால்தான் தாமதம் ஏற்படுகிறது. சேத விவரங்களை நாங்கள் ஆய்வு செய்து டெல்லி அலுவலகத்துக்கு அனுப்பி விட்டோம். அவர்கள் அனுமதி கொடுத்ததும் அரசு மூலமாக விவசாயிகளுக்கு பணம் வழங்கி விடுவோம். சீக்கிரமே விவசாயிகளுக்கு பணம் கொடுக்க இருக்கிறோம். யாரும் வருத்தப்பட வேண்டாம்'' என்றார் உறுதியாக.

காப்பீடு செய்வதே இழப்புகளைச் சரிக்கட்டத்தான். அதை இழுத்தடிப்பது நியாயமா?

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு