Published:Updated:

என்னதான் செய்தார் மா.சு.?

திக்குத் தெரியாத சென்னை

பிரீமியம் ஸ்டோரி
##~##
என்னதான் செய்தார் மா.சு.?

ழை பெய்தால் சென்னையின் சாலைகள் பல்லாங்குழிகளா கின்றன. 'இதற்குக் காரணம் முந்தைய மாநகராட்சியின் செயலற்ற தன்மைதான்’ என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை மாநக ராட்சியை ஆட்சி செய்த மேயர் மா.சுப்பிரமணியன் என்னதான் செய்தார் என்று அவரிடமே கேட்டோம். 

''குடிநீர் வாரியம், தொலைத் தொடர்புத் துறை, மின் வாரியம் என்று ஆளாளுக்கு சாலைகளை அடிக்கடி தோண்டுகிறார்கள். அதனால், சாலைகளின் தரம் பாதிக்கப்படுகிறது. மேலை நாடுக ளில் எல்லாம் சாலையில் பள்ளம் தோண்டினால், அந்த இடத்தில் பள்ளம் தோண்டியதற்கான அடையாளமே இல்லாத அளவுக்கு, உடனடியாக சீரமைத்து விடுவார்கள். ஆனால், இங்கு அப்படிச் செய்யவதில், துறை ரீதி யான சிக்கல்கள் உள்ளன.

சென்னை தெருக்களின் நீளம் 3,300 கி.மீ. இதில், 950 கி.மீ தூரத்துக்குத்தான் மழை நீர் வடிகால்வாய் உள்ளது. மழை நீர் நகருக்குள் தேங்குவதைத் தடுக்க, மத்திய அரசிடம் இருந்து 1,447 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு, தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் பணிகள் தொடங்கப்பட்டன. அது மத்திய அரசின் பணி என்பதால் தொடர்ந்து நடக்கத் தான் செய்கிறது. நானும் கண் காணித்துக்கொண்டு வருகிறேன். இந்தப் பணிகள் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். பிறகு, சென்னை நகரில், தண்ணீர் தேங்கும் பிரச்னை இருக்காது.

என்னதான் செய்தார் மா.சு.?

கடந்த ஆட்சியில் மாநகராட்சி சார்பில், தனியார் மருத்துவமனை களுடன் இணைந்து மழைக் காலத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டன. ஒரே நாளில் 155 இடங்களில் முகாம்கள் நடத்தி லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தோம். இதனால், தொற்று நோய் எதுவும் ஏற்படவில்லை.

என்னதான் செய்தார் மா.சு.?

ஆனால், இன்றைய மாநகராட்சி நிர்வாகம் அப்படி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. கடந்த ஆட்சியின்போது தினமும் 300-க்கும் மேற்பட்டோர் என்னைத் தொடர்புகொண்டு, பிரச்னைகளைச் சொல்வார்கள். சாத்தியம் உள்ள பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.

ஒரு முறை நான் சிங்கப்பூரில் இருந்தபோது, இரவு 1 மணிக்கு பெரம் பூரில் இருந்து ஒருவர் கூப்பிட்டு, தெருவில் வெறிநாய்த் தொல்லை தாங்க முடியவில்லை என்று குடிபோதையில் புலம்பினார். நான் அங்கே இருந்தபடியே தெருவில் இருந்த நாய்களை அப்புறப்படுத்தும் வேலைகளைச் செய்தேன். அடுத்த நாள் அவருக்கு போன் செய்து, நாய்களை அப்புறப்படுத்திய தகவலைச் சொன்னேன். ஆனால் அவரோ, 'நான் உங்களுக்கு போன் செய்யவே இல்லை’ என்று சாதித்தார் என்பது தனிக் கதை.

அதேபோல், குப்பை அள்ளும் வாகனம், கால்வாய்களில் அடைப்பு நீக்கும் வாகனம், சாலையை சீரமைக்கும் வாகனம் என அனைத்து வசதிகளுடன் கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் சென்று, 'மக்களைத் தேடி மாநகராட்சி என்ற குறை தீர்க்கும் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தினேன். அந்த இடத்திலேயே மனு வாங்கி அப்போதே குறைகளை நிவர்த்தி செய்தோம்.

கடந்த மாதம் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தபோது, ஏராளமானோர் எனக்கு போன் செய்து, வீட்டைவிட்டு வெளியே வர முடியாத அளவுக்குத் தண்ணீர் தேங்கி இருப்பதாகச் சொன்னார்கள். நானும், மாநகராட்சி அலுவலர்களுக்கு போன் செய்து அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தேன்.  மேயராக இருப்பவர் தினமும் குறைந்தது பத்து இடங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நகரின் பல்வேறு பிரச்னைகளைத் தெரிந்துக்கொள்ள முடியும். பலதரப்பட்ட மக்களின் குறைகளைத் தீர்க்க முடியும்.

மேலும், மேயர் வருகிறார் என்றால், அந்தந்தப் பகுதிகளை சுண்ணாம்பு தெளித்து சுத்தப் படுத்தி வைப்பார்கள். அதனால், சர்ப்ரைஸ் செக்கிங் அவசியம். நான் தினமும் 10 இடங்களுக்கு சென்று வந்தேன்.

கடந்த மாதம் மழை பெய்தபோது 10 நாட்களுக்குள் சென்னையின் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்று சொன்னார். ஆனால், அந்தக் கெடு முடிந்து பல நாட் கள் ஆகியும் சாலைகள் அப்படியேதான் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் வார இறுதி நாளில், தங்களது கலா சாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை பொதுஇடத்தில் நடத்துவார்கள். அதே போல் சென்னையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று, விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைக்கப்பட்டது. ரிப்பன் மாளிகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை என் கனவுத் திட்டங்கள். நான் மேயர் பொறுப்பு வகித்த காலத்தில் 4,000 கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடங்களை மீட்டு இருக்கிறேன். ஆனால் இந்த ஆட்சியிலோ, கிண்டியில் ஒரு ஹோட்டல் அருகில் மீட்கப்பட்ட இடத்தை, அந்த ஹோட்டல்காரரிடமே பராமரிக்கச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நான் அ.தி.மு.க. மேயரைப்பற்றி குறை சொல்லவில்லை. இதுபோன்ற  பணிகளை அவர் செய்தால்தான், மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் ஏற்படும்'' என்றார்.

இதற்கு எல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார் சைதை துரைசாமி?

- எஸ்.கோபாலகிருஷ்ணன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு