பா.ம.க-வை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் சென்று வருகிறார் அன்புமணி ராமதாஸ். அதன் நிறைவாக ஜனவரி 8-ம் தேதி தர்மபுரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதைச் சிறப்பாக நடத்துவது குறித்து, தர்மபுரி மற்றும் சேலத்தில் பொதுக்குழுவைக் கூட்டி ஆலோ சனை நடத்தினார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். அதில் ஏக காரசாரம்.

கடந்த 27-ம் தேதி தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் மைக் பிடித்த ராமதாஸ், ''தனித்தே செயல்பட்டு வந்த பா.ம.க. 1996-ம் ஆண்டுதான் கூட்டணிக்கு முடிவெடுத்து, தனது கொள்கையைக் குழிதோண்டி புதைத்தது. இதுதான் நாம் செய்த தவறு. செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இனி, 'திராவிடக் கட்சிகளோடு கூட்டணி சேரலாம்’ என்று எந்த பா.ம.க-காரன் சொன்னாலும், அவன் கன்னத்தில் பளார் என அறை விடுங்கள். யானையை நமது சின்னமாக வைத்திருந்தபோதுகூட ஒன்பது சதவிகிதத்துக்குக் குறையாத ஓட்டுவங்கி வைத்திருந்தோம். ஆனால், மாம் பழத்துக்கு மாறிய பிறகு கட்சியின் வளர்ச்சி சறுக்கு விளையாட்டாகி விட்டது. 'புதிய அரசியல்.. புதிய நம்பிக்கை’ என்று இப்போது நாம் புறப்பட்டிருப்பது சரிதான். ஆனால், அதற்காக நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது.

வன்னிய கிராமங்களில் குறைந்தபட்சம் 10-ம் வகுப்புக்கு மேல் படித்த இளைஞர்கள் அனை வரையும் கட்சியின் உறுப்பினர் ஆக்குங்கள். இது மாதிரி ஒன்றியத்துக்கு 12 ஆயிரம் பேர், சட்டமன்றத் தொகுதிக்கு 50 ஆயிரம் பேர், நாடாளுமன்றத் தொகுதிக்கு மூணு லட்சம் பேரை உறுப்பினராக சேருங்கள். புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குறப்போ, 'அப்பா, அம்மா, குலதெய்வத்தின் மேல் ஆணையாக, ஆயுள் முழுக்க பா.ம.க-வில் இருந்து கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்’ என்று ஒவ்வொருவரிடமும் சத்தியம் வாங்குங்கள்.

புதுசா சேரும் உறுப்பினர்களை, 'பாட்டாளி இளைஞர் சங்கம்’, 'பாட்டாளி இளம்பெண்கள் சங்கம்’, 'தமிழ்நாடு மாணவர்கள் சங்கம்’, 'வன்னியர் இளைஞர் படை’ என்று நான்கு பிரிவாகப் பிரிச்சு பயிற்சி தரணும். அவங்க ஒவ்வொருத்தரும் புதுசா 50 நபர்களை கட்சிக்கு உறுப்பினராக்கி விடணும். இதை எல்லாம் செஞ்சு காட்டுங்க.. அப்புறம் 2014-ல் தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் கண்டிப்பா பா.ம.க-வைச் சேர்ந்த ஒரு வன்னியன்தான் இருப் பான். இதை இன்றே சீரியஸாக எடுத்துக்கிட்டு,

எல்லோரும் செயல்பட ஆரம்பியுங்க. இதுவரை ஆட்சிக்கு வந்த 30 முதலமைச்சர்களில் ஒருத்தர்கூட வன்னியர் இல்லைங்கிற ஆதங்கத்தைத் துடைக்க இதுதான் ஒரே வழி. அதற்கான முன்னோட்டமாக நமது பலத்தை ஜனவரி 8-ல் தர்மபுரியில் நம் சின்ன அய்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் வலுப்படுத்திக் காட்டுங்கள்'' என்று முழங்கினார்.

சேலம் பி.சி.சி., ஹாலில் 28-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பேராசிரியர் செல்வக் குமார், ''ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்காளர்களைச் சேர்த்தால் நமக்கு வெற்றி உறுதி. அதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் படித்த வன்னிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ஐயா வைத்திருக்கிற பட்டப்பெயர் முருகன். பத்து முருகன்களுக்கு ஒரு சூப்பர்வைசர். அவருக்கு ஐயா வைத்திருக்கும் பட்டப் பெயர் முருகேசன். இந்த முருகனுக்கும், முருகே சனுக்கும் தலைமையில் இருந்து துண்டறிக்கை அனுப்புவோம். அதைக் கிராம மக்களிடம் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். படிக்கத் தெரி யாதவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும். சூடு சொரணை வர்ற மாதிரிதான் அந்த துண்டறிக்கையில் வாசகங்கள் இருக்கும். அந்தத் துண்டறிக்கையை படித்தவன் உண்மை யான வன்னியனுக்குப் பிறந்திருந்தால், நம் கட்சியில் சேர்ந்துடுவான்'' என்று முன்னோட்டம் கொடுத்தார்.

அடுத்து மைக் பிடித்த ராமதாஸ். ''நாம் ஆதரவு தந்ததால்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். சின்னா பின்னமாக்கி விட்டார்கள். மதுவைக் கொடுத்து மகளிர் தாலியை அறுத்து விட்டார்கள். சினிமாவைக் கொடுத்து பண்பாட்டைக் கெடுத்து விட்டார்கள். இதை எல்லாம் களைய, நாம் தனியாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இதற்கு பொதுமக்களிடம் இருந்தும், நம் வன்னியர்களிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த முடிவை 2009-ல் எடுத்திருந்தால் இன்று நாம்தான் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சியாக இருந்திருப்போம். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதுதான் நம் இலக்கு'' என்று, பேச்சை நிறைவு செய்தார்.

'பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தொகுதிவாசிகளிடம் ரொம்பவே வளைய வந்தார் பண்ருட்டி வேல்முருகன். அவர் பா.ம.க-வில் இருந்து வெளியேறி புதுக்கட்சி கோஷம் எழுப்பி வரும் நிலை யில் பா.ம.க-வினர் யாரும் அவருக்குப் பின்னால் போய்விடக் கூடாது என்ற பயமே அய்யாவின் இந்த திடீர் சுற்றுப் பயணத்துக்கு காரணம்’ என்று கூட்டத்துக்கு வந்த பா.ம.க-வினர் சிலரே கமென்ட் அடித்தபடி கலைந்தனர்.

- எஸ்.ராஜாசெல்லம், வீ.கே.ரமேஷ்

படங்கள்: மகா.தமிழ்பிரபாகரன்

''எங்கள் கல்லூரி மாணவர் ஒவ்வொருவருக்கும் 35 லட்சம் ரூபாய்!''

கடந்த 21.12.2011 ஜூ.வி. இதழில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ''மொக்கை காலேஜ்'' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரைக்கு விளக்கம் அளித்து இருக்கிறார், அந்தக் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு இயக்குதல் பிரிவைச் சேர்ந்த மாணவர் பேரவைத் தலைவர் அ.இன்னாசிப் பாண்டியன்.

''எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களுக்கு மேலாகிறது. யூகிசேது, நாசர், ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, பி.சி.ஸ்ரீராம், அருண் பாண்டியன், சுஹாசினி மணிரத்னம், ஆர்.வி. உதயகுமார், தரணி, 'ஜெயம்’ ராஜா, 'ஈரம்’ அறிவழகன், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்று கணக்கிட முடியாத பல கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது.

எங்கள் கல்லூரியில் குறைகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேபோல், எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் அதிநவீன வசதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசு 35 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடுகிறது. அரசின் கவனத்துக்கு எங்கள் கல்லூரியின் குறைபாடுகள் சென்று சில நன்மைகள் ஏற்படும் என்றாலும், நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு மாணவர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.