Published:Updated:

‘குண்டாறு , கிருதுமால் நதியில்  மணல் திருட்டா?’ - ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு !

‘குண்டாறு , கிருதுமால் நதியில்  மணல் திருட்டா?’ - ஆய்வு மேற்கொள்ள  நீதிமன்றம் உத்தரவு !
‘குண்டாறு , கிருதுமால் நதியில்  மணல் திருட்டா?’ - ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு !

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் குண்டாறு,கிருதுமால் நதியில் சவுடு மண் பெயரில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடைபெறுகிறதா என்பதுகுறித்து ஆய்வுசெய்து, விரிவான அறிக்கை தாக்கல்செய்ய விருதுநகர் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தனர் அதில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி,வீரசோழன், காரியாபட்டி,உள்ளிட்ட பகுதிகளில் சவுடு மணல் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட விதிமுறையின் கீழ் சவுடு மணல் அள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ளார். ஆனால், சவுடு மணல் அள்ளுவதாகக் கூறி, ஆற்றுமணலை அள்ளுகின்றனர் . மேலும், சவுடு மணல் அள்ளுவதற்கு முறையான சீட்டுகளைப் பெற்று மணல் அள்ளுவதில்லை இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் செய்கின்றன.  விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டாறு,கிருதுமால் நதி,கானல் ஓடை ஆகியவை உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி,காரியாபட்டி, அருப்புக்கோட்டை மற்றும் குண்டாறு,கிருதுமால் நதி ஆகிய பகுதிகளில் சவுடு மணல் என்ற பெயரில் எந்தவித மணல் அள்ளுவதற்கும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுக்கள்  நீதிபதிகள்  அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விருதுநகர் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டங்களில் குண்டாறு,கிருதுமால் நதியில் சவுடு மண் பெயரில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடைபெறுகிறதா என்பதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.