'மிஸ்டர் க்ளீன்’ என்று இமேஜ் இல்லாவிட்டாலும், ஏடாகூடப் புகார்களில் அதிகம் சிக்காமல் இருந்தது. மேற்கு மண்டல போலீஸ். ஆனால், கடந்த சில வாரங்களில், இந்த மண்டல போலீஸ் அதிகாரிகள் சிலர் பற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு போய் விழுந்திருக்கும் புகார்களின் நெடி ரொம்பவே ஓவர்.

டபுள் மீனிங்... டிரிபிள் மீனிங்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியை கண்காணிக்கும் அதிகாரி அவர். அவரைப் பற்றி முதல்வருக்கு பக்கம் பக்கமாக புகார் அனுப்பி இருக்கிறார் ஒரு பெண். ஆதங்கமும், அழுகையும் புரண்டோடும் அந்தக் கடிதத்தின் சில வரிகள் இங்கே அப்படியே.

''பொது இடத்தில் என்னைப் பார்த்து, தானாகவே வலிய வந்து பேசினார். 'நீ என்ன ஜாதி?’னு கேட் டார். நான் சொன்னேன். உடனே 'அட! நம்ம ஜாதி. சரி... நான் யாருன்னு தெரியுமா? இந்த ஏரியாவே என்

கன்ட்ரோல்தான்’ என்று சொன்னவர், வற்புறுத்தி என்னுடைய மொபைல் நம்பரை வாங்கிட்டுப் போனார். அதற்குப் பிறகு சும்மா சும்மா போன் பண்ணி தொந்தரவு கொடுத்துட்டே இருந்தார். 'என்னடா குட்டி எப்படி இருக்கே? எப்போ நம்ம ஆபீஸுக்கு வரப்போறே? உன்னைப் பார்க்கணும் போல இருக்குதுடா. நீ என் ஆபீஸுக்கு வந்துட்டுப் போறது தெரிஞ்சாலே ஊருக்குள்ளே உன்கிட்ட எவனும் வம்பு தும்பு பண்ண மாட்டான். என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியலடா!’-னு ஆரம்பிச்சு எழுத முடியாத அளவுக்கு ரொம்பக் கேவலமா பேசுவார். இந்த ஒரு மாசத்தில் மட்டும் 42 தடவை போன் பண்ணியிருக்கார். திடீர்னு வீட்டுக்கு முன்னாடி வண்டியைக் கொண்டாந்து நிப்பாட்டிட்டு போன் பண்ணுவார் 'வெளியில வந்து நிற்காட்டியும் ஜன்னல் வழியாகப் பாரு. உன் முகத்தைப் பார்த்துட்டு சந்தோஷமா கிளம்பிடுறேன்’ அப்படின்னு டார்ச்சர் கொடுப்பார். என்ன பேசுனாலும் டபுள் மீனிங், டிரிபிள் மீனிங்காவே இருக் கும். அவர்கிட்டே இருந்து என்னை காப்பாத்துங்கம்மா'' என்று எழுதி அனுப்பி இருக்கிறார்.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியது தெரியவந்ததும், அந்தப் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்திருக்கிறது. அதனைச் சமாளிக்க முடியாமல் மூட்டை முடிச்சுகளோடு, தன் கணவர் பணிபுரியும் தீவு நோக்கி கடல் கடந்து பறந்து விட்டாராம் அந்தப் பெண்மணி.

மறுபடியும் முதல்ல இருந்து!

ஏக எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கோவைக்கு மாறி வந்தார் அந்த அதிகாரி. கள்ளச்சாராயம், திருட்டு லாட்டரி, பங்களா விபசாரம் போன்றவற்றை மனிதர் அழித் தொழிப்பார் என்று காவல்துறையே இவர் மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது. ஆனால், மனிதரோ தனது பழைய தோழியின் மயக்கத்தில் கரைந்து போனதுதான் கொடுமை. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணி டம் பல வருடங்களாக மனதைப் பறிகொடுத்து பின் மீண்டவர், தற்போது மறுபடியும் பழைய நட்பை முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறார்.

இரவு பகலாக போனிலே நட்பு பாராட்டிக் கொண்டிருந்தவர் சில நாட்களுக்கு முன், கார் அனுப்பி தோழியை கோவைக்கே வரவழைத்து விட்டாராம். கடுப்பாகிப் போன அந்தப் பெண்ணின் கணவர் இந்தக் கொடுமையை எல்லாம் விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதி விட்டார். இந்த விஷயத்தை ஸ்மெல் பண்ணிய அதிகாரி, கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருந்த நபரிடம் தஞ்சம் புகுந்தார். விளைவு முதல்வரின் தனிப்பிரிவுக்கு போன புகார்... அதிகாரியின் கைகளுக்கே வந்தது. ஆபத்பாந்தவன் இருந்த தைரியத்தில் தோழியின் கணவரை மிரட்டிப் பார்த்த அதிகாரிக்கு இப்போது செம ஷாக். காரணம், அந்த ஆபத்பாந்தனுக்கே அம்மா ஆப்பு வைத்து அனுப்பி விட்டதுதான். தோழியின் கணவர் மீண்டும் புகாரை தட்டிவிட்டு, நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்.

ஒய் திஸ் பண வெறி?

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் அவர். 'சம்பளமே வாங்காமல் சேவையாக இந்தப் பணியை செய்கிறேன்’ என்று போஸ்டர் ஒட்டாத குறையாக படு பவ்யமாக, பாங்காக நடந்து கொள்பவர். ஆனால், சமீபத்தில் உளவுத்துறைக்கு இவரைப் பற்றி கன்னாபின்னா தகவல்கள் வந்து விழுந்திருக்கிறது. சற்றே அகழ்வாராய்ச்சி செய்தவர்கள், மிரண்டே போனார்களாம். தனது கவனத்துக்கு வந்து விழும் சிவில் பிரச்னைகளில் ஹைடெக்காக கட்டப்பஞ்சாயத்து பண்ணி, ஏகத் துக்கும் பணம் பண்ணுகிறாராம் மனுஷி. 'உங்க பிரச்னை முழுசும் மேடத்துக்கு தெரியும். இதுதான் ஃபீஸ். கொடுத்தீங் கன்னா வேலையை முடிச்சுக் கொடுத்துடுறோம்’ என்று இவருக்காக கேன்வாஸ் செய்து காரியத்தை நிறைவேற்றி கொடுக்க பெரிய புரோக்கர் டீமே இருக்கிறதாம். ராங் ரூட்டில் அம்மணி போவதைப் பார்த்து நொந்து போன கணவர், 'ஒய் திஸ் பண வெறி?’ என்று பலமுறை கேட்டும் இவர் மனம் மாறவும் இல்லை... பாதையை மாற்றவும் இல்லை. கட்டப்பஞ்சாயத்து மூலம் இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றி நீளமான ரிப்போர்ட் ஒன்றை முதல்வருக்குத் தட்டி விட்டிருக்கிறது உளவுத்துறை.

கொங்கு மண்டலத்தில் இருந்து எட்டிப் பார்த்திருக்கும் மூன்று புகார்களுக்கும், காவல்துறையைக் கைகளில் வைத்திருக்கும் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

- எஸ்.ஷக்தி