Published:Updated:

`எங்களுக்கான நிலத்தை அளந்து கொடுங்கள்' - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

பாலமுருகன். தெ
`எங்களுக்கான நிலத்தை அளந்து கொடுங்கள்' - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்!
`எங்களுக்கான நிலத்தை அளந்து கொடுங்கள்' - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், அல்லிநகரம் அருகிலுள்ள வெள்ளக்கரை கிராமத்தில் அருந்ததியர் மக்கள் வசித்து வருகிறார்கள்.1964 ம் ஆண்டு  புயல் தனுஷ்கோடியை தாக்கிய நேரத்தில் இங்குள்ள பட்டியலின மக்களுக்கு  கூரை வீடுகளுக்கு பதிலாக 45 ஓட்டு வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்தது. தற்போது அந்த வீடுகளில் குடும்ப எண்ணிக்கை அதிகமாகி குறைந்தது ஒரு வீட்டிற்குள் நான்கு குடும்பம் என வசித்து வருகிறார்கள்.மேலும், ``இடம் நெருக்கடியின் காரணமாக நாங்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு செய்தோம். அதன் விளைவாக 1996 ஆம் ஆண்டு சுமார் 2 ஏக்கர் நிலத்தில் தலா இரண்டு செண்ட் வீதம் இடம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கினார்கள்.

அந்த பட்டா பேப்பர் அளவிலேயே இருக்கிறது. எங்களுக்கான இடத்தை அதிகாரிகள் அன்றில் இருந்து இன்று வரைக்கும் அளந்து கொடுக்கவில்லை. நாங்களும் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறோம்.இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும்  இல்லை. இந்த மாவட்ட ஆட்சித்தலைவராவது எங்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா..? என காத்திருக்கிறோம்.
எங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் சாதிய பாகுபாடு இருக்கிறது. அந்த தொந்தரவுகளில் இருந்து விடுதலை பெறவும்,திருப்புவனத்தில்  தொழில் செய்வதற்கு அந்த இடம் வசதியாக இருக்கும்'' என்கிறார்கள்.