Published:Updated:

அடுத்த குறி யாருக்குக்?

அதிர்ச்சியில் செங்கல்பட்டு

அடுத்த குறி யாருக்குக்?

அதிர்ச்சியில் செங்கல்பட்டு

Published:Updated:
##~##
அடுத்த குறி யாருக்குக்?

டுத்தடுத்து இரண்டு அரசியல் கொலைகளை சந்தித்த அதிர்ச்சியில் இருக்கிறது, செங்கல்பட்டு நகரம். தி.மு.க. நகரமன்றத் துணைத் தலைவர் ரவிப்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், செங்கல்பட்டு தே.மு.தி.க. கவுன்சிலர் சுரேஷ் தனது அலுவலகத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்டிருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செங்கல்பட்டு அருகே உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். ஜே.சி.கே. நகரில் ஓர் இடத்தை வாங்கி, வீட்டுக்கு அருகிலேயே அலுவலகத்தையும் அமைத்துக் கொண்டார். 'விமல் ரியல் எஸ்டேட்’, 'எஸ்.எஸ்.ஆர். பில்டிங் சப்ளையர்ஸ்’ போன்ற நிறுவனங்கள் மூலம் ரியல் எஸ்டேட், மணல் வியாபாரத்தை வெளிப்படையாகவும் கட்டப் பஞ்சாயத்து விவகாரத்தை திரைமறைவாகவும் நடத்திவந்தார். தே.மு.தி.க. கட்சிப் பணிகளும் அந்த அலுவலகத்தில்தான் நடக்கும்.

அடுத்த குறி யாருக்குக்?

''ரவிப்பிரகாஷ் கடந்த 6-ம் தேதி படுகொலை ஆனதும், தனியாக எங்கும் செல்லவேண்டாம். கட்சி அலுவகத்தில் தனியாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள் என்று சுரேஷ§க்கு எச்சரிக்கை செய்தோம். அதனால் மிகவும் பாதுகாப்புடன்தான் எப்போதும் இருந்தார். அதையும் மீறி கொலை நடந்துவிட்டது'' என்று வருத்தப்படுகிறார்கள், சுரேஷின் நண்பர்கள்.

சம்பவம் நடந்த 17-ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு டூர் போவதுதான் சுரேஷின் பிளான். அதற்காக அலுவலகத்தில் தயாராகிக் கொண்டிருந்த நேரம், 'செய்யூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்’ என்ற தகவல் வந்திருக்கிறது. உடனே பயணத்தை கேன்சல் செய்திருக்கிறார். டூர் கேன்சல் ஆனதும் நண்பர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிவிட, கார் டிரைவருக்காகத் தனியே காத்திருந்தார் சுரேஷ்.  யாருமே இல்லாத அந்த நேரத்துக்காகவே காத்திருந்தது போல, திபுதிபுவென உள்ளே நுழைந்த மர்மக் கும்பல் சுலபமாக சுரேஷை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிவிட்டது.

சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் தே.மு.தி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. முருகேசன் சம்பவ இடத்துக்கு வர, தொண்டர்களும் கூடி ஆவேசமானார்கள். 'கொலையாளியை உடனே கைது செய்யவேண்டும்’ என்று அடுத்த நாள் சுரேஷ் உடலுடன் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்தார்கள். அதனால் செங்கல்பட்டு நகரமே பரபரப்புக்கு உள்ளானது.

அடுத்த குறி யாருக்குக்?

கொலைக்கான காரணத்தை சுரேஷ§க்கு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டோம். ''படிக்கும் காலத்தில் இருந்தே சுரேஷ§ம் ரவிப் பிரகாஷ§ம் நெருங்கிய நண்பர்கள். சுரேஷின் ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு ரவிப்பிரகாஷின் உதவி தேவைப்பட்டதால், அவர்கள் நட்பு தொடர்ந் தது. 'குரங்கு’ குமாரை கொலை செய்தபின் ரவிப்பிரகாஷ§க்கு செங்கல்பட்டில் தங்குவதற்கு இடமில்லை. அந்த நேரத்தில அடைக்கலம் கொடுத்தவர் சுரேஷ். இவரது இடத்தில் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் வேலைகளைச் செய்து வந்தார் ரவிபிரகாஷ். இதனால் 'குரங்கு’ குமார் ஆதரவாளர்களுக்கு இருவரின் மீதும் எரிச்சல் அதிகமானது.

இந்த நிலையில் கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 'வெள்ளை’ அன்புவை மிரட்டுவதற்கும் ரவிப் பிரகாஷைப் பயன்படுத்திக் கொண்டார் சுரேஷ். இருவரின்

அடுத்த குறி யாருக்குக்?

நெருக்கமும் தங்களுக்கு எதிராக வளர்வதைத் தடுக்க 'குரங்கு’ குமார் ஆட்கள் சரியான சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைத்ததும் கொன்று விட்டார்கள்.

ரவிப்பிரகாஷ§ம் சுரேஷ§ம் கொலை செய்யப் பட்டிருக்கும் விதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இருவரின் தலையும் கொடூரமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 'குரங்கு’ குமார் எப்படிக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில்தான் இருவரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான் குமாரின் ஆதரவாளர்கள் மீது சந்தேகம் வருகிறது. சுமார் 60 பேர் அடங்கிய பெரிய நெட்வொர்க் இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அனைத்துக் கட்சிகளில் இருந்தும் சிலர் குமாரின் ஆதரவாளர்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளைச் செய்கிறார்கள்.

அதனால்தான் ரவிப்பிரகாஷைக் கொன்ற 'பட்டரைவாக்கம்’ சிவா உட்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே அடுத்த கொலையையும் குமார் ஆதரவாளர்களால் செய்ய முடிந் திருக்கிறது. இன்னும் சிலரும் இந்தக் கொலைப் பட்டியலில் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்'' என்று திகில் கிளப்பினார்கள்.

செங்கல்பட்டு எம்.எல்.ஏ. முருகேசனிடம் பேசினோம்.. ''கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ரவிப்பிரகாஷ் நட்பா அல்லது எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. பிரமுகர் காரணமா என்ற கோணத்தில் காவல் துறை விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று தொடர்ந்து கொலைகள் நடைபெறுவதால், செங்கல்பட்டு நகரமே பதற்றத்தில் இருக்கிறது'' என்றார்.

காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனிடம் பேசினோம். ''இந்தக் கொலை தொடர்பாக மூவரை கைது செய் துள்ளோம். சார்லஸ் உள்ளிட்ட மூவர் சரண் அடைந்துள்ளார்கள். சார்லஸ் நிலத்தை அபகரித்த விவகாரத்தில்தான் கொலை நடந்துள்ளது. இனி செங்கல்பட்டில் கொலை நடக்காத வண்ணம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

அடுத்து, 'குரங்கு’ குமார் கொலைக்கு உதவி புரிந்த 'நிற’ மனிதர்  கொல்லப்படுவார் என்று வதந்தி உலவுகிறது. இனியாவது உஷாராக இருக்கட்டும் காவல்துறை.

- பா.ஜெயவேல்