Published:Updated:

`ஏழைவீட்டுப் பிள்ளைகள் கைகளிலும் லேப்டாப் கொடுத்து அழகுபார்க்கிறோம்’ - அமைச்சர் பெருமிதம்

`ஏழைவீட்டுப் பிள்ளைகள் கைகளிலும் லேப்டாப் கொடுத்து அழகுபார்க்கிறோம்’ - அமைச்சர் பெருமிதம்
`ஏழைவீட்டுப் பிள்ளைகள் கைகளிலும் லேப்டாப் கொடுத்து அழகுபார்க்கிறோம்’ - அமைச்சர் பெருமிதம்

``மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 தமிழக அரசின் திட்டங்களுள் ஒன்றான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 287 மாணவர்களுக்கும், அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 283 மாணவிகளுக்கும், பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 361 மாணவிகளுக்கும், தாந்தோணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 150 மாணவ மாணவியர்களுக்கும், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கும், சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 71 மாணவிகளுக்கும், பெரியகுளத்துப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 52 மாணவ, மாணவிகளுக்கும், ஸ்ரீசாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 227 மாணவிகளுக்கும், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 820 மாணவிகளுக்கும், விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 176 மாணவர்களுக்கும் என மொத்தம் 2602 மாணவ, மாணவிகளுக்கு ரூ.92.09 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் வழங்கினார்.



 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பேசும்போது,  ``தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியோடும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலோடும் செயல்படும் தமிழக அரசானது பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2018-2019-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்துக்கு 13,384 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நடப்பாண்டுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி (4.12.2018) அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழைவீட்டுப் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 14 வகையான விலையில்லாப் பொருள்களை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டு செயல்படுத்தினார்.


 

ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் தமிழக அரசு முதலமைச்சர் தொடர்ந்து அந்தத் திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். வசதிபடைத்தவர்களின் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினியை, சாதாரண ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கைகளிலும் கொடுத்து அழகுபார்ப்பது தமிழக அரசு. தமிழகத்தில் 32.40 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. நீட் போன்ற மத்திய அரசின் எந்தவொரு நுழைவுத்தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களை நோக்கி ஸ்மார்ட் வகுப்புகளை தமிழக அரசு விரிவுபடுத்தி வருகிறது. அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு பள்ளிச்சீருடைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கல்வியறிவில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஜெயலலிதா இதுபோன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார். அவரின் எண்ணத்துக்கு வடிவம் கொடுக்கின்ற வகையிலே, தேசிய அளவிலே உயர்கல்வி படிப்போர் 23 சதவிகிதமாக இருக்கும்போதும், தமிழகத்தில் உயர்கல்விப்பயில்வோர் 46.9 சதவிகிதமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் 46 கல்லூரிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. தமிழகத்துக்கான நிதிநிலை அறிக்கையில் 6-ல் ஒரு பங்கு நிதியை கல்வித்துறைக்காக தமிழக அரசு ஒதுக்கி வருகின்றது. மாணவ-மாணவிகளின் நலனுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி வாழ்வில் வெற்றி பெற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்" என்றார்.