Published:Updated:

மிரட்டினாரா துணை சபாநாயகர்?

சேலம் 'தண்ணீர்' போராட்டம்

##~##
மிரட்டினாரா துணை சபாநாயகர்?

சேலத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு, 24 நேரமும் தண்ணீர் சப்ளை வேண்டும் என்பதற்காக, பிரதான தொட்டியில் இருந்து இணைப்பு கொடுத்திருக்கிறார், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தனபால் என்பதுதான் இப்போதைய ஹாட்.
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெயர் வெளியிட விரும்பாத சேலம் மாவட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர், ''தன் வீட்டுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வரும் வகையில் இணைப்பு தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் தனபால். ஆனால், அதிகாரிகள் தயக்கம் காட்டி இருக்கிறார்கள். இதில், மாநகராட்சி மண்டலத் தலைவருக்கும் உடன்பாடு இல்லை என்பதால், அவரும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த தனபால், கடந்த 3-ம் தேதி கொண்டலாம்பட்டி மண்டலத்

மிரட்டினாரா துணை சபாநாயகர்?

தலைவர் சண்முகத்தை அழைத்து, 'நான் 1982-ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன். என்னால் வளர்ந்த உனக்கு, எவ்வளவு தைரியம் இருந்தால் நான் சொல்லியும் குடிநீர் இணைப்பு கொடுக்காமல் இருப்பாய்... உன்னை அரசியல்ல இருந்தே ஓரம் கட்டிடுவேன்’ என்று மிரட்டி அனுப்பினாராம். அந்த வார்டு கவுன்சிலரையும் கூப்பிட்டுக் கண்டித்தாராம். அதனால்தான் அவசர அவசரமாக 24 நேரமும் தண்ணீர் வரும் வகையில் இணைப்பு தரப்பட்டது'' என்றனர்.

இதுகுறித்து, 54-வது வார்டு கவுன்சிலர் சரவணமணி, ''இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் என்னை மிரட்டவில்லை. அவர் நினைத்தால் மாநகராட்சி ஆணை யாளரிடமே பேசலாம். என்னைப் போல சின்னப் பதவியில் இருப்பவனைக் கூப்பிட்டு மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

மிரட்டினாரா துணை சபாநாயகர்?

மண்டலத் தலைவர் சண்முகம், ''அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயமே தெரிகிறது. அது பொய்யாக பரப்பப்பட்டுள்ள செய்தி'' என்றார் மழுப்பலாக..

குடிநீர் வாரிய ஊழியர்களிடம் பேசி னோம், ''தனபால் இருக்கும் பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வரும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய தனபால், 'நான் சென்னையில் இருந்து எப்போ வேண்டு மானாலும் வருவேன், போவேன். அதனால் என் வீட்டுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வர வேண்டும்’ என்று, பொறியாளர் முதற்கொண்டு அனைவரையும் அழைத்துத் தரக் குறை வான வார்த்தைகளால் திட்டினார். அவருடைய அடாவடிக்குப் பயந்து எட்டு ஃபிட்டர்கள் இரவோடு இரவாக வேலை பார்த்து பிரதான தொட்டியில் இருந்து அவரது வீட்டுக்கு இணைப்பு கொடுத்தனர். அவர் வீட்டுக்கு மட்டும் 10,000 லிட்டர் தண்ணீர் சப்ளை ஆகிறது. ஆனால், அது போதாது என்று மேலும் தண்ணீர் கேட்பது ஆண்டவனுக்கே அடுக்காது. அவர் மட்டுமல்ல, சில வணிகத் துறையினரும் வி.ஐ.பி-களும் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைப்பதற்கான இணைப்பைப் பெற்றுள்ளனர். இதனால் தண்ணீருக்குத் திண்டாடுவது, பொது மக்கள்தான்'' என்றனர்.

இதுகுறித்து, துணை சபாநாயகர் தனபாலிடம் பேசினோம், ''நான் இந்த இணைப்பை 1982-ம் வருடமே பெற்று விட்டேன். என் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரோ இந்த அவதூறைப் பரப்பி இருக்கிறார்கள். இணைப்பு வாங்கியதற்கான அனைத்து சான்றிதழும் என்னிடம் உள்ளது'' என்று குற்றசாட்டை மறுத்தார்.

இந்தப் பிரச்னையை தி.மு.க. கையில் எடுத்து போராடத் தொடங்கவே, துணை சபாநாயகருக்கு கொடுத்திருந்த விதிமுறைக்கு மாறான இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாம்.

- ம.சபரி

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்