Published:Updated:

`இப்பமே ஓட்டுக்குப் பணம் கொடுக்குறாங்க!'- அ.தி.மு.க-வினர் மீது மதுரை கலெக்டரிடம் 5 கட்சியினர் புகார்

`இப்பமே ஓட்டுக்குப் பணம் கொடுக்குறாங்க!'- அ.தி.மு.க-வினர் மீது மதுரை கலெக்டரிடம் 5 கட்சியினர் புகார்
`இப்பமே ஓட்டுக்குப் பணம் கொடுக்குறாங்க!'- அ.தி.மு.க-வினர் மீது மதுரை கலெக்டரிடம் 5 கட்சியினர் புகார்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே அ.தி.மு.க-வினர் லஞ்சம் கொடுப்பதற்காக வாக்காளர்களின் செல் நம்பர்களைப் பெற்றுவருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க,  அ.தி.மு.க-வினர் வாக்காளர்களின் செல்போன் எண்ணைப் பெற்றுவருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சி.பி.எம்., காங்கிரஸ், சி.பி.ஐ, ம.தி.மு.க,  ஜே.டி.யூ. சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.எம்., கட்சியைச் சார்ந்த திலகர் கூறுகையில், " தமிழ்நாடு முழுவதும் ஆளும்கட்சி அ.தி.மு.க-வினர் தேர்தலுக்காக எந்தக் கொள்கையோ சேவை பற்றியோ மக்களிடம் பேசாமல், குறுக்கு வழியில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்துவிடலாம் என முயன்றுவருகின்றனர். மக்களுக்கு சேவையோ,  நல்ல திட்டமோ கொண்டுவராத காரணத்தால், இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தலுக்கு முன்னரே முதல்கட்டமாக செல்போன் எண்களை வாக்காளர்களிடம் பெற்றுவருகிறது. நேரடியாக இவ்வாறு செயல்பட்டால், அனைவருக்கும் தெரிந்துவிடும் என பால் விற்பனையாளர்கள், தண்ணீர் கேன் போடுபவர்கள், கேபிள் டி.வி பணம் வசூல்செய்பவர்கள், இப்படியானவர்களை இதில் ஈடுபடுத்திவருகின்றனர். நாங்கள் வசிக்கும்  மதுரை செல்லூர் பகுதியில், தற்போது தீவிரமாக செல்போன் எண்களைப் பெற்றுவருகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்  அளிக்க உள்ளோம். போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிப்போம்'' என்று தெரிவித்தார்.