Published:Updated:

`எதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை!’ - அரசாணையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

`எதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை!’ - அரசாணையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!
`எதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை!’ - அரசாணையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை நம்பர்-84 பிறப்பிக்கப்பட்டது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அணு ஆயுதங்களைவிட உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள்தான். மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறி வருகிறது. நாம் அன்றாடம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. முக்கியமாக உயிரினங்கள் உட்கொள்ளும் உணவில் ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் கலக்கும்போது, பல்வேறு நோய்களுக்கான அடித்தளத்தைப்போடுகிறது. இதைக் கட்டுப்படுத்த பல முயற்சி செய்துவருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ``தமிழக அரசு கடந்த ஜூன் 25-ம் தேதி அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அந்த அரசாணை மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை விதிக்கும் வகையில் உள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகக் குறைக்க இயலாது. ஆகவே, இந்த அரசாணையை ரத்து செய்து, மத்திய அரசு விதிப்படி, பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது புதிதாக அரசாணையை இயற்றவோ உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, எந்த அடிப்படையில் பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை எண்: 84 பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.