Published:Updated:

நெசவாளர்களை மிரட்டும் ஏர்ஜெட்!

வேதனை மேல் வேதனை

##~##
நெசவாளர்களை மிரட்டும் ஏர்ஜெட்!

றிவிக்கப்படாத மின் தடை, கூலி பற்றாக்குறை, கொள்முதல் பிரச்னை என்று பல்வேறு நெருக்கடிகளால் நசிந்து வருகிறது நெசவுத் தொழில். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தொடர் போராட் டங்களில் இறங்கினார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவள்ளூர், வேலூர் மாவட்டங் களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. கைத் தறி, விசைத்தறி என நான்கு லட்சத் துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இருக்கிறார்கள். நெசவாளர்களின் மனக்குமுறல் என்ன?

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.வினாயகம், ''திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கைத்தறி லுங்கிகளுக்கு வெளி நாட்டில் அதிக வரவேற்பு உண்டு. ஆனால், இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் நெசவுத் தொழிலே அழிந்து போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கைத்தறி மட்டும்தான் இருந்தது. பிறகு விசைத்தறி வந்தது. விசைத்தறி தொடங்கிய புதிதில், ஒரு தறிக்கு ஓர் ஆள் என்றுதான் நெசவுத் தொழில் செய்து வந்தனர். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு தறியை ஒரே ஆள் இயக்கும் முறை ஏற்பட்டது. தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருவதால், தற்போது ஒரே ஆள் மூன்று, நான்கு தறியை இயக்கினால்தான் கட்டுப்படியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெசவாளர்களை மிரட்டும் ஏர்ஜெட்!

நெசவுத் தொழிலைப் பொறுத்தவரையில் ஒருவர் தறி நடத்துகிறார் என்றால், அதில் அவருடைய

நெசவாளர்களை மிரட்டும் ஏர்ஜெட்!

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உழைத்தாலும் ஒருநாள் வருமானமே 200 ரூபாய்தான் கிடைக்கும். இப்படி கஷ்டப்பட்டும் நஷ்டத்தையே சந்திக்கிறோமே என்ற வேதனையில் பலர் சென்னைக்கு அருகே தொடங்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டு கம்பெனி வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்'' என்று நெசவாளர்களின் வேதனைகளை பட்டியலிட்டார்.

விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ஜி.கணேசன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் என்.ஜி.வேலு ஆகியோர், ''20 வருடங்களுக்கு முன்பாக

நெசவாளர்களை மிரட்டும் ஏர்ஜெட்!

கூட்டுறவு நிலவள வங்கியின் மூலம் விசைத்தறி அமைத்துக் கொள்வதற்குக் கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது உற்பத்திப் பொருட்கள் சரியான கொள்முதல் இன்றி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். தனியார் முதலாளிகளுக்கு வலியச் சென்று உற்பத்திப் பொருட்களைக் கொடுக்க நேர்ந்ததால், நெசவாளர்கள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆட்பட்டனர். இதனால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலருடைய வீடுகள் ஜப்தி நடவடிக்கைகளுக்கு உள்ளா கின.

தொடர்ச்சியான நஷ்டம் காரணமாகத்தான் சில தினங்களுக்கு முன்பாக நெசவாளர்கள் போராட் டத்தில் இறங்கினர். 1 மீட்டர் உற்பத்திக்கு கூலி ரூ.8.75 என்பதை இரு மடங்காக்கி 17.50 என்று வழங்கக்கோரி இருந்தோம். ஆனால், பேச்சுவார்த்தையில் 10.50 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு சம்மதித்து போராட்டத்தை முடித்துக்கொண்டோம். ஆனால், அறிவிக்கப்படாமல் அமல்படுத்தப்படும் மின் வெட்டு காரணமாக உற்பத்தி பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது. கூலி உயர்வும் திருப்தி இல்லாமல் மின்வெட்டால் உற்பத்தியும் குறைகிற நிலையில் எங்களின் இழப்பை எப்படி ஈடுசெய்ய முடியும்? மூன்று தறி அமைக்க ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த நிலையில் உற்பத்திப் பொருட்களுக்கும் சரியான விலை கிடைக்கவில்லை என்றால் எப்படி தொழில் செய்ய முடியும்? அதனால் அரசே கொள் முதல் நிலையம் அமைத்து நல்ல விலைக்குக் கொள்முதல் செய்யவேண்டும். மேலும், தற்போது ஏர் ஜெட் என்ற அதிவேக விசைத்தறியும் வந்துவிட்டது. இது ஒரு நிமிடத்துக்கு அரை மீட்டர் துணி உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. சுமார் 50 லட்சம் முதலீட்டில் இதனை பெரும் முதலாளிகள் அமைத்துவிட்டால், இருக்கும் அத்தனை நெசவாளர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதனால் அரசு இந்த ஏர்ஜெட் விசைத்தறியை முறைப்படுத்த வேண்டும். மின்சாரம், கூலி, கொள்முதல் போன்ற விவகாரங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர்.

நெசவாளர்களை மிரட்டும் ஏர்ஜெட்!

தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.ஆர்.ரவி, ''கடந்த தி.மு.க. ஆட்சி அமைவதற்கு முன்னால் அம்மையார்குப்பத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், 'விவசாயிகளுக்கு வழங்கியதைப்போல நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினார் கலைஞர். நெசவாளர்களுக்கு வழங்கி வரும் 500 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட் என்று இரட்டிப்பாக்கினால் நெசவாளர்களின் துயர் ஓரளவுக்கு துடைக்கப்படலாம்!'' என்றார்.

மானம் காக்க உடை தயாரிப்போரின் வாழ்க் கையைக் காக்க முன்வருமா அரசு?

- ரியாஸ்