Published:Updated:

பா.ஜ.க - அ.தி.மு.க வெற்றிக் கூட்டணி - அருள்வாக்கு கொடுத்த மதுரை ஆதினம்!

பா.ஜ.க - அ.தி.மு.க  வெற்றிக் கூட்டணி - அருள்வாக்கு கொடுத்த மதுரை ஆதினம்!
பா.ஜ.க - அ.தி.மு.க வெற்றிக் கூட்டணி - அருள்வாக்கு கொடுத்த மதுரை ஆதினம்!

நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பி.ஜே.பி தலைமையிலான கூட்டணி என்றால் தமிழகத்தில் பி.ஜே.பி, அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றிபெறும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க - அ.தி.மு.க  வெற்றிக் கூட்டணி - அருள்வாக்கு கொடுத்த மதுரை ஆதினம்!

பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் இல.கணேசன் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய  கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வேண்டும் என  மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், "தமிழகத்தின் நலனுக்காக அன்றாடம் பாடுபட்டு இருக்கக்கூடிய தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் செயல் பாராட்டுக்குரியது. பி.ஜே.பி., அ.தி.மு.க ஆகிய வெற்றிக்கூட்டணியை பிரிக்க முடியாது.

பா.ஜ.க - அ.தி.மு.க  வெற்றிக் கூட்டணி - அருள்வாக்கு கொடுத்த மதுரை ஆதினம்!

நாடு நலம் பெற வேண்டும் என்றால் இந்திய மக்களையும்,  தமிழ்நாட்டு மக்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்வது என்னவென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி அணியில் உள்ள கூட்டணி கட்சிகளை மிகப்பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு உரிமையுடனும், அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த வெற்றிக்கூட்டணியில்  தான்  தே.மு.தி.க இணைய வேண்டும் என்பது ஆதீனத்தின் விருப்பம். அதே போல் ஜி.கே வாசனும் இவர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி எந்த மதத்திற்கும் விரோதமான கட்சியும்  அல்ல ஆட்சியும் அல்ல என்பதே உண்மை. கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி கூட்டணி தான் வெற்றி பெறும் இதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடி  தான் பதவி ஏற்பார். பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தான் சிறந்த தலைவர் என்று கூறுகிறார். அவர் கூறுவது போல் ராகுல் காந்தியை பாரதப் பிரதமர் ஆக்க முடியுமா?”என்று கேள்வி எழுப்பினார்.