Published:Updated:

‘என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’- டெங்கு தொடர்பாக நீதிபதி காட்டம்

‘என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’- டெங்கு தொடர்பாக நீதிபதி காட்டம்
‘என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’- டெங்கு தொடர்பாக நீதிபதி காட்டம்

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை வரும் 20-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு உயர் நீ்திமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக சிக்குன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பொதுமக்களை அச்சப்படுத்திவருகிறது. இதுபோன்ற காய்ச்சல்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்குத் தனது வீரியத்தைக் காட்டுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காய்ச்சல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ``தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரைப் பாதிக்கும் காய்ச்சல்கள் அதி தீவிரமாகப் பரவிவருகிறது. இதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில்  டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்தும் டெங்கு, பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை வரும் 20-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலருக்கு உயர் நீ்திமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.