Published:Updated:

ஆண்டாள் மார்கழி 'பனி'ப்போர்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பரபர

ஆண்டாள் மார்கழி 'பனி'ப்போர்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பரபர

Published:Updated:
##~##
ஆண்டாள் மார்கழி 'பனி'ப்போர்!

'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. தென்கலை பிரிவினரின் ஆதிக்கத்தால் வடகலை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை எழுப்பி நீதிமன்றம் சென்றுள்ளார் வாசுதேவன். 

அவரை சந்தித்தோம். ''வைஷ்ணவ சம்பிரதாயப்படி நாங்கள் வடகலை சார்ந்தவர்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடகலை சார்ந்த தாத்தாச்சாரியார் குடும்பங்கள் பத்தும், தென்கலை சார்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கிலும் உள்ளன. என் அப்பாவின் தாத்தா வீரராகவ தாத்தாச்சாரியார் மதுரை நாயக்க மன்னருக்கு ராஜகுருவாக இருந்தவர். ஆண்டாள் கோயில் தர்மகர்த்தாவாக 40 ஆண்டுகள் இருந்தார். எனக்குத் தெரிந்து ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் கரையில் உள்ள எங்களுக்கு சொந்தமான உற்சவ மண்டபத்தில் மார்கழி மாதம் நடக்கும் எண்ணெய்க்காப்பு விழாவில், தாயாரை ஓய்வெடுக்கச் செய்து அமுது செய்விப்பதும், அம்மானை விளையாடுவதும் நடக்கும்.

ஆண்டாள் மார்கழி 'பனி'ப்போர்!

தாயாரை பல்லக்கில் தூக்கிக்கொண்டு வரும்போது ஏற்படும் களைப்பைப் போக்கவும் ஓய்வு எடுப்பதும் இந்த மண்ட பத்தில்தான். பிறகு தீப ஆராதனை செய்து பூஜைகள் செய்து, பிரசாதம் அளித்து தாயாரை எடுத்துச் செல்வார்கள். 1987-ல் தென்கலை ஐயங்கார் சீனிவாசசாரி தக்காராக வந்த பிறகு இந்த வழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டது. 'எக்காரணம் கொண்டும் நடந்து கொண்டிருக்கும்

ஆண்டாள் மார்கழி 'பனி'ப்போர்!

வழக்கத்தை நிறுத்தக்கூடாது’ என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட உரிமை இயல்  கோர்ட்டில் வழக்கு தொடுத்தோம். வழக்கு ஜவ்வு மாதிரி இழுக்கப்பட்டு 2003-ல், 'தாயாரை மண்டபத்துக்குள் கொண்டு போகலாம்’ என்று தீர்ப்பு வந்தது. ஆனால், தீர்ப்பை கோயில் நிர்வாகம் மதிக்கவில்லை. 'வடகலை நாமத்தை நீக்கினால் மண்டபத்துக்குள் கொண்டு வருகிறோம்’ என்று சொல்கிறார்கள். கல் மண்டபமாக இருந் தபோதே வடகலை நாமம் இருந்தது. 1980-ல் கட்டப்பட்ட இல்லத்துப் பிள்ளைமார் கல்யாண மண்டபத்துக்கு தாயாரை எடுத்துச் செல்லும் கோயில் நிர்வாகம், எங்கள் மண்டபத்துக்கு எடுத்துவர மறுப்பது ஏன்? கோர்ட் தீர்ப்பை மதிக்காமல் கோயில் நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில்   அப்பீல் செய்தது. ஆனால் சார்பு நீதிமன்றம்  2005-ல் கோயில் நிர்வாகத்தின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதை அடுத்தும் அப்பீல் செய்ததில், சென்னை  உயர்நீதி மன்றம், 'கோர்ட் இதில் தலையிடாது. இந்துசமய அறநிலையத் துறை முடிவு எடுக்கும்’ என்று தீர்ப்பளித்தது. முதல்வருக்கு நாங்கள் கோரிக்கை மனு அனுப்பினோம். அப்போது இந்துசமய அறநிலையத் துறை, 'எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  வடகலை குடும்பத்துக்குச் சொந்தமான விடாயத்தி மண்டபத்துக்கு தாயாரைத் தாராளமாக எடுத்து செல்லலாம்’ என்றது. ஆனால் நிர்வாகம் இதனையும் ஏற்கவில்லை. இரு முறை நீதிமன்றம் தீர்ப்பு கூறியும் அவமதித்ததற்காக கோயில் நிர்வாகம் மீது வழக்கு தொடுத்துள்ளோம். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறோம். ஆலயம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எல்லா மக்களும் வழிபட வேண்டிய இடத்தை தனக்கு மட்டும் சொந்தமானது என்று சொல்ல எந்த சட்டத்திலும் இடமில்லாதபோது கோயில் நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்கிறார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தைச் சார்ந்த பன்னீர் செல்வத்திடம் பேசினோம். ''சம்பிரதாயப்படி தென்கலை நாமம் இருக்கும் மண்டபத்துக்கும், பொதுவான  மண்டபத் துக்கும் தாயாரை எடுத்துச் செல்வது வழக்கம். வடகலை சம்பிரதாய மண்டபத்துக்கு தாயாரை எடுத்துச் செல்ல மாட்டோம். 1987-ல் வடகலை விடாயத்தி மண்டபம் புதுப் பிக்கப்பட்ட போதுதான் வடகலை நாமம் பதிக்கப்பட்டது. இதனால்தான் தாயாரை மண்டபத்தில் அனுமதிக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒரு கிறிஸ்தவர். அவருக்கு வைணவச் சம்பிரதாயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்துவிட்டார். கோயிலுக்குள் கடைப்பிடிக்கும் ஆச்சாரம், சம்பிரதாயங்களை கோயிலுக்கு வெளியேயும் கடைப்பிடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.  வடகலை சார்ந்தவர்களின் மண்ட பத்துக்கு எடுத்துச் சென்றால் அர்ச்சகர்கள், பட்டர்கள், தீர்த்தக்காரர்கள் எல்லாம் வரமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தீபாராதனை காட்டக்கூட அர்ச்சகர்கள் இல்லாமல் நாங்கள் விடாயத்தி மண்டபத்துக்கு தாயாரை அழைத்துச் செல்வதாக இல்லை. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வடகலை நாமம் இருப்பதால் 1987-ல் நிறுத்தப்பட்டது, இனியும் தொடரும். வரும் ஜனவரி 8 முதல் 15 வரை எண்ணெய்க்காப்பு விழா வழக்கம்போல் நடைபெறும்'' என்றார்.

- க.நாகப்பன்