Published:Updated:

புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

மீட்கப்பட்ட ரூ 100 கோடி

##~##
புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

'ஈ.வி.பெருமாள்சாமி’ என்ற பெயர் காஞ்சிபுரம் மாவட் டத்தில் பிரபலம். கான்ட்ராக்டர், அரசியல்வாதி, தொழில் அதிபர், கல்லூரி அதிபர், ஆன்மீகவாதி என்று அறியப்பட்டவர். இப்போது இவரை, 'நில ஆக்கிரமிப்பாளர்’ என்று சொல்லி செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் கட்டிவந்த 'ஈ.வி.பி. வோர்ல்டு’ என்ற தீம் பார்க் இடித்துத் தள்ளப்பட்டிருக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில வருடங்களுக்கு முன் காஞ்சி மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே சென்னை டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒரே வளாகத்தில் ஈ.வி.பி. இன்ஜினீயரிங் காலேஜ் உட்பட பல்வேறு கல்லூரிகளைத் துவக்கினார் ஈ.வி.பெருமாள்சாமி. அந்தக் கல்லூரிகள் போணியாகதால், சில வருடங்களுக்கு முன் அவற்றை தரைமட்டமாக்கிவிட்டு, அந்த வளாகத்தில் 'ஈ.வி.பி. வோர்ல்டு’ என்ற பெயரில் தீம் பார்க் உருவாக்கத் திட்டமிட்டார். கடந்த இரண்டு வருடங்களாகவே அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. திறப்பு விழாவுக்கு இன்னும் சில தினங்கள் இருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அங்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி கட்டடத்தின் பல பகுதிகளை இடித்து தரைமட்ட மாக்கி 52 ஏக்கர் நிலத்தையும் மீட்டு இருக்கிறார்கள். மீட்கப்பட்ட நிலத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு

புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

100 கோடி.

புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செம்பரம்பாக்கம் ஊராட்சித் தலைவர் முனியன், ''20 வருடங்களுக்கும் மேலாக அந்த இடம் ஈ.வி.பி. நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த காலங்களில் யாரும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 52 ஏக்கர் என்பது

புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

ஊராட்சியில் பெரிய நிலப்பரப்பு. இந்த ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி கட்ட 1.25 கோடி ரூபாயை கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீடு செய்தது. அதற்கென இடத்தைப் பார்வையிட்டபோது, அரசு ஆவணப்படி இந்த தீம் பார்க் பின்புறம் இருந்த சுமார் 52 ஏக்கர் நிலம் காலியாக இருந்தது தெரியவந்தது. ஆனால், அதனுள் யாரும் செல்லமுடியாதபடி சுவர் அமைத்து மறித்துவிட்டது அந்த நிறுவனம். அதுமட்டுமின்றி, முன்பகுதியில் சுமார் ஒண்ணே கால் ஏக்கர் இடத்தில் மதில் சுவர் அமைத்து ஆக்கிரமித்து இருந்தது. இது தெரியவந்தபின் நேரடியாகச் சென்று உரியவர்களிடம் பேசினோம். 'அப்படியா... புறம்போக்கு இடம் இருந்தா இப்பவே எடுத்துக்கிட்டு போங்க’ என கிண்டலாகப் பதில் தந்தனர். இனி பேசி பயனில்லை என்றுதான் மக்களைத் திரட்டி முழு மூச்சாக களம் இறங்கினோம். கவுன்சில் கூட்டத்தில் நிலத்தை மீட்க தீர்மானம் நிறைவேற்றினேன். வருவாய்த் துறை ஆவணங்களின்படி இந்த ஊராட்சி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுர மாவட்டங்களை உள்ளடக்கியது என்பதால், இரு மாவட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக மனுக்களுடன் போராடினோம். அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது போல் தெரியவே... ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து, அதற்காக அனுமதி கேட்டோம். அதன்பின்தான் அதிகாரிகள் விழித்துக்கொண்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்'' என்றார் விளக்கமாக.

புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

ஈ.வி.பெருமாள்சாமி பற்றி நன்கறிந்த சிலர், ''மதுராந்தகம் பக்கத்தில் சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அவர். ஆரம்பத்தில் பொதுப்பணித் துறையில் கான்ட்ராக்டர் பணியில் இருந்தார். அப்போது காஞ்சி மாவட்ட அ.தி.மு.க-வில் பவர்ஃபுல்லாக இருந்த காஞ்சி பன்னீர் செல்வத்தின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் ஒட்டிக்கொண்டு செலவு செய்து... சின்ன பொறுப்புகளை வாங்கினார். கூடவே தொழில் களையும் பார்த்துக்கிட்டு, அசுரத்தனமா வளர்ந்தார் இம்போர்ட் எக்ஸ்போர்ட், டைல்ஸ் பிசினஸ்னு வளர்ந்து, ஈ.வி.பி. குரூப் ஆஃப் கம்பெனீஸ் உருவா னது. அப்புறம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் ஆனார். 91-ல் இருந்து 96 வரையில் பொறுப்பில் இருந்தார். பின்னர் என்ன காரணத்தாலோ கட்சி இவரை ஓரம் கட்ட.... அலட்டிக்கொள்ளாமல் ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கினார். பார்க்கிற இடத்தில் எல்லாம் இடங்களை வாங்கிப் போட்டார். அடுத்துதான் கல்லூரி அதிபர் அவதாரம். கல்லூரி வளாகத்தில் 108 குடில்களைக் கட்டி திவ்ய தேசம்னு பேரும் வெச்சு என்னன்னமோ பண்ணி பார்த்தார். எதுவும் போணி யாகல. கல்லூரிக்கு முழுக்கு போட்டுட்டு அந்த இடத்துல தீம் பார்க் கட்ட ஆரம்பிச்சார். அதில்தான் இப்போ விவகாரம்'' என்றனர்.

புறம்போக்கு நிலத்தில் 'தீம் பார்க்'?

திருவள்ளூர் ஆர்.டி.ஓ-வான சித்திரசேனன், ''எங்களது ஆய்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டு மல்ல... எங்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்குள் வரும் 56 ஏக்கரும் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப்போது சிலர் காஞ்சிபுரம் எல்லையில் இருப்பதை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி அத்தனை ஏக்கர் இடத்தையும் மீட்டிருக்கிறோம். ஈ.வி.பி. தவிர வேறு சில தனி நபர்களின் ஆக்ரமிப்புகளையும் சேர்த்து 87 ஏக்கர் இடத்தை மீட்டு இருக்கிறோம். இதற்கு உடந்தை யாக இருந்த அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை இருக்கும். இனி யாராவது மீட்கப்பட்ட இடத்தில் நுழைந்தால் கைது நடவடிக்கை தான்'' என்றார் எச்சரிக்கை தொனியில்.

ஈ.வி.பெருமாள்சாமியிடம் பேச முயன்றோம். ஆனால் கருத்தைச் சொல்ல அவர் முன்வரவில்லை. அவர் தரப்பில் பேசியவர்கள், ''இந்தியாவில் வேறு எந்த தீம் பார்க்கிலும் இல்லாத நீர் மற்றும் பனிச் சறுக்கு விளையாட்டுகளோடு எங்கள் தீம் பார்க் அமைகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தீம் பார்க் முதலாளிகள்தான், ஆட்களைத் தூண்டிவிட்டு இந்த விவ காரத்தைக் கிளப்பி உள்ளனர். இவற்றை சட்டப்படி சந்திப்போம்'' என்கிறார்கள்.

- எஸ்.கிருபாகரன்