Published:Updated:

தரையில் கோப்புகள்... பாயில் அதிகாரிகள்!

விளவங்கோடு விபரீதம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தரையில் கோப்புகள்... பாயில் அதிகாரிகள்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத பட்​சத்தில், அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிடுவது வாடிக்கைதான். ஆனால், நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு அரசு இழப்பீட்டுத் தொகை தரவில்லை என்று காரணம் காட்டி,  தாலுகா அலுவலகத்தையே ஜப்தி செய்து உத்தரவிட்டுள்ளது குழித்துறை நீதிமன்றம்! 

நாகர்கோவில், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குழித்துறைப் பாலம். இந்த பாலம் பழுது அடைந்ததால், கடந்த 97-ம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பணிகள் முடிந்து கடந்த 2004-ம் ஆண்டே புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கி விட்டது. ஆனால், பாலம் கட்ட நில ஆர்ஜிதம் செய்யப்பட்டதில் அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை குறைவு என்று கடந்த 97-ம் ஆண்டு பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு எதிராக வேதநாயகம், ஜார்ஜ் ஆகியோர் குழித்துறை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில்தான் விளவங்கோடு தாலுகா அலுவலக கட்டடத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதனால், கடந்த 10-ம் தேதி முதல் அலுவலக வளாகத்தில் தரையில், பாய் விரித்து அமர்ந்து வேலை செய்கின்றனர் தாலுகா அலுவலக ஊழியர்கள்.

தரையில் கோப்புகள்... பாயில் அதிகாரிகள்!

இதுகுறித்து, குழித்துறையை சேர்ந்த வக்கீல் சாவார்க்கர் நம்மிடம் பேசினார்.

''இந்த வழக்கில் 8,11,119 ரூபாய் இழப்பீடு வழங்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,

தரையில் கோப்புகள்... பாயில் அதிகாரிகள்!

இழப்பீடு தரப்படவில்லை. அந்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வழக்கு தொடர்ந்தார்கள். அதில்தான், தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படுவது இது ஒன்றும் முதல் தடவை இல்லை. இதற்கு முன்பும் பல முறை இந்த அலுவலகத்தை ஜப்தி செய்துள்ளார்கள். சமீபத்தில்கூட பொதுப் பணித்துறைக்கு தர வேண்டிய பாக்கி பணத்துக்காக ஜப்தி செய்தார்கள்.

விளவங்கோடு தாலுகாவில் 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் இருக்கிறது. அங்கு நில வரி கட்ட முடியவில்லை. கேட்டால், வரி ரசீது புத்தகங்கள் தாலுகா அலுவலகத்தில் இருக்கிறது என்கிறார்கள். விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நான்கு ஜீப்புகள் உள்ளன. அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தால் அதையும் சேர்த்து ஜப்தி செய்து விடுவார்கள் என்று அதை வேறு எங்கோ மறைத்து நிறுத்தி வைத்துள்ளார்கள். அதனால் மக்கள் பணி எதுவும் உருப்படியாக நடக்க​வில்லை. விரைவில் அலுவலகத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்கிறார்.

இதுகுறித்து பத்மநாபபுரம் கோட்டாட்சியர் மோகன சந்திரனிடம் கேட்டோம். ''அலுவலகத்தை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த தாலுகாவுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரங்களை வசூலித்து வருகிறோம். விரைவில் அலுவலகம் மீட்கப்படும்...'' என்றார்! வேகமா செய்ங்க...

- என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு