Published:Updated:

அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

விருதுநகர் விறுவிறு

##~##
அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

ஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டை சந்தித்துவிட்டு இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். அதற்குள் அடுத்த அட்டாக். ரயில்வே மேம்பாலம் கட்டு வதற்காக அவரது வீடு, சினிமா தியேட்டர், அவரது தம்பி சுப்பாராஜின் மருத்துவமனை ஆகியவை இடிபடப் போகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விருதுநகர், ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம், பள்ளி, கல்லூரிகள் என்று பலவும்  இயங்கி வருகின்றன. தினமும் இந்த ரயில்வே கேட் வழியாக சுமார் 60 ரயில்கள் கடந்து செல்வதால் பெரும்பாலான நேரம் ரயில்வே கேட் மூடித்தான் கிடக்கும். அதனால் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் விபத்தில் காயம் அடைந்தவர்கள், கர்ப்பிணிகள் ரொம்பவும்தான் நொந்துபோவார்கள். அதனால், 'ராம மூர்த்தி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்’ என்பது விருதுநகர் மக்களின் நீண்டகால கோரிக்கை.

அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

கடந்த 2007-ம் ஆண்டு பட்ஜெட்டில் இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டுவதற் காக

அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

24 கோடி நிதி

அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

ஒதுக்கீடு செய்யப்பட்டது. உடனே வேலை தொடங்கிவிடும் என்று மக்கள் ஆவலோடு காத்துக்கிடக்க, மேம்பாலம் கட்டுவதற்கான எந்த வேலையும் தொடங்கப்படவே இல்லை.

தி.மு.க. அப்போதைய ஆளும் கட்சியாக இருந்ததால் ரயில்வே மேம் பாலத் திட்டத்தை முடக்குவதற்கான வேலைகள் சத்தம் இல்லாமல் நடந்துவந்தன. இதற்குக் காரணம் இதே ராமமூர்த்தி ரோட்டில்தான் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரின் வீடு, சினிமா தியேட்டர், அவரது தம்பி சுப்பாராஜின் வீடு, அவரது குடும்பத்துக்குச் சொந்தமான திருவேங் கடம் மருத்துவமனை உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன என்று பேசப்பட்டது. ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டால் இந்தச் சொத்துகளுக்கு ஆபத்து வரும் என்பதாலோ என்னவோ... மேம்பால விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக மாறிப்போனது.

மக்களை திசை திருப்புவதற்காக, 'ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் அமைப்பதற்குப் பதில் தரைப் பாலம் அமைக்கலாம்’ என்று விருதுநகர் நகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூரும் இதே கருத்தை வலியுறுத்தவே, மேம்பாலத் திட்டம் ஒட்டுமொத்தமாக கிடப்புக்கு போனது.

அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

இதற்கிடையே கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்கு விருதுநகர் வந்த முதல்வர் ஜெயலலிதா, 'ராமமூர்த்தி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதுபோல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான வேலைகளில் லோக்கல் அ.தி.மு.க-

அண்ணாச்சி வீட்டுக்குள்ளே ரயில்வே மேம்பாலம்!

வினர் தீவிரம் காட்டத் தொடங்கினார்கள். ராமமூர்த்தி ரோட்டின் இரண்டு பக்கத்திலும் நிலத்தை கையகப்படுத்தும் வேலையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. வருவாய்த் துறையினர் களம் இறங்கி, 'மேம்பாலம் கட்டுவதற்கு, 141 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும்’ என்று பட்டியல் தயாரித்து ஒவ்வொரு கட்டடத்திலும் 'மார்க்’ செய்துள்ளனர். இது தொடர்பாக வருவாய்த் துறையினரிடம் கேட்ட போது, ''மேம்பாலம் கட்டுவதற்கு வடக்குப் பக்கம் 10 அடி நிலமும், தெற்குப் பக்கம் 13 அடி நிலம் தேவைப்படுகிறது. இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரின் வீடு அருகேதான் மேம் பாலம் தொடங்குகிறது. அதனால் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வீட்டின் முன்பக்கம் 5 அடி இடிபடுகிறது. அதுபோல் ரயில்வே தண்டவாளத்தை ஓட்டியுள்ள அவரது சினிமாத் தியேட்டரின் காம்பவுண்ட் சுவர், அவரது தம்பி சுப்பாரஜுக்குச் சொந்தமான திருவேங்கடம் மருத்துவ மனையின் முகப்பும் இடிபடும்'' என்று சொன்னார்கள்.

விருதுநகர் மாவட்டக் கலெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ''ராமமூர்த்தி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப் படுத்தும் பணி தொடங்கி விட்டது. இதில் ஆட்சேபனை மனு குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி விடும். ரயில்வே மேம்பாலம் வருவதை யாரும் தடுக்க முடியாது...'' என்றார்.

இந்த மேம்பால விவகாரம் குறித்து கருத்து கேட்பதற்காக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரைத் தொடர்பு கொண்டோம். ''விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மிகவும் நெருக்கடியானது. எனவே அங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதைவிட, தரைப் பாலம் அமைப்பதுதான் நல்லது. தரைப் பாலம் அமைக்கப்பட்டால் 41 கட்டடங்கள் மட்டுமே பாதிக்கும் என்று அதிகாரிகள் அறிக்கை அளித் தார்கள். அதனால்தான் கடந்த தி.மு.க. ஆட்சியில் 17 கோடி ரூபாய் செலவில் தரைப்பாலம் அமைக்க முடிவு செய்தோம். ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, என்னைப் பழி வாங்க வேண்டும், என் வீடு மற்றும் தம்பி சுப்பாராஜ் மருத்துவமனையை இடிக்க வேண்டும் என்ற அரசியல் உள் நோக்கத்தோடு இந்தத் திட்டத்தை அ.தி.மு.க-வினர் செயல்படுத்துகின்றனர். மேம்பாலம் காரணத்தால் 141 பேரின் கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளது. எனவே எல்லோரும் கலந்து பேசி ஆட்சேபனை தெரிவிக்க இருக்கிறோம். சட்டப்படி இந்தப் பிரச்னையை அணுகு வேன்...'' என்று சொன்னார்.

ஆட்சி மாறினால் காட்சிகள் மாறத் தானே செய்யும்!

- எம்.கார்த்தி