Published:Updated:

குழந்தைகளை அலறவிடும் தொழிற்சாலை!

நடுங்கும் அனகாபுத்தூர்... அலட்சிய அரசு

குழந்தைகளை அலறவிடும் தொழிற்சாலை!

நடுங்கும் அனகாபுத்தூர்... அலட்சிய அரசு

Published:Updated:
##~##
குழந்தைகளை அலறவிடும் தொழிற்சாலை!

'காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் நகராட்சியின் குடியிருப்புப் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக ஒரு தோல் தொழிற்சாலை இயங்குகிறது. இயந்திரங்களின் இரைச்சலும் துர்நாற்றமும் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. நடவடிக்கை ப்ளீஸ்’ என்று  கேட்டுக்கொண்டது ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-42890005). 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குற்றம் சாட்டப்படும் தோல் தொழிற்சாலைக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுதாகரிடம் பேசினோம். ''எங்கள் வீட்டுக்கு அருகே, 'கிலிம் லெதர் மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற தொழிற்சாலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தத் தொழிற் சாலையில் சுமார் 200 பேர் வேலை பார்க்கிறார்கள். ஏராளமான இயந்திரங்களைக் கொண்டு இரவு பகலாக பலத்த இரைச்சலுடன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. குடியிருப்புப் பகுதிக்கு நடுவே எப்படி இந்த தொழிற்சாலையை நடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை.

தொடர்ந்து இரைச்சல், புகை, ரசாயனக் கழிவு காரணமாக எங்கள் பகுதி மக்கள் அடிக்கடி நோய்க்கு ஆளாகிறார்கள். குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.  ஃபேக்டரி இரைச்சல் காரணமாக வயதானவர்கள் தூக்கமின்றி தவித்து, ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்.  

குழந்தைகளை அலறவிடும் தொழிற்சாலை!

இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை. தகவல் அறியும் உரிமைச்

குழந்தைகளை அலறவிடும் தொழிற்சாலை!

சட்டத்தின் கீழ்  கேட்டபோதுதான், இந்தத் தொழிற் சாலையை குடியிருப்புப் பகுதியில் நடத்த எந்த அனுமதியையும் பெறவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இயந்திரங்கள் இயங்குவதால், எங்களுக்கு அடிக்கடி மின்சாரப் பிரச்னையும் ஏற்படுகிறது'' என்று வரிசையாக குற்றங்களை சுமத்தினார்.

அந்தத் தோல் தொழிற்சாலையில் வேலை செய்ப வரிடம் பேசினோம். அடையாளத்தை மறைத்துக் கொண்டு பேசியவர், ''இந்தத் தொழிற்சாலையில் பை, பர்ஸ் தயாரிக்குகிற வேலைகள் நடந்து வருகிறது. பெரிதாக 10 இயந்திரங்கள் இருக்குது. வெளியே ஃபேக்டரி நடக்குறது தெரியக்கூடாதுன்னு... ஆட்கள் வேலைக்கு வந்ததும் ஷட்டரை இழுத்து மூடிடு வாங்க. அதனால் மூச்சு முட்டும் புகை மூட்டத்தில்தான் நாங்க வேலை செய்யணும். வேற இடத்துக்கு மாத்துங்க... இங்கே வேலை செய்ய முடியலைன்னு சொல்லியும் கேட்க மாட்டேங் குறாங்க. வேற வழியில்லாம வேலை பார்க்கிறோம்...'' என்றார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத், ''இரவு 11 மணி ஆகிட்டா கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாது... ஃபேன் சுத்தாது. லைட் எரியாது. அதனால காத்துக்காக ஜன்னலைத் திறந்தா... துர்நாற்றம் மூச்சை அடைக்கும். அப்பப்போ ஏதோ வெடிக்குற மாதிரி பயங்கர சத்தம் வர்றதைக் கேட்டு குழந்தைகள் பயந்து நடுங்குறாங்க...'' என்கிறார் வினோத்.

''இந்த ஃபேக்டரியில் இருந்து புகை வருது... சத்தம் தாங்க முடிய லைன்னு போலீஸ்கிட்ட புகார் கொடுத்தோம். போலீஸ் வந்து பார்க்குற நேரம், வேலை செய்யாம நிறுத்தி வெச்சிடுறாங்க. போலீஸ்

குழந்தைகளை அலறவிடும் தொழிற்சாலை!

போனபிறகு வழக்கம்போல கம்பெனி நடக்குது. ஃபேக்டரி நடத்த லைசன்ஸ் வாங்கி இருக்கீங்களான்னு கேட்டா, 'இப்போ யாருதான் லைசன்ஸ் வாங்கி ஃபேக்டரி நடத்துறாங்க?’னு எகத்தாளமா கேட்குறாங்க. இந்தப் பிரச்னைக்கு எப்போ முடிவு வரும்னு தெரியலை. இந்த ஃபேக்டரி புகையால கேன்சர் வந்துடுமோன்னு பயமா இருக்கு'' என்று பதறுகிறார் பன்னீர்செல்வம்.

தொழிற்சாலை கட்ட டத்தின் பாதுகாவலர் அபுபக்கரிடம் பேசி னோம். ''பில்டிங் உரிமை யாளர் மகாலிங்கம் எட்டு வருடங்களுக்கு முன்னே இறந்துவிட்டார். இப்போது நான்தான் இந்த பில்டிங் பாதுகாவலரா இருக்கேன். பாழடைஞ்சு கிடந்ததை புதுப்பிச்சதும் ஃபேக்டரி நடத்த வாட கைக்கு விட்டேன். அவங்க ஃபேக்டரி நடத்த பஞ்சாயத்திடம் அனுமதி வாங்கலைன்னு இப்போதான் தெரிஞ்சது. அதனால காலி பண்ணச் சொல்லி இருக்கேன். விரைவில் காலி செய்து விடுவார்கள்'' என்றார்.

பிரச்னைக்குரிய தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் முரளி, ''நாங்கள் சட்டத்துக்குப் புறம்பாக எந்தத் தொழிலும் செய்யவில்லை. ஏராளமான பெண் களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் குடிசைத் தொழிலாகத்தான் இந்தத் தொழிற்சாலையை நடத்தி வருகிறோம். மாசுக் கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறோம். ஆனால், அனுமதி பெறுவதற்கு நிறைய விதிமுறைகள் இருப்பதால் லைசென்ஸ் கிடைப்பது தாமதமாகிறது. விரைவில் முறையான அனுமதி பெற்றுவிடுவோம். குடியிருப்பு வாசிகள் சங்கடப்படுவதால் வேறு இடத்துக்கு தொழிற்சாலையை மாற்றலாமா என்றும் யோசித்து வருகிறோம்'' என்றார்.

நகராட்சி கமிஷனர் ராஜேஸ்வரியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்'' என்று  சொன்னார்.

அனுமதி வாங்காமல் தொழிற்சாலை நடத்துவது உறுதியாகத் தெரிந்தபிறகும், அரசு தரப்பில் இத்தனை மௌனம் எதற்காகவோ?

- க.நாகப்பன், படங்கள்:   ப.சரவணகுமார்