Published:Updated:

குப்பைத் தொட்டி மிரட்டல் ஆரம்பம்!

தி.மு.க. பாதையில் மதுரை அ.தி.மு.க.

##~##
குப்பைத் தொட்டி மிரட்டல் ஆரம்பம்!

ரி கட்டாமல் சண்டித்தனம் செய்யும் கடைக்காரர்களை வழிக்குக் கொண்டு வர, மதுரை மாநகராட்சி முன்பு கடைபிடித்த 'டெக்னிக்’களில் ஒன்று, கடை வாசலில் குப்பைத் தொட்டி வைப்பது. கடந்த ஆட்சியில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை வாசலில் குப்பைத் தொட்டி வைத்ததோடு, அகழி போன்று ராட்சத குழி வெட்டி தி.மு.க-வினர் நடத்திய அராஜகம் படுபிரசித்தம். இப்போது, அதே அட்டூழியத்தை அ.தி.மு.க-வினர் செய் வதாகப் புகார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொங்கல் இனாமாக 1 லட்சம் கொடுக்க மறுத்ததற்காக, தமிழ்ச் சங்கம் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு குப்பைத் தொட்டியை வைத்தார், அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் சக்திவிநாயகர் பாண்டியன். வெகுண்டெழுந்த வியாபாரிகள் நியாயம் கேட்டு மறியலில் ஈடுபட்டதால் தமிழ்ச் சங்கம் ரோடு ஸ்தம்பித்தது.

குப்பைத் தொட்டி மிரட்டல் ஆரம்பம்!

நடந்தது என்ன என்பதை அறிய அந்தக் கடையின் உரிமையாளர் கண்ணழகனைச் சந்தித்தோம். 'சிம்மக்கல் ஏரியா கவுன்சிலர் முத்துமீனாவின் கணவர்தான் 81-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார். தன்னு டைய ஆதரவாளர்களோடு கடை கடையாக மாமூல் வசூலிப்பதுதான் அவரோட தொழிலே. கடந்த 4-ம் தேதி மாலை 7 மணிக்கு ஜெ. பேரவை செயலாளர் செந்தில், ஜேம்ஸ்குமார் ஆகியோடு என்னுடைய கடைக்கு வந்தவர், ஏதோ கொடுத்து வைச்சப் பணத்தைக் கேட்பது போல '1 லட்சம் கொடுங்க’ என்றார். 'எதுக்குண்ணே?’ என்று கேட்டதும், 'என்னது எதுக்கா? பொங்கல் வருதுல்ல.. கட்சியில இருந்து துப்புரவுப் பணியாளர்களுக்குத் டிரஸ் எடுத்துக் குடுக்கப் போறோம்’ என்று முறைத்துக் கொண்டே பதில் சொன்னார்கள். 'ரெண்டாயிரம், மூவாயிரம்னா சொல்லுங்க நன்கொடையாத் தாரேன். அதுக்கு மேல முடியாதுண்ணே’ என்றேன். சட்டுன்னு கோபப்பட்டு, 'யார் கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறீயா? பணம் தரலைன்னா நாளைக்கு நீ கடையே திறக்க முடியாது பார்த்துக்க’னு மிரட்டிட்டுப் போனாங்க.

குப்பைத் தொட்டி மிரட்டல் ஆரம்பம்!

மறுநாள் காலையில், சொன்னது போலவே கடை வாசலில் பெரிய குப்பைத் தொட்டியை கொண்டு

குப்பைத் தொட்டி மிரட்டல் ஆரம்பம்!

வந்து வைத்திருந்தார்கள். கடைக்குள் நுழைய முடியாதபடி குப்பையைச் சிதறிவிட்டு, மனிதக் கழிவுகளையும் கொட்டி இருந்தார்கள். அதிர்ச்சி அடைந்து, வியாபாரிகள் சங்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தேன். உடனே திரண்டுவந்த வியா பாரிகள், இதேபோல மேலும் சிலரது கடையிலும் சக்திவிநாயகர் பாண்டியன் மாமூல் கேட்டதாகச் சொல்லி மறியலில் ஈடுபட்டார்கள். அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், 'தெரியாம கொஞ்சம் தள்ளி வச்சிட்டாங்க. மன்னிச்சிக்கோங்க’ என்று கவுன்சிலருக்குச் சாதகமாகவே பேசினார்கள். அஞ்சடி பத்தடின்னா ஒத்துக்கலாம். அதெப்படிங்க ஒரு குப்பைத் தொட்டி 2,000 அடி தூரம் இடம் மாறும்?' என்றார் கோபமாக.

'தி.மு.க-காரங்க அழிச்சாட்டியம் பண்றாங்கன்னு தான் அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டோம். பதவிக்கு வந்ததும், அ.தி.மு.க-காரங்களும் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இப்படியே போனா நாங்க தொழில் பண்ண முடியாதுன்னுதான் போராட்டம்

குப்பைத் தொட்டி மிரட்டல் ஆரம்பம்!

நடத்தினோம். போலீஸ்ல புகார் கொடுத்தும் இதுவரைக்கும் அவங்க மேல எஃப்.ஐ.ஆர். போடவில்லை' என்றார் மதுரை மாவட்ட பழைய இரும்பு, மரம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகன வியாபாரிகள் சங்கச் செயலாளர் சக்தி வடிவேல்.

புகார் பற்றி சக்திவிநாயகர் பாண்டியனிடம் கேட்டோம். 'நான் அப்படிப்பட்ட ஆள் கிடையா துப்பா. டிரான்ஸ்ஃபார்மர் பக்கத்துல குப்பைத் தொட்டி இருக்கிறதால, கதவைத் திறக்க...வைக்க முடியலைன்னு சொன்னாங்க. தீ பிடிக்கவும் வாய்ப்பு இருக்குங்கிறதால கொஞ்சம் தள்ளிவைங்கப்பான்னு நம்ம மாநகராட்சி ஆளுங்க கிட்டச் சொன்னேன். அவங்க ரொம்பத் தள்ளி வச்சிட்டாங்க போல. தி.மு.க-காரங்க லேசுப்பட்ட ஆட்களா? உடனே அரசியல் ஆக்கிட்டாங்க. திருட்டு லாரி உதிரிப் பாகங்களை விற்கிறவர்தான், இந்தக் கண்ணழகன். இடைத் தேர்தல் நடந்தப்ப மீனாட்சி பஜார்ல தி.மு.க. தேர்தல் காரியாலயம் போட்டது இவர் இடத்தில்தான். கவுன்சிலர்ங்கிற முறையில(?) ஏரியாவுக்குள்ள நான் போறது, வர்றது உண்டு. அது பிடிக்காம பொய்ப் புகார் பண்ணிட்டார் கண்ணழகன்' என்றார் கூலாக.

திலகர்திடல் போலீஸில் விசாரித்தோம். 'சக்தி விநாயகர் பாண்டியன் ஆட்கள் மாமூல் கேட்டது உண்மைதான். ஆனால், சிறு தொகையைத்தான் கேட்டதாகத் தெரிகிறது. கண்ணழகன் அதை மிகைப்படுத்தி புகார் கொடுத்து இருக்கிறார். இந்தப் பிரச்னையில் அரசியலும் இருப்பதால் விசாரித்துத் தான் நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்கள்.

'அ.தி.மு.க-காரர்கள் மிரட்டிச் சம்பாதிப்பதற்கு, மாநகராட்சியும் உடந்தையாக இருப்பது நியாயமா?' என்று கமிஷனர் (பொறுப்பு) சவுந்திரராஜனிடம் கேட்டோம். நேரடியாகப் பதில் சொல்லாமல் மழுப்பிய அவர், 'இந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க உத்தரவு போட்டிருக்கிறேன்' என்றார். 'தொடர்பு இருந்தால்?' என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்க விரும்பவில்லை.

மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த பலர் மீது புகார்கள் வந்தபடி இருக்கின்றன. 'அதிகாரம் கை மாறி இருக்கிறது... அடாவடித்தனம் தொடர்கிறது’ என்று புலம்புகிறார்கள் மதுரை மக்கள்!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து