நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எப்போதும் கை தட்டல்கள் மட்டுமே ஒலிப்ப தில்லை... சில நேரம் கண்ணீரும் பேசும்!

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் விழா ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியர் அருண்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது விபத்தில் காலை இழந்த பெண் ஒருவர், ''கணவனையும், ஒரு காலையும் ஒருசேர இழந்துவிட்டு வாழ்க்கை நடத்த வழியில் லாமல் தவிக்கிறேன். அதிகாரிகளிடம் உதவி கேட்டுக் கடந்த ஐந்து வருடங்களாக அலைகிறேன். பேருக்கு விழா நடத்துறவங்க, உண்மையில் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யாமல் அலைக்கழிக்கிறார்கள்'' என்று கண்ணீர் விட்டுக் கதற, விழா மேடை பரபரப்பானது. அமைச்சரும், கலெக்டரும் அந்த பெண்ணின் குறை தீர உரிய நடவடிக்கை எடுப்பதாக மேடையிலேயே உறுதி அளித்தார்கள்.

அந்த மாற்றுத் திறனாளியான சுமதியை, அவரது சொந்த ஊரான கமுதியில் சந்தித்துப் பேசினோம்.

''ஏழு வருடங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வத்திற்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன் பிறந்தான். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாத்தான் இருந்தது. ஒரு நாள் நாங்கள் மூவரும் டூ வீலரில் கோயிலுக்குப் போனோம். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில், என் கணவர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். காலில் பலத்த காயத்துடன் உயிர் பிழைத்த எனக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை செஞ்சாங்க. எங்க அம்மா, அப்பா எல்லாம் சென்னை யில் தங்கியிருந்து என்னை கவனிக்க முடியாது என்பதால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தாங்க.

விபத்து நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விபத்தில் சிக்கிய என்னுடைய வலது காலின் முழங்கால் பகுதிவரை துண்டித்து எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. அதன் பிறகு நான் என் மகனுடன் கமுதிக்கே வந்துட்டேன். அப்பா கூலி வேலைக்குப் போறவர். இப்ப வயசும் ஆயிருச்சு. அதனால் குடும் பத்தில் தாங்கமுடியாத அளவுக்குக் கஷ்டம். எனக்கு ஏதாவது வருமானம் வேண்டும் என்பதற்காக மாற்றுத் திறனாளிகள் நல அதிகாரிகளிடம், பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பதற்காக உதவி கேட்டேன். கமுதியில் உள்ள வங்கியில் கேட்கச் சொன்னாங்க. அங்கே கேட்டபோது, 'மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில இருந்து எந்த தகவலும் வரவில்லை’ன்னு அனுப்பிட்டாங்க. மறுபடியும் அதிகாரிகளை சந்திச்சு மனு கொடுத்தேன், திரும்பவும் வங்கிக்குப் போகச் சொன்னாங்க. அப்பவும் கடன் கிடைக்கலை.

கடன் கிடைக்கவில்லை என்பதால் சத்துணவுத் திட்டத்தில வேலை கேட்டு மனு கொடுத்தேன். அதுவும் நடக்கலை. கடந்த அஞ்சு வருஷங்களா ஒரு காலை வச்சிக்கிட்டு 80 கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணம் செஞ்சு, எல்லா அதிகாரிகளிடமும் மனு கொடுத்தேன். எந்த அதிகாரியும் இரக்கம் காட்டவே இல்லை. அப்பத்தான் ராமநாதபுரத்தில் எங்கள் நலனுக்காக விழா கொண்டாடுவதாகவும், அதில் எனக்கு செயற்கை கால் கொடுப்பதாகவும் சொன்னாங்க. ஏழு வயசுப் பையனை வச்சிக்கிட்டு ஒரு காலோடு சிரமப்படும் எனக்கு அமைச் சர் மூலம் விடிவு பிறக்காதா என எண்ணித்தான் அந்த விழாவில் கண்ணீரோடு முறையிட்டேன்.

அமைச்சரும், கலெக்டரும் விரைவில் நடவடிக்கை எடுக்குறோம்னு சொல்லி செயற்கை கால் கொடுத்தாங்க. அந்த செயற்கை காலினை உடம்பில் இணைத்துக் கொள்ளும் வகையில் பெல்ட் எதுவும் இல்லை. அதனால அந்தக் காலை பயன்படுத்த முடியவில்லை'' என்றார்.

மாற்றுத் திறனாளி சுமதியின் முறையீடு குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். ''சுமதிக்கு 2005-ம் ஆண்டு மாற்றுத் திறனாளி என்பதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2007-ல் செயற்கை கால் வழங்கப்பட்டது. 2007-ல் லோன் கேட்ட போது கமுதியில் உள்ள வங்கிக்கு பரிந்துரை செய்தோம். வங்கி கொடுக்கும் தொகைக்கு நாங்கள் மானியத் தொகை வழங்க முடியுமே தவிர, முழு கடன் தொகையையும் வழங்க முடியாது. மேலும் அந்தக் கடன் தொகை கொடுப்பதற்காக வங்கி அதிகாரிகள் சுமதியை அணுகிய நேரத்தில் அவர் சென்னையில் இருந்ததால், கடன் கிடைக்கவில்லை. இப்போது அவர் மீண்டும் கடன் பெற விரும்பினால், தேவையான உதவிகள் செய்யப்படும். சத்துணவு வேலை பெறுவதற்கு அரசு விதிகள் இருக்கிறது. அதன்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது வழங்கப்பட்ட செயற்கைக் காலில் பெல்ட் இணைத்துத் தரத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

உழைத்து வாழ வேண்டும் என உறுதியுடன் இருக்கும் சுமதிக்கு இனியாவது விடிவுகாலம் பிறக்கட்டும்!

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி.