Published:Updated:

பதவியும் போச்சு... உயிரும் போச்சு!

கொதிக்கிறது நீலகிரி அ.தி.மு.க.

பிரீமியம் ஸ்டோரி
##~##
பதவியும் போச்சு... உயிரும் போச்சு!

திர்ச்சி மரணங்கள் அ.தி.மு.க-வை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கின்றன. நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக இருந்த செல்வராஜ், கடந்த 13-ம் தேதியன்று அதிகாலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். 

''விசுவாசத்துக்கு உண்மையான அர்த்தம் செல்வராஜ்தான். போன அஞ்சு வருஷத்துல கொடநாடு விவகாரத்தை வைச்சு தி.மு.க. குடைச்சல் கொடுத்தப்ப எல்லாம், அந்த எஸ்டேட்டுக்கும் பங்களாவுக்கும் ராப்பகலாக் காவல் நாயா இருந்து காத்துக்கிடந்த மனுஷன். இன்னைக்கு எங்க கட்சியில முக்கியப் பதவியில உட்கார்ந்து சொகுசு வாழ்க்கை அனுபவிக்கிறவங்க பலர், அந்த இக்கட்டான கால கட்டத்தில் எஸ்டேட் பக்கம்

பதவியும் போச்சு... உயிரும் போச்சு!

தலைவைச்சுக்கூடப் படுத்தது கிடையாது. கோத்தகிரி, கொடநாடு வட்டா ரத்தில் அ.தி.மு.க-வுக்குன்னு மிகப் பெரிய வாக்கு வங்கியை உருவாக்கின பெருமையும் இவருக்கு உண்டு.

அப்படிப்பட்ட விசுவாசி கேவலமா வீழ்த்தப் பட்டதுதான் பெரிய சோகம். கோவை மண்டலத் தில் எங்க கட்சியோட பவர் சென்டராக இருக்கும் ஒருத்தர், கட்சிப் பதவிக்கு சிலரை நியமிக்கச் சொல்லி செல்வராஜுக்கு உத்தரவு போட்டிருக்கார். ஆனா தகுதி இல்லாத வங்களை நியமிக்க முடியாதுன்னு செல்வராஜ் மறுத்துட்டார். இந்த காரணத்தால்தான் அவருக்கு சட்டமன்றத் தேர்தல்ல ஸீட் கொடுக் காமப் புறக்கணிச்சாங்க. அதுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கினாங்க.

அவரோட பசங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்ல ஸீட் கேட்டப்பவும் கொடுக்கலை. அந்த வெறுப்பில் அவங்க சுயேட்சையாப் போட்டியிட்டு, அமோகமா வெற்றி பெற்றாங்க. அம்மாவைச் சந்திச்சு மன்னிப்பு கேட்டு, ஆசீர்வாதம் வாங்க நினைச்சுக்கிட்டு இருந்தபோதே, மகன்களைக் கட்சியைவிட்டே தூக்கிட்டாங்க. மறுபடியும் மறுபடியும் அவமானப்பட்டார். அதனால மனசு நொந்துபோன செல்வராஜூக்கு, பக்க வாதமே வந்துடுச்சு. மாசக்கணக்கா அம்மாவோட வீட்டு முன்னாடி, அவங்க கண்ல படுற மாதிரி காத்துக்கிடந்தார். ஆனா எந்தப் பிரயோசனமும் இல்லை'' என்று வேதனையோடு சொன்னார்கள் செல்வராஜின் ஆதரவாளர்கள்.

''யார் உண்மை விசுவாசி, யார் விசுவாசியா நடிக்கிறாங்கன்னு பார்த்து ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளணும். இல்லேன்னா, அடுத்த தேர்தலுக்கு முழு விசுவாசத்தோட வேலை செய்ய ஒருத்தனும் இருக்க மாட்டான்'' என்று அ.தி.மு.க-வில் சோகக் குரல்கள் நீலகிரி மலை முழுக்கக் கேட்கின்றன.

ஜெலலிதாவுக்கும் கேட்டால் சரி!

- எஸ்.ஷக்தி, படம்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு